Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகா மீது முன்னர் மேற்கொள்ளப் பட்ட தற்கொலை த்தாக்குதலின் விபரங்களை வெள்யிட்டார் பொன்சேகா....

Featured Replies

பொசேகா வழங்கிய வாக்குமூலம்.......

இராணுவத்தளபதிக்கு வழங்கப்பட்டிருந்த குண்டுதுளைக்காத கார் பழுதடைந்திருந்தமையினால் பயண எதிர்பார்ப்பை கைவிட்டு சாதாரண வாகனத்திலேயே பயணித்தேன். எனது பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த முஸ்லிம் படைவீரர் ஒருவர் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்போது அவர் புலிகளின் உறுப்பினராக இணைந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் அவர் இராணுவ தலைமையகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருந்த வேளையில் அவன் உறவின ராக வந்த புலி உறுப்பினர்களே என்மீது தாக்குதல்களை நடத்துவதற்கு முயன்றனர்.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பகல் போசனத்திற்கு செல்லும் போது தற்கொலை குண்டுத்தா தாக்குதல் நடத்தி குண்டை வெடிக்கச் செய்தார். அன்று யுத்தத்தில் மூன்றாவது தடவையாக மரண வாயிலுக்கு சென்றேன். அத்தாக்குதலில் எனது பாதுகாப்பு வீரன் பலியானார். படுகாயமடைந்த சாரதி இன்னும் அங்கவீனராக இருக்கின்றார்.

மற்றுமொரு பாதுகாப்பு வீரன் வயிற்றில் காயமடைந்த நிலையில் இன்னும் மருந்து எடுத்துக் கொண்டிருக்கின்றார். அத்தாக்குதலில் சுற்றியிருந்த 10 பேர் பலியாகியிருந்தனர். வாகனத்திற்கு முன்னாலும் பின்புறமாகவும் பாதுகாப்பிற்கு வரும் மோட்டார் சைக்கிள் வீரர்கள் நால்வரில் மூன்று பேர் பலியாகிவிட்டனர்.

குண்டு வெடித்த மூன்று நிமிடங்களுக்கு என் வாகனத்திற்கு அருகில் யாருமே வருகைதரவில்லை. நான் பலியாகி விட்டதாகவே பலரும் நினைத்தனர். வயிற்றிலிருந்து வெளியே வந்திருந்த உறுப்புக்களை கையில் எடுத்துக்கொண்டு காரிலிருந்து கீழே இறங்கினேன். அப்போதுதான் பின்னால் இருந்த ஜீப் வண்டியிலிருந்த வீரன் என்னை நோக்கி ஓடோடி வந்தார்.

குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வாகனத்திற்கு அருகில் உறுப்புகளை கையில் ஏந்திக்கொண்டே அமர்ந்திருந்தேன். ஐந்து நிமிடங்களுக்கு பின்னரே அம்புலன்ஸ் வாகனம் வந்தது.

பொட்டு அம்மனின் தொலைபேசி அழைப்பு

அந்த தற்கொலை தாக்குதலின் பின்னர் இன்னுமொரு தற்கொலை குண்டுதாரி என்னை ஏற்றிச்செல்கின்ற அம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்துவதற்கு கொம்பனி வீதியிலுள்ள ரயில்வே கடவைக்கு அருகில் காத்திருந்ததாகவும். நான் மரணித்து விட்டதாக பொட்டு அம்மானிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டதாகவும் கைது செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த தாக்குதலில் எனக்கு உடல் முழுவதும் கடும் காயம் ஏற்பட்டது. இரத்தம் வடிவதை கண்டேன். எனினும் 30 நிமிடங்களு க்கு பின்னரே நான் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டேன். சில விநாடிகளில் நினைவிழந்துவிட்டேன்.

முழுநாடும் எனது உயிருக்காக மன்றாடியது. அந்த ஆசிர்வாதத்தினால் என்னால் வாழ முடிந்தது. என்னை வாழ வைப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சேவைப் பிரிவினர் பல சிரமங்களுக்கு கம்கொடுத்ததாக எனது மனைவியின் மூலமாக பின்னர் தெரிந்துகொண்டேன்.

வயிற்றின் வலது பக்கத்தில் பெரிய பையொன்று கட்டப்பட்டிருந்தது. நான்கு நாட்களுக்கு பின்னர் நினைவுக்கு திரும்பினேன். நினைவு திரும்பிய ஐந்து நிமிடங்களில் அதிகாரியும் நண்பருமான கோத்தபாய ராஜபக்ஷ எனது கட்டிலுக்கு அருகில் வந்து கட்டியணைத்து ““குண்டு துளைக்காத மேல ங்கியை எனக்கு கொடுத்த நீ உனக்கு போட் டுக் கொள்ள வில்லையே““ என்று அன்று கூறியமை எனக்கு இன்னுமே ஞாபகத்தில் இருக்கின்றது.

பின்னர் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் கட்டிலுக்கு அருகில் வந்தனர். அமெரிக்காவில் கல்வி பயின்ற பிள்ளைகளின் கல்வியை தொடர்வதற்கு ஜனாதிபதியின் நிதியத்திலிருந்து மாதாந்தம் 750 டொலர்களை புலமைப்பசிலாக வழங்குவதாக அன்று தெரிவித்த கோத்தபாய இரண்டு பிள்ளைகளுக்கும் அதனை பெற்றுக்கொடுத்தார்.

இவ்வாறான நிலையில் வயிற்றில் பெரும்பகுதி அகற்றப்பட்டுள்ளதாகவும் உள் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சில உறுப்புகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் பல இரும்புத் துகள்களை அகற்ற முடியாது என்றும் வைத்தியர்கள் என்னிடம் தெரிவித்தனர்.எனினும் இராணுவத்திலிருந்து நான் விலகிக் கொள்ளவில்லை.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1856:-3-&catid=1:latest-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.