Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லீம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சியா?

Featured Replies

அரசின் வெற்றி விழா வேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயி ஒருவர் பட்டப்பகலில் சுடப்பட்டமையானது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

முறுத்தானைப் பிரதேசத்தில் வைத்து தியாகராசா குகன் என்ற இளம் விவசாயி சுடப்பட்டு காயமடைந்தமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தமிழ் விவசாயி துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான மையானது பாரதூரமான விடயமாகும். இதன் பின்னணியை அரசாங்கம் உடனடியாகக் கண்டுபிடிக்க ஆவன செய்தாகவேண்டும். சுதந்திரமாக விவசாயத்தைச் செய்யக் கூடிய சூழல் உருவாகியுள்ள நிலையில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசக் கிரமமான முறுத்தானை உள்ளிட்ட பிரதேசத்தில் காணி அடாவடித்தனங்களைச் செய்து வருபவர்களின் செயலாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

அதேவேளை இவ்வாறான செயற்பாடுக ளில் ஈடுபட்டு வருபவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசாங்கம் முழு மையான பாதுகாப்பு வழங்கவேண்டும். பூரண அமைதி ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளமை குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே கொள்ள வேண்டுமா.

அத்துடன் அரசாங்கத்தின் வெற்றிவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்ற இவ் வேளையில் நடைபெற்றுள்ள இச் சம்பவம் இருக்கின்ற நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அபேய குணவர்த்தனவுடன் தொடர்பு கொண்டு மேற்படி சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் இதன்படி பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கிரான் பிரதேசத்தில் காணி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையை மையமாக வைத்து தீய சில சக்திகள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினராலும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இப்படியான சூழ்நிலையிலேயே குறித்த இளைஞர் கறுப்பு துணியை முகத்தில் அணிந்த நபர் ஒருவரால் வழி மறித்து சுடப்பட்டுள்ளார் என அக்கினிகுஞ்சின் மட்டு செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவமானது இப்பகுதி மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.