Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் போருக்கு தயார்: பெண் விடுதலை புலிகள் பகிரங்கஅறிவிபபு

Featured Replies

நாங்கள் சாக துணிந்து விட்டோம்; போருக்கு தயார் : பெண் விடுதலை புலிகள் பகிரங்க அறிவிப்பு

கிளிநொச்சி: இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் அரசுக்கு இடையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறினாலும், மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளன. பெண் விடுதலைப் புலிகள் பலர் போருக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ராணுவத்துடனான போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் பொருட்டு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் "மாவீரர் தின'த்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த நவம்பரில் நடந்த நினைவு தின கூட்டத்தில் உரையாற்றிய புலிகள் தலைவர் பிரபாகரன், "தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த பிரச்னையில் தீர்வு காணப்படா விட்டால் புத்தாண்டு (2006) முதல் போர் தொடங்கும்' என்று எச்சரித்தார். புத்தாண்டு தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் முறையான போர் அறிவிப்பு வெளியிடப்படா விட்டாலும் இரு தரப்பும் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த டிசம்பரில் மட்டும் 39 ராணுவ வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி பலியாயினர். இந்த தாக்குதல்களுக்கு புலிகளே காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில், கடந்த திங்களன்று திரிகோண மலையில் உள்ள பல்கலை கழகத்தில் ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக புலிகள் அமைப்பு கூறியது.

இரு தரப்பும் அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், "பகிரங்க தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக' புலிகள் அமைப்பில் உள்ள பெண்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். மாலதி என்ற 28 வயது பெண் விடுதலைப்புலி கூறும்போது, ""எனது சக தோழர்களின் மரணமே எனக்கு மிகுந்த மன உறுதியை தந்தது. கடந்த 10 வருடங்களாக இயக்கத்தில் உள்ள நான் மீண்டும் போர் புரிய தயாராக உள்ளேன். தமிழ் மக்களின் விடுதலை அமைதி வழியில் கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி தர வில்லை. எங்களது தலைவர் தனது மனதை மாற்றிக்கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்தால் உடனே நாங்கள் தயாராகி விடுவோம். சாகத் துணிந்து விட்டோம். போருக்கு தயாராக உள்ளோம்'' என மிகவும் ஆவேசமாக கூறினார்.

இதே போன்று மற்றொரு பெண் புலியான 32 வயது ஜெயந்தி, ""என்னுடைய பயிற்சி காலம் கடுமையாக இருந்தது. ஆனால், முதல் தாக்குதல் மிகவும் எளிதானது. வட கிழக்கு கடல் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 1996ம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தினேன். நாங்கள் நன்கு பயிற்சி பெற்று மிகவும் தயாராக உள்ளோம். வெற்றி ஒன்றே எங்களது இலக்கு. நாங்கள் அவர்கள் (இலங்கை ராணுவம்) மீது இரக்கமோ மரியாதையோ காட்ட மாட்டோம்'' என்றார்.

தங்களுக்கு எத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பது குறித்து தெரிவித்த பெண் புலிகள்,"அவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பணிகள்' குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 35 சதவீதம் பெண்கள் உள்ளனர். அவர்களது எண்ணிக்கை 18 முதல் 20 ஆயிரம் வரை இருக்கக் கூடும். அமைப்பில் புதிதாக சேரும் பெண்களுக்கு ஒரு வருட காலம் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். பல்வேறு வகையான ஏ.கே.47, மற்றும் துப்பாக்கிகள் உட்பட பல கருவிகளை இயக்கும் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் படை வீரர்களாக சேர்க்கப்பட்டு தாக்குதல் களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்

நன்றி : தின மலர்.http://www.dinamalar.com/2006jan06/imp6.asp

இணைப்புக்கு நன்றி ராஜா! 8)

35 சதவீத பெண்கள் தொகையே 18 யை தாண்டுது எண்டால் ஆண்களையும் தொகை????? ஆனா யாழ்ப்பாண ராணுவ தளபதி சொல்லுறார் புலிகளின் மொத்ததொகையே 7ஆயிரத்துக்கு உள்ளை எண்டு ........... அவரைப் பாத்து பரிதாபம்தான் பட முடியும்..............

  • தொடங்கியவர்

சில நண்பர்கள் தின மலர் நாளிழிதை தின மலம் என்று சொன்னார்கள். இப்போது தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிழ்தல்களில் தின மலர் மட்டும் தான் ஈழ செய்திகளுக்கு முக்கயதுவம் தருகிறது என்று சொல்ல ஆசை படுகிரேன். இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சில நண்பர்கள் சொன்ன அதே வார்த்தையை நானும் பாவிக்க மாட்டேன் ராஜா..

ஆனால் அவர்கள் கொண்ட கோவம் நியாயமானது.

ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!

தினமலர் .. என்ன தினமும் ஒவ்வொரு முகம் கொண்டு மலரும் மலரா?? 8)

  • கருத்துக்கள உறவுகள்

35 சதவீத பெண்கள் தொகையே 18 யை தாண்டுது எண்டால் ஆண்களையும் தொகை????? ஆனா யாழ்ப்பாண ராணுவ தளபதி சொல்லுறார் புலிகளின் மொத்ததொகையே 7ஆயிரத்துக்கு உள்ளை எண்டு ........... அவரைப் பாத்து பரிதாபம்தான் பட முடியும்..............

ஏனப்பா!! இப்ப யாழ்பாணத்தில் 5லட்சம் மக்களையும் புலிகள் எண்டு தானே பார்க்கினம். இராணுவத்தளபதி வேற கதை விடுகின்றாரோ!!

தெரியும் தானே. பயமாக இருந்தால் முந்தி பாட்டுப்பாடிக் கொண்டு போவினம். தளபதியாரும் அதைத் தான் செய்தவர்.

அதை விட முக்கியம் இதே ராஜாதிராஜா ..லக்கிலுக் கருத்துக்களுக்கு மிக நீண்ட ஆர்ப்பரிப்பு செய்த நாங்கள் ..இப்போ எதுக்கு அவர்கள் கருத்தை கொண்டு சவுண்ட் விடுறோம்?

நாங்களும் தினமலர் போல சந்தர்ப்பவாதமா? வேணாமே!

  • தொடங்கியவர்

சில நண்பர்கள் சொன்ன அதே வார்த்தையை நானும் பாவிக்க மாட்டேன் ராஜா..

ஆனால் அவர்கள் கொண்ட கோவம் நியாயமானது.

ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!

தினமலர் .. என்ன தினமும் ஒவ்வொரு முகம் கொண்டு மலரும் மலரா??

என்ன செய்வது !! தின மலருக்கு தனியான நிருபர் ஈழதிதில் இல்லை என்று நினைகிரேன். அவர்கள் அங்கு உள்ள வேறு பத்திரிக்கையின் உள்ளூர் நிருபரின் செய்தியயை தான் போட முடியும். தின மலர் மட்டுமல்ல அனித்து தமிழ் நாட்டின் தமிழ் நாளிழ்தின் ததை இதுதான். இப்போது தினமலர் தன்னுடய நிருபரை இலங்கை அனுப்பி இருப்பாதக கேள்விபட்டேன். இது உன்மையா என்று ல்க்கி லுக்கு தெரியும்.அவர் சொல்வார்.

இல்லை !! நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ஈழ நண்பர்கள் அந்த பத்த்ரிக்கை பற்றி தெரியாமல் சொல்லாம். அதில் தவறில்லை.ஆனால் ஒரு இந்திய நண்பரே தவறான செய்தியை சொன்னார். அதை பற்றி தான் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.

சில நண்பர்கள் சொன்ன அதே வார்த்தையை நானும் பாவிக்க மாட்டேன் ராஜா..

ஆனால் அவர்கள் கொண்ட கோவம் நியாயமானது.

ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!

தினமலர் .. என்ன தினமும் ஒவ்வொரு முகம் கொண்டு மலரும் மலரா??

என்ன செய்வது !! தின மலருக்கு தனியான நிருபர் ஈழதிதில் இல்லை என்று நினைகிரேன். அவர்கள் அங்கு உள்ள வேறு பத்திரிக்கையின் உள்ளூர் நிருபரின் செய்தியயை தான் போட முடியும். தின மலர் மட்டுமல்ல அனித்து தமிழ் நாட்டின் தமிழ் நாளிழ்தின் ததை இதுதான். இப்போது தினமலர் தன்னுடய நிருபரை இலங்கை அனுப்பி இருப்பாதக கேள்விபட்டேன். இது உன்மையா என்று ல்க்கி லுக்கு தெரியும்.அவர் சொல்வார்.

நண்பா இந்த கதை வேணாமே..

அத்தனை தமிழ் நாட்டு ஊடகங்களும் மௌனம் சாதிக்க...

பல வருடங்களுக்கு முன் ...........

இதே தினமலர்தான் எங்கள் தேசியதலைவர் கொல்லப்பட்டார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை திரும்ப திரும்ப சொன்னது என்றும் அறிந்து இருக்கிறோம்!

உங்கள் கருத்துக்கு மரியாதை தர தயாராய் உள்ளேன்! தினமலருக்கு அல்ல! புரிந்து கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட முக்கியம் இதே ராஜாதிராஜா ..லக்கிலுக் கருத்துக்களுக்கு மிக நீண்ட ஆர்ப்பரிப்பு செய்த நாங்கள் ..இப்போ எதுக்கு அவர்கள் கருத்தை கொண்டு சவுண்ட் விடுறோம்?

நாங்களும் தினமலர் போல சந்தர்ப்பவாதமா? வேணாமே!

நாங்கள் தெளிவாகத் தான் இருக்கின்றோம். எம் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி எவர் குறைவாகக் கதைத்தாலோ, அல்லது நடந்தாலோ, அவர்களுக்கு பதில் உண்டு.

லக்கிலுக்கோ, ராஜாதிராஜாவும் காயங்களைப் பற்றி கதைப்பதில்லை என்கின்றனர். அவ்வாறே நாங்களும் காயங்களைப் புரட்டப் போவதில்லை. அவ்வளவு தான்.

  • தொடங்கியவர்

நண்பா இந்த கதை வேணாமே..

அத்தனை தமிழ் நாட்டு ஊடகங்களும் மௌனம் சாதிக்க...

பல வருடங்களுக்கு முன் ...........

இதே தினமலர்தான் எங்கள் தேசியதலைவர் கொல்லப்பட்டார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை திரும்ப திரும்ப சொன்னது என்றும் அறிந்து இருக்கிறோம்!

ஆம் அது உன்மைதான். நான் சொல்வது இன்றைய நிலமை. நீங்கள் சொல்வது அன்றய நிலைமை. அதுதான் வித்யாசம். மாற்றம் இல்லாத்தது எது? தவறு என்றால் கண்டிபோம். நன்று என்றால் பார்ட்டுவோம்.

நானும் இன்றைய நிலையை பற்றி சொல்ல வந்துதான் அன்றைய நிலையை உதாரணம் காட்டினேன்.

ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!

அதுதான் இது!

இதில என்ன பெரிய மாற்றம் இருக்கு ராஜா?

நீங்களே சொல்லுங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச செய்தித் ஸ்தாபனமான "ரொய்ட்டர்" பார்வையில் தமிழீழ விடுதலைப் புலி பெண் போராளிகள்..

[வெள்ளிக்கிழமை, 6 சனவரி 2006, 05:07 ஈழம்] [ம.சேரமான்]

சர்வதேச செய்தித் தாபனமான "ரொய்ட்டர்", தமிழீழ விடுதலைப் புலி பெண் போராளிகள் பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

5 அடி உயரம் உள்ள மாலதி என்ற பெண் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக இணைந்தவர். தனது சக போராளிகளின் மரணம்தான் என்னை வலுப்படுத்தியிருக்கிறது என்கிறார் அவர். மீண்டும் போரிட தாம் தயார் என்றும் அவர் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையையும் பட்டியையும் அணிந்துள்ள அவரது இயக்கம் விடுதலைக்காக 20 ஆண்டுகளாக 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் வரை போராடி வந்துள்ளது.

28 வயதாகும் அந்தப் பெண்ணும் அவரது சக போராளிகளும் "நோர்வே அனுசரணையுடனான பேச்சுக்களில் அமைதி உருவாகும் என்று நம்பினோம். ஆனால் அது நடக்காது" என்கின்றனர்.

"அமைதி முயற்சிகளுடாக தமிழ் மக்களுக்கு நன்மையும் விடுதலையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்" என்று போராளிகளின் தலைமையகமான கிளிநொச்சியில் அவரைச் சந்தித்த போது மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் எமக்குத் தெரிவித்தார்.

அந்த நகரம் விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசைக் கொண்டது. நீதிமன்றங்களும், காவல்துறை தலைமையகமும், தங்களது சொந்த வங்கியும் அங்கே இயங்குகின்றன.

"எதுவுமே இந்த அமைதி முயற்சிகாலத்தில் நடக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளோம்" என்கிறார் மாலதி. "எமது தலைவர் தமது முடிவை மாற்றி எமக்கு புதிய உத்தரவிட்டால் நாம் தயாராக இருக்கிறோம்" என்றார்.

கடந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், 2006 ஆம் ஆண்டில் தமது விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் போராளிகளின் பகுதிகளைச் சுற்றிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு இராணுவம் மீது போராளிகள் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இராணுவம் வன்முறைகளில் ஈடுபடுவதால் அதற்கெதிராக மக்கள் போராடி புதிய யுத்தம் உருவாகிறது என்கிறார்கள். ஏற்கனவே 64 ஆயிரம் பேர் யுத்தத்தால் உயிரிழந்துள்ளனர்.

ரொய்ட்டருக்கு கடந்த புதன்கிழமை பேட்டியளித்த மாலதி மற்றும் 32 வயது ஜெயந்தி ஆகிய பெண் போராளிகள் இருவரும் முன்னணி போராளிகள். நாம் சந்தித்த 24 வயது நேசன் இதுவரை யுத்தத்துக்குச் சென்றதில்லை என்றார்.

ஆனால் முழு அளவிலான பயிற்சிகளை தாங்கள் பெற்றுள்ளோம் என்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளைக் கையாளுதல், ஆர்.பி.ஜி. ரொக்கட் தாக்குதல்கள், மோட்டார்த் தாக்குதல்களை மேற்கொள்ளவும் பயிற்சி பெற்றிருப்பதாக மூவரும் கூறினர்.

தமது முதலாவது களம் மிக எளிதானதாக இருந்தது என்கிறார் ஜெயந்தி. 1996 ஆம் ஆண்டு வடகிழக்கு கடலோரத்தை மீட்டெடுக்கும் சமரில் பங்கேற்றவர். நாங்கள் முழுத் தயாரிப்புக்களுடன் இருந்தோம். முழு பயிற்சிகளோடு இருந்தோம். அதனால் வெற்றி பெற்றோம். அதன் பின்னரான களங்கள் எளிதாக இருந்தன. திருப்தியும் மகிழ்ச்சியுமே அளித்தது எமக்கு" என்றார் ஜெயந்தி.

கடந்த காலங்களில் மரபு வழி மற்றும் தற்கொடைத் தாக்குதல்களுக்கு பெண் போராளிகளை பயன்படுத்தியுள்ளனர். புதிய யுத்தம் தொடங்கினால் அனைத்து வளங்களையும் பயன்படுத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எம்மிடம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான போராளிகளை உள்ளடக்கிய தனித் தனி அணிகள் உள்ளன என்றும் இவர்களில் 35 விழுக்காட்டினர் இராணுவ அதிகாரிகள் என்றும் கூறினர்.

நேசன் கூறுகையில், நாம் அச்சப்படவில்லை. தேவைப்பாட்டால் மரணிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.

"நான் சந்திக்கப் போகும் முதலாவது களம் கடினமாக இருக்கும் என்று கருதவில்லை. நான் முழுமையான தயாரிப்புகளோடு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறேன். என்னையும் எமது போராட்டத்தையும் பாதுகாக்கவும்தான். எமது தமிழ் மக்களின் விடுதலையும் உரிமையும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்கிற ஆத்ம பலத்தையும் நாம் பெற்றிருக்கிறோம் என்றார் நேசன்.

"நாம் சிறிலங்கா இராணுவத்தினர் மீது அனுதாபம் காட்டவில்லை. அவர்களை மதிக்கவும் இல்லை. அவர்கள் வன்மம் கொண்ட கொலைகாரர்கள். அவர்கள் கண்ணில் பார்ப்பவர்களையெல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று மதுபோதையில் இருக்கிற வெறியர்கள்" என்கின்றனர்.

எதிரியிடம் சிக்கி சித்திரவதைப்படாமல் இருக்கவும் சக போராளிகளுக்கு துன்பம் நேராமல் இருக்கவும் தங்கள் கழுத்துகளில் சயனைட் குப்பிகளை அவர்கள் தொங்கவிட்டுள்ளார்கள். எமக்குப் பேட்டியளித்த எவரும் திருமணமாகவில்லை. "யுத்தத்தில் வெல்லும் வரை எங்களுக்கு அதைப் பற்றி சிந்திக்க நேரமில்லை" என்கின்றனர்.

மதுவும் புகைப்பிடிக்கும் பழக்கமும் போராளிகளிடம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கிழக்குக் கடலோரத்தில் வசித்து வந்த தமது குடும்பத்தின் மீது கட்டுக்கடங்காத வன்முறைகளை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதால் தான் போராளியாக இணைந்தேன் என்கிறார் ஜெயந்தி. தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறைகளுக்காகத்தான் தானும் களத்திற்குப் போனதாக கூறுகிறார் மாலதி. இந்த வன்முறைகள் யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்திலும் கூட நீடிக்கிறது என்றார் மாலதி.

நாம் களத்துக்கு வந்ததிலிருந்து பல சக போராளிகளை நாம் இழந்துள்ளோம். அந்தப் போராளிகளின் இழப்புதான் எமக்கு உறுதியை ஏற்படுத்தி உள்ளது. எமது தமிழ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரை அளித்தவர்கள் அவர்கள். அதுதான் எங்களை மேலும் மேலும் போராடுவதற்கான சக்தியாக இருக்கிறது" என்கின்றனர் அவர்கள்.

http://www.puthinam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினமல ராய்டரில் வந்த செய்தியை தான் போட்டிருக்கிறது...

அட பாவி மக்கா ..

இதை பார்த்தா தினமலர் ரீல் விட்டுது? :shock:

ஆத்தா.......... இந்த அநியாயத்தை கேக்க யாரும் இல்லையா? :lol::lol:

  • தொடங்கியவர்

2 நாட்களுக்கு முன் யாழ் மக்கள் புலிகள் பகுதிக்கு பயணம் என்று ஒரு செய்தி படித்தேன். இதெ தினமலரில். அது உன்மையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.