Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூபா 25 கோடி தரகுபெற்று திறைசேரி தங்கத்தை விற்ற நாமல் இராஜபக்‌ஷ

Featured Replies

சிறிலங்கா அரசின் திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 17 தொன் தங்கம் சவூதி அரேபியாவைச் சேர்ந்த சேக் முகம்மத் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

.

இவ்வாறு ஒரு கிலோ தங்கம் 4"475"000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதன் மூலம் சிறிலங்கா ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவுக்கு 25 கோடி ரூபா தரகுப் பணம் கிடைத்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

இதன்படி ஒரு கிலோ தங்கத்துக்கு அமெரிக்க டாலர்கள் 150 (சராசரியாக 15,000 ரூபா) என்ற விகிதத்தில் 17 தொன் தங்கத்துக்குமாக 25 கோடி ரூபா (2"55"000"000) தரகுப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

.

சவூதி அரேபிய கோடீஸ்வரரான சேக் முகம்மத் என்பவர் இதற்கான பணத்தை HSBC வங்கியின் மூலம் செலுத்தியுள்ளார். இவருக்குரிய சுவிஸ் வங்கியின் ஊடாக இந்தப் பணம் HSBC வங்கிக்கு மாற்றப்பட்டுச் செலுத்தப்பட்டுள்ளது.

.

வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தில் பல கோடி ரூபா பெறுமதியான தமிழர்களின் நகைகளைக் கைப்பற்றிய சிறிலங்கா அரசு அதனை திறைசேரிப் பாதுகாப்பில் வைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

.

தங்க மகனாக மாறிய நாமல் இராஜபக்‌ஷ

விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், வடபகுதிகளில் வங்கிகளில் உரிமை கோரப்படாது இருந்த தங்கம் ஆகியவற்றை பதுக்கியது இராஜபக்‌ஷ குடும்பம். பின்னர் அதனை ஒத்த டம்மி தங்கத்தை அரச இருப்பில் வைக்க கொடுத்துவிட்டு உண்மையான தங்கத்தை ஐரோப்பிய வியாபாரிகளுக்கு விற்றனர். இதற்கான டீல் இனை மஹிந்த குடும்பத்திற்கு நெருக்கமான பிரித்தானியாவில் வதியும் ஒரு வெள்ளை இனத்தவரே மேற்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக மஹிந்தவின் புதல்வன் நாமல் இராஜபக்‌ஷவே பொறுப்பாக இருந்து வருகின்றார்.

.

தங்க மகனாக மாறிய நாமல் தொடர்ந்தும் தங்க வேட்டை நடாத்தி வருகின்றார். இதன் தொடர்ச்சிதான் திரைசேரியி தங்க விற்பனையில் தரகராக செயற்பட்டு பலகோடிகளை பெற்றுள்ளார் நாமல் இராஜபக்‌ஷ.

.

மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகளாக மஹிந்தவிற்கு ஆதரவானவர்களே உள்ளனர். திறைசேரியில் இருக்கும் தங்கத்தை பரிமாற்றம் செய்யும் போது எது நடந்தாலும் அவையெல்லாம் வெளியே வரப்போவதில்லை.

.

எதற்கும் திறைசேரியில் உள்ள தங்க இருப்பானது உண்மையான தங்கமா என்பதனை தென்னிலங்க மக்கள்தான் பரிசோதிக்கவேண்டும்.

ஈழ நாதம்

இது உண்மையோ இல்லையோ, முதலீட்டாளர்கள் சிங்கள நாணயத்தை பீதியில் விற்க முற்படுவர்.

உண்மையில் திறைசேரியில் உள்ளது போலித்தங்கம் என்றால் சிங்கள நாட்டின் நாணய பெறுமதி குறையும் சந்தர்ப்பம் அதிகம் உண்டு.

  • தொடங்கியவர்

இது உண்மையோ இல்லையோ, முதலீட்டாளர்கள் சிங்கள நாணயத்தை பீதியில் விற்க முற்படுவர்.

உண்மையில் திறைசேரியில் உள்ளது போலித்தங்கம் என்றால் சிங்கள நாட்டின் நாணய பெறுமதி குறையும் சந்தர்ப்பம் அதிகம் உண்டு.

லங்கா ஈ நியூஸ் சிங்களம் மற்றும் திவயின ஆகிய பத்திரிகைகளிலும் இது வந்துள்ளது. ஆகவே சிங்கள மக்களுக்குள் ஒரு சல சலப்பு வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.