Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வருக்கு நெடுமாறன் ஐயா வாழ்த்து : அனைத்து மா நிலங்களிலும் ஆதரவு தேடவும் ஆலோசனை

Featured Replies

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியமைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தலைவர் போர்க் குற்றவாளி என ஐ.நா.விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.

ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

இலங்கைத் தலைவரை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டெல்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும்.

எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

My link

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் : ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்

Posted Yesterday, 12:32 PM

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

இதனால் பழ. நெடுமாறன் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ராஜபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.

ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டெல்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும்.

எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

நக்கீரன்.

This post has been edited by தமிழ் அரசு: Yesterday, 12:32 PM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.