Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சிறிலங்கா அதிபரின் பதிலுடன் வந்து சந்திப்பேன்“ - ஜெயலலிதாவுக்கு சிவ்சங்கர் மேனன் வாக்குறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 01:50 GMT ] [ அ.எழிலரசன் ]

ஈழத்தமிழரின் அரசியல் மற்றும் புனர்வாழ்வு விவகாரங்கள் குறித்தும், தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்புக் குறித்தும் கொண்டுள்ள தமது கரிசனைகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

நேற்றுமாலை சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போதே அவர் இந்த விபரங்களை எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது கச்சதீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் நடத்தும் தாக்குதல்கள் குறித்தும், கடந்த காலங்களில் சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பின்பற்றப்படாது போனது குறித்தும் சிவ்சங்கர் மேனனுக்கு ஜெயலலிதா எடுத்துக் கூறினார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்காப் படைகளின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்- அதற்கு மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அத்துடன் கச்சதீவுப் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமையை மீளவும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள், முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளியாகின்ற நிலையில்- அது தொடர்பாக சரியான தகவல்களை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சிவ்சங்கர் மேனனிடம் கேட்டுக் கொண்டார்.

இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதுடன் , அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் சரியான விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும், அரசியல் ரீதியாக சிங்களவர்களுக்கு இணையான உரிமைகள் தமிழருக்கும் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் சிவ்சங்கர் மேனனிடம் தமிழ்நாடு முதல்வர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விபரங்களைத் தாம் சிறிலங்கா அதிபரிடம் எடுத்துக் கூறுவதாக ஜெயலலிதாவிடம் சிவசங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் புதுடெல்லி திரும்பும் வழியில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்து சிறிலங்கா அதிபருடனான சந்திப்புத் தொடர்பான விபரங்களை தெரியப்படுத்துவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

புதினப் பலகை.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு."

"நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு."

"அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு."

பிட்டடித்து (IFS) பாஸ் பண்ணவன் எல்லாம் தூது செல்கிறானாம்... ஒரே டாமாஸ்தான்.....

smiley-laughing024.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.