Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சிறார் தொழிலாளர்

Featured Replies

இலங்கையில் சிறார் தொழிலாளர்

இலங்கையின் சிறார்களில் 18 வீதமானோர் சிறார் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதாக சிறார் தொழிலாளர்கள் குறித்து ஆராய்ந்த வல்லுனர்கள் கூறுகிறார்கள். சர்வதேச மட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூஉன் 12 ஆம் திகதி சிறார் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு இலங்கை நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளரான எஸ். விஜயச்சந்திரன் அவர்கள், இலங்கையில் குறிப்பாக மலையகப் பகுதியில் பெருந்தோட்டங்களில் 29.1 வீதமான சிறார்கள் தொழிலாளர்களாக இருப்பதாகவும் கூறினார்.

பெருந்தோட்டங்களிலும், அதனையடுத்து கடந்த பல தசாப்தங்களாக போர் நடந்த வடக்கு கிழக்கிலும், தலைநகர் கொழும்பை அண்டிய குடிசைப் புறங்களிலும் சிறார் தொழிலார்கள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் சிறார் தொழிலாளர் முறைமையை ஒழிப்பதற்கான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்ற போதிலும் அவை பலவீனமாக இருப்பதாகவும் விஜயச்சந்திரன் கூறினார்.

இலங்கையில் சுமார் முப்பதினாயிரம் சிறார்கள் சுற்றுலாத்துறையில் பாலியல் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஒப்பீட்டளவில் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை விட இலங்கையில் சிறார் தொழிலாளர்கள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் கூறினார். இலங்கையில் காணப்படும் கட்டாயக் கல்வி முறைமை, பள்ளிக்கூடங்களின் ஆழமான வலையமைப்பு மற்றும் அதிக பெற்றோர்கள் கல்வியறிவு பெற்றிருத்தல் ஆகியவை இதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/06/110612_lankachildlabour.shtml

  • தொடங்கியவர்

United Nations Building

Rajdamnern Nok Avenue

P.O. Box 2-349

Bangkok 10200

Thailand

Tel: +66 2 288 1234

Fax: +66 2 288 3062

Email: bangkok@ilo.org

to: bangkok@ilo.org

cc: sg@un.org, ipec@ilo.org, naets-sekiguchi@ilo.org

Subject: Sri Lanka child labours and the policies

As someone who once escaped Sri Lanka as a teenager, I am thankful for your tireless work in improving child labour conditions. And yet I strongly feel that Sri Lanka who is a signatory of UN has not done enough to protect the children and their rights. It also continues to use them to its economic advantage:

1. 18% of the labours are children in Sri Lanka

2. About 30000 children are employed for sex tourism

The children are being hard hit in the areas of North and East, Tamileelam, where more than 80000 widows are the result of war with genocidal propositions. According to UN panel report more than 40000 were killed, including children. There are thousands of children who have no knowledge about their Fathers. Many children in these areas have been denied right to education. All these have contributed to child labour and child exploitation by the government of Sri Lanka.

And the true picture is being hidden as free media has been denied to areas of Tamileelam, Sri Lanka. And I urge ILO should do more study in these areas to complete the fact finding in full.

Sincerely,

  • தொடங்கியவர்

ஐ.நா.விடம் தொழிற்சங்க ஒன்றியங்கள் முறைப்பாடு

தொழிற்சங்கங்கள் மீது அரசாங்கம் விதிக்கும் கட்டுபாடுகள் மற்றும் தலையீடுகள் குறித்த விடயங்களடங்கிய முறைப்பாட்டுக் கடிதமொன்றை ஐ.நாவுக்கு ஆடைத்தொழிற்துறை மற்றும், சுகாதார துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அனுப்பியுள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கோ வேலை நிறுத்தம் செய்வதற்கோ உரிய அடிப்படை உரிமைகள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதுடன் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் செய்வதனைத் தடுக்கும் நடவடிக்கையானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) உடன்படிக்கைகள் கொள்கைகளை மீறுவதாக உள்ளதெனவும் தொழிற்சங்க அமைப்புகள் கூறியுள்ளன.

சுகாதார சேவை தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் துஷார இலங்ககோன், தொழிங்சங்க கூட்டுச்சம்மேளனத்தின் அன்டன் மார்க்கஸ், தாதியர் உத்தியோகஸ்தர் சங்கத்தின் சமன் ரத்னபிரிய ஆகியோர் எழுதிய இக்கடிதத்தில், தொழிற்சங்கங்களுக்கு எதிரான பாகுபாடுகளை நிறுத்த அரசாங்கத்தை வலியுறுத்துமாறு ஐ.எல்.ஓ.பணிப்பாளர் நாயகத்தை கோரியுள்ளனர்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/22974-2011-06-13-06-34-43.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.