Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாந்தோட்டையில் பணிகளை தொடங்கவுள்ள பதினொரு பெரும் முதலீட்டாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 12:59 GMT ] [ தா.அருணாசலம் ]

சிறிலங்காவின் தென் முனையிலுள்ள அம்பாந்தோட்டைப் பகுதியில், 2714 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட முதலீட்டு வலயத்தில், பாரிய 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை அமைச்சரவை யூலையில் வழங்கவிருக்கிறது.

இந்த நிலையில், அம்பாந்தோட்டை நகரத்தினை மையப்படுத்திய அரசாங்கத்தினால் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் இந்த அமைச்சரவை அங்கீகாரத்துடன் முழுவேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய உலகின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜேர்மனியைச் சேர்ந்த அவுடி [Audi] நிறுவனம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அண்மையில் பல மில்லியன் பெறுமதியான கார் பொருத்தும் தொழிற்சாலை ஒன்றை நிறுவவுள்ளது.

அரசாங்கத்தின் சுதந்திர வர்தக வலய கோட்பாட்டின் கீழ் இதே பிராந்தியத்தில் ரான்ஸ்மெக் [Transmec] என்ற நிறுவனம் தனது வாகன உற்பத்தித் தொழிலகம் ஒன்றை நிறுவவுள்ளது என சிறிலங்கா துறைமுகங்கள் அதிகாரசபையினது முகாமைத்துவப் பணிப்பாளர் கப்டன் நிகால் கெப்பிற்றிப்பொல [Nihal Keppitipola] கூறுகிறார்.

"குறித்த இந்தப் பிராந்தியத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்ற 27 வேண்டுகைகளிலிருந்து சாலப் பொருத்தமான 11 முதலீட்டாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது இந்த முதலீட்டாளர்களின் கேள்விப் பத்திரங்கள் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுக்குழுவின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த முதலீட்டாளர்களுக்கான இறுதி அனுமதி இந்த மாதம் அல்லது யூலை மாத இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என துறைமுக அதிகாரசபையினது மூத்த பொறியியலாளர் அஜில் கிவகீகம [Agil Hewageegama] கூறுகிறார்.

சிறிலங்காவினை 'ஆசியாவின் அதிசயம்' ஆக்குவதற்கான அரசாங்கத்தின் பொருளாதார முன்னெடுப்புக்களுக்கு துணைநிற்கும் வகையில் காத்திரமான பொருளாதாரப் பங்களிப்பினைச் செய்யக்கூடிய முதலீட்டாளர்களென இந்தப் பாரிய 11 முதலீட்டாளர்களும் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் இந்த முதலீட்டாளர்களின் பணி ஆரம்பிக்கும் என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார். ஆரம்பத்தில் விண்ணப்பித்த 63 முதலீட்டாளர்களிலிருந்து இந்தப் 11 முதலீட்டாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.

சிறிலங்காவின் எதிர்காலப் பொருளாதார நம்பிக்கையின் முதன்மையான அம்சமாகத் திகழ்கின்ற அம்பாந்தோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்படவிருக்கின்ற இந்த முதலீட்டுத் திட்டத்திற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி உள்ளீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக துறைமுக அதிகாரசபை கூறுகிறது.

அவுடி நிறுவனம் திட்டமிட்டவாறு தனது கார் உற்பத்தி மையத்தினை அம்பாந்தோட்டையில் நிறுவும் என சிறிலங்காவில் அவுடி நிறுவனத்தின் முகவராண்மைபெற்ற நிறுவனமான சினொக் நிறுவனத்தின் பொது முகாமையாளர் உறுதிப்படுத்துகிறார்.

தனது இந்தத் தொழிலகத்தினை ஆரம்பிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் ஒரு மாத காலத்தின் பின்னர் அவுடி கொண்டுவரவுள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

"ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜபெல் அலி துறைமுகத்தின் சுதந்திர வர்த்தக கோட்பாட்டுக்கு அமைய அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினை அண்டிய 2500 தொடக்கம் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள இந்தப் பல பில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் திட்டம் ஒரு மாத காலத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது" என சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் கூறுகிறார்.

துறைமுகத்தினை அண்டி அமைக்கப்படும் இந்தச் சுதந்திர வர்த்தக வலயத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள நிறுவனங்கள் அதற்கான மூலப்பொருட்களை அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் ஊடாகக் கொண்டுவரும் என்றும் இந்த நிலையில் சிறிலங்காவினது பொருளாதார நம்பிக்கையில் இந்தத் துறைமுகம் முதன்மையான பங்கினை வகிக்கும் என்றும் கப்படன் கெப்பிற்றிப்பொல கூறுகிறார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினை அண்டைய சுதந்திர வர்த்தக வலயக் கோட்பாட்டில் தாங்களும் பங்கெடுப்பதற்குப் பல நாடுகளையும் சேர்ந்த முதலீட்டார்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார் துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவப் பணிப்பாளர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜபெல் அலி என்ற துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சுதந்திர வர்த்தக வலயக் கோட்பாடுகளை அடியொற்றியே தாங்களும் இதுபோன்றதொரு திட்டத்தினை முன்னெடுப்பதாகவும் அரபு இராச்சியத்தின் குறிப்பிட்ட இந்தத் துறைமுகத்தினது சுதந்திர வர்த்தக வலயமானது நாட்டினது பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது என்றும் இவர் தொடர்ந்து கூறினார்.

"துறைமுகத்தினை அண்டிய இந்த சுதந்திர வர்த்தக வலயப்பகுதியில் உற்பத்திசெய்யப்படும் அல்லது பொருத்தப்படும் உற்பத்திப்பொருட்கள் வெளிநாட்டுச் சந்தைகளுக்கே ஏற்றுமதி செய்யப்படவேண்டும். உள்ளூர் சந்தைகளுக்கு இந்த உற்பத்தி கொண்டுவரப்படுமெனில் பொருத்தமான வரிகள் அரசாங்கத்தினால் அறவிடப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அண்டிய சுதந்திர வர்த்தக வலயப் பகுதியில் இரண்டு வாகன உற்பத்தி தொழிற்சாலைகளும், சீமெந்து அரைக்கும் மற்றும் பொதிசெய்யும் தொழிலகங்களும், ஒரு சீனி உற்பத்தி ஆலையும், மூன்று இரசாயனத் தொழிற்சாலைகளும் இதற்குள் அமையவுள்ளன. பாகிஸ்தான், இந்தியா, சுவிற்சலாந்து மற்றும் ஏனைய சில நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களே இவை.

செய்தி வழிமூலம்: The Bottom Line.lk

புதினப் பலகை.http://www.puthinappalakai.com/view.php?20110613104073

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.