Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபத்பாந்தவன்…!

Featured Replies

ஆபத்பாந்தவன்…!

‘எழும்போது வருபவன் எல்லாம் விழும்போது வரமாட்டான்’. இதிகாசத்தில் கடவுளை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் கூவி அழைத்து குறிப்பிட்டு இருக்கிறார்கள்.கடவுளை ஆயிரம் பெயர்களில்(நாமம்) அழைக்கும் சகஸ்ரநாமங்களும், இதைவிட நூற்றி எட்டு பெயர்களில் அழைக்கும் அஸ்டோத்திரமும் உண்டு. இவை இரண்டிலும் மிகவும் அவசரமான மிகமிக முக்கியமான, இனி முடியாது என்ற பொழுதுகளில் அழைக்கப்படுவதற்கு குறிப்பிடப்படும் பெயர் ” ஆபத்பாந்தவன்’ “என்பதாகும்.

அரசியலிலும் சிலவேளைகளில் ஆபத்பாந்தவனாக ஒருவரோ, பலரோ ஓடிவந்து உதவிடும் பொழுதுகள் நிறையவே காணப்படுகின்றன. நாடுகளுக்கும் அவ்வாறேதான். கழுத்து இறுகி விழி பிதுங்கி மூச்சு முட்டும் பொழுதில் சில நாடுகள் ஆபத்பாந்தவனாக அநாதரட்சகனாக கைகொடுத்துவிட்ட வரலாற்று சான்றுகள் வரலாற்றின் பக்கங்களில் நிறையவே காணப்படுகின்றன.

சிங்கள தேசத்தின் வெற்றியை முற்று முழுதான சந்தோசத்தில் கொண்டாட விடாதவாறு அதன் மீதான கழுத்தை இறுக்கும் போர்க் குற்றச்சாட்டுகள் தடுத்து வருகின்றன ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மீதான விவாதங்களும், அதனை நடைமுறைப்படுத்துமாறு சிங்களத்தின் மீதான வற்புறுத்தல்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கொழும்பில் நடாத்தப்படும் போர் வெற்றி மாகாநாட்டை விட போர் வெற்றிக்காக சிங்களம் நடாத்திய மானிடத்துக்கு எதிரான குற்றக்களை எதிரொலிக்கும் மாநாடுகளே அதிக அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. ஜெனீவாவிலும், ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் நடைபெற்றுவரும் மாநாடுகள் சிங்களத்தின் போர் வெற்றி ‘ஜெயவேவா’ குரலை ஈனக்குரலில் முனக வைத்துவிட்டது.

இப்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் 30.05.2011 திங்கட்கிழமை உரையாற்றிய நீதிக்கு புறம்பான படுகொலைகள் விவகாரங்களுக்கான பிரதிநிதி (UN special investigator into Extrajudicial Killings ,Cristof Hayns ) கிறிஸ்தொப் கெயின்ஸ் சிங்கள இராணுவத்தினர் மேற்கொண்ட நீதிக்கு மாறான படுகொலைகள் சம்பந்தமான காணொளிகள் உண்மையானவையே என்று ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளதானது சிங்கள தேசத்து ஆட்சியாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சிச் செய்தியாகும்.சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கண்துடைப்பு விசாரணைக் குழுவான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு இதே காணொளியின் உண்மைத் தன்மையை பற்றி மொரட்டுவா பல்கலைக்கழக நிபுணர் ஒருவரிடம் சாட்சியமாக கேட்டிருந்ததும், அதனை அவர் மூடப்பட்ட அறைக்குள்ளேயே தெரிவித்து இருந்ததுமான நாடகங்களை எல்லாம் ஒன்றுமில்லாமலே செய்துவிட்டது ஐநா நிபுணரான கிறிஸ்தோப் கெயின்ஸ்ன் ஆதார உறுதிப்படுத்தல் உரை.

இன்னுமொரு பக்கத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்குள் தமிழர்களின் மீதான இனப்படுகொலை சம்பந்தமான கூட்டத்தொடர் ஐரோப்பியபாராளுமன்ற முற்போக்கு உறுப்பின்ட்களாலும், அனைத்துலக மக்கள் அவைகளாலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்துவருகின்றது. மற்றுமொரு திசையில் புதியபுதிய ஆதாரங்களை வெளியிடும் திகதிகளை பிரபல தொலைக்காட்சிகள் அறிவித்தவண்ணமே இருக்கின்றன . இவை எல்லாம் சிறீலங்கா தேசத்துக்கு மிகுந்த இக்கட்டான நிலையையும், ஏதாவது ஒன்றைத்தன்னும் நிறைவேற்றாவிட்டால் இவற்றிலிருந்து தப்பிப்பது கடினம் என்ற அபாயத்ததையுமே தோற்றுவித்து வருகின்றது.

இத்தகைய சர்வதேச நெருக்கடிகளுக்கெனறே சிங்களம் காலகாலமாக நம்பி இருப்பது ரஸ்யாவையும், சீனாவையுமே ஆகும். மேற்குலகு திரைமறைவில் ஆயிரம் ஊதவிகளை செய்தாலும் மனித உரிமை, போர்க் குற்றம், இனப்படுகொலை போன்ற பாரிய குற்றச்சாட்டுகள் வரும்போது சிங்கள தேசத்தை மிக இலகுவாக கைவிட்டு விட்டு நீதி, தண்டனை அது இது என்று மாற்றுவடிவம் எடுப்பர் என்பது மகிந்தவுக்கும் அவரின் கொலைக்கூட்டத்துக்கும் நன்குதெரியும்.

மேற்குலகுக்கு எல்லா விதத்திலும் எதிர்போன்ற வடிவம் எடுப்பது ரஸ்யாவும், சீனாவும் என்பதால் அவர்களின் உதவி இதில் கிடைக்கலாம்தான். ஆனாலும் கடந்தகால உலக வரலாறு சிங்களமும் நன்கு அறிந்த ஒன்றுதான். ரஸ்யாவும், சீனாவும் ஐநா சபையாகட்டும் வேறு எந்த சர்வதேச சபையாகட்டும் குறிப்பிட்ட எந்த விடயத்திலும் ஆரம்பத்தில் காட்டும் எதிர்ப்பை அதே வேகத்துடன் தொடர்வதில்லை என்பதே கடந்த ஐம்பது ஆண்டுகால ஐநா வரலாறு. மிகமிகஅண்மைய உதாரணமாக லிபியாமீது நேட்டோ படைகள் தாக்குதல் நடாத்த ஆரம்பித்தபோது லிபியாவின் நீண்டகால நண்பனான ரஸ்யா அதனை கடுமையாக எதிர்த்தது.

இறைமைஉள்ள லிபியநாட்டின் மீது தாக்குதல் நடாத்த நேட்டோ படைகளுக்கு உரிமை இல்லை என்றும் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் மார்ச்19ம்திகதி கூறிய ருஸ்ய அதிபர் டிமிற்றி மெட்வேடவ் ஏறத்தாழ 40 நாட்களுக்குள் முழுதாக 180 பாகை திரும்பி குத்துக்கரணம் அடித்து மேமாதம் 28ம்திகதி ‘கடாபி பதவியை விட்டு விலக வேண்டும்’ என்றும் லிபியவுக்கான அதிபர் பொறுப்புக்கான அனைத்து தார்ப்பரியத்தையும் கடாபி இழந்து விட்டதாகவும், அவருக்கு அடைக்கலம்கூட ரஸ்ய தராது என்றும் கூறியது ரஸ்யா எவ்வளவுதூரம் இன்னுமொரு நாட்டுக்காக தனது பொருளாதார நலன்களையும், மேற்குலகுடன் ஆன தனது ஒட்டுறவை விடக்கூடியது என்பதை சிங்களத்துக்கு உணர்த்தியிருக்கும்.

சீனாவுக்கும் இத்தகைய குத்துக்கரண கைவிடுதல்கள் ஒன்றும் புதியதல்ல. தனது இருப்புக்காகவும், தனது நலனுக்காகவும் அவர்கள் சிங்களம் போன்ற சிறு தேசங்களை எப்போதும் கட்டி அழுது கொண்டிருக்க மாட்டார்கள்.

இதே ரஸ்யாவினதும், சீனாவினதும் தத்துப்பிள்ளையான யுகோஸ்லவிய அதிபர் மிலேசவிச்சை இவர்கள் இருவரும் எப்படி கைவிட்டு இறுதி நேரத்தில் ஒதுங்கி நின்றார்கள் என்பதும் சிறீலங்காவுக்கு தெரிந்திருக்கும். மிலெசெவிச் மீதான நேட்டோ தாக்குதல் ஆரம்பமான மார்ச் 1999ல் கடுமையாக எதிர்த்த சீனாவும், ரஸ்யாவும் 70நாட்கள்கூட தங்கள் எதிர்ப்பை தொடர முடியாமல் மிலேசவிச்சை கைவிட்டு யூன்3 1999ல் அவரை சரணடையும்படி கோரியதும், யூகோஸ்லாவிய தலைநகரில் இருந்த சீனாதூதரகம் மீதுகூட நேட்டோ விமானங்கள் தாக்கி 3தூதரக அதிகாரிகள் பலியானபோது கூட சீனா வெறுமனே கண்டனம் தெரிவித்து ஒதுங்கிக்கொண்டதும் சீனா எந்த விடயத்திலும் தொடர் எதிர்ப்பு காட்டியது இல்லை என்ற யதார்த்தத்தை அவர்களின் நட்புநாடுகளுக்கு உணர்த்தி இருக்கும்.

இப்போது சிங்களம் தேடிக்கொண்டிருப்பது ஒரு ஆபத்பாந்தவனை. மிகமூர்க்கமாக சர்வதேசத்துடன் சிங்களத்துக்காக வாதிடக்கூடிய ஒரு அநாதரட்சகனையே சிங்களதேசம் நாடிநிற்கிறது. அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே ஒரு ஆதரவுக்குரல் எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேர்ந்திருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்து! அமெரிக்காவின் செல்லப்பிள்ளையிடமிருந்து.! இஸ்ரேலிடம் இருந்து.!

நிபுணர் குழுவின் பரிந்துரைகளை எப்படி மழுங்கடிப்பது எப்படி நீர்த்துப்போக செய்வது என்பதில் இஸ்ரேலின் அனுபவங்கள் சிறீலங்காவுக்கு உதவிகரமாக தற்காலிகமாக இருக்கலாம். ஐநாவின் வரலாற்றிலேயே அதிகமான கண்டனங்களும், தீர்மானங்களும் இஸ்ரேலுக்கு எதிராகவே இருந்திருக்கின்றன.

ஏறத்தாள 131 தீர்மானங்கள இஸ்ரேல் சம்பந்தமாக ஐநா வில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து எப்படி தப்பியது என்றும் அவற்றை எப்படி தவிர்த்தது என்றும் அவர்களின் பாடங்களை சிங்களம் கற்றுக்கொள்ள முற்படலாம்.

அண்மையில்கூட 2008ல் காசா மீது நடாத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டதாக ஐ.நாவின் றிச்சாட் கோல்ட்ஸ்ரோன் அறிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் இஸ்ரேல் எப்படி தவிர்த்துவருகின்றது என்ற வழிமுறைகள் நிச்சயம் சிங்களத்துக்கு பொருந்தாது. ஏனென்றால் இஸ்ரேலுக்கு எதிரான மோசமான தீர்மானங்களை ‘வீட்டோ’ முறையால் வலு இழக்கச்செய்ய ஒரு அமெரிக்கா இருப்பதுபோல இப்போது சிங்களத்து யாரும் இல்லை. ஆனாலும் சிங்களதேசம் ஒரு ஆபத்பாந்தவனை தேடிக்கொண்டேஇருக்கிறது.

‘எழும்போது வருபவன் எல்லாம் விழும்போது வரமாட்டான்’.

- ச.ச.முத்து

http://www.alaikal.com/news/?p=73796#more-73796

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.