Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கில் புனரமைப்புப் பணிகள் தாமதம் அதிகாரிகளைச் சாடினார் ஆளுநர் சந்திரசிறி, பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-06-15 09:13:03]

வலி. வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமடைவது தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அதிகாரிகளை கடுமையாகச்சாடினார்.தாமதத்துக்கான சரியான காரணம் பொருத்தமான பதிலைக்கூற முடியாது அதிகாரிகள் திக்குமுக்காடினர். அவர்கள் தடுமாற்றத்துடன் பதிலளித்தனர்.

வலி. வடக்கில் மக்கள் மீளக்குடியமர அனுமதிகக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் வலி.வடக்கில் நேற்று இடம்பெற்றன. இந்த நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தெல்லிப் பழை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் எஸ்.முரளிதரன் மற்றும் திணைக் களத் தலைவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின் போதே ஆளுநர் இவ்வாறு கடுமையாகச்சாடினார்.

அங்கு அளுநர் தெரிவித்தவை வருமாறு:

வலி. வடக்கின் பல்வேறு புனரமைப்பு வேலைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசு பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளது. இருப்பினும் புனரமைப்பு பணிகள் முழுமை யாக இந்தப் பிரதேசத்தில் இடம்பெறவில்லை. எனவே தாமதமடையாது அரச திணைக்களத் தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் உடனடியாக வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இன்றிலிருந்து ஒருவாரகாலத்துக்குள் சகல வேலைத்திட்டங்களும் ஆரம்பித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் ஒப்பந்தங்கள் இரத்துச்செய்யப்படும் என்றார் ஆளுநர். அத்துடன் இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதில் ஏதாவது தடைகள் இருக்குமானால் அவற்றை தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சகல திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கேட்கப்பட்டது. ஆளுநரின் கடுமையான காரமான கேள்விகளுக்கு அதிகாரிகள் தடுமாற்றத்துடன் பதிலளித்தனர்.

மின்சாரவிநியோகம் மக்களுக்கு தேவையாக இருப்பதால் ஒருவாரத்தினுள் அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்தக் கல்ந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம், தெல்லிப்பழை பிரதேச செயலர் எஸ். முரளிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் பழை வீமன்காமம் மகாவித்தியாலயத்தின் புனரமைப்பு வேலைகளுக்கான பெயர் பலகையை ஆளுநரும், அமைச்சரும் திரைநீக்கம் செய்யது வைத்தனர். தொடர்ந்து பிரதேச மக்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வுகளினைத் தொடர்ந்து மாவிட்டபுரம் அரசடி வீதியின் புனரமைப்பையும் இருவரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.கலந்துரையாடலில் முடிவுற்றதாக மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்ட்ட வேலைத்திட்டங்களை அமைச்சர், ஆளுநர், அரச அதிபர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து வித்தகபுரத்தில் 1.3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட இருக்கும் கிராம சேவையாளர் அலுவலகம், சமுர்த்தி அலுவலகம், பொதுச்சுகாதார பரிசோதகர் அலுவலகம் என்பன இணைந்த கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

பின்னர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாவைக்கலட்டி கிராமத்து மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். இறுதியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்குச் சென்று 15 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைத்திட்டத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=44882&category=TamilNews&language=tamil

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.