Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தை இலங்கை அரசாங்கம் பரிசோதிக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'

[Wednesday, 2011-06-15 16:26:24]

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பிய 'இலங்கையின் கொலைக்களம்'எனத் தலைப்பிடப்பட்ட ஆவணப்படத்தை இலங்கை அரசாங்கம் பரிசோதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை நாம் மிகக் கவனமாக பரிசோதிப்போம். இதற்கு எமது சொந்த தடவியல் நிபுணர்களும் வெளிநாட்டு நிபுணர்களும் உள்ளனர். அதை பரிசோதித்தபின்னர் நாம் பதிலளிப்போம் என அரசாங்கப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.

அரசாங்கம் இதற்கு எப்படியான பதிலை அளிக்கும் என இப்போது கூறுவது காலத்திற்கு முந்திய செயற்பாடாக அமையும் எனவும் அவர் கூறினார்.

2009 ஆம் ஆண்டிலும் சனல் 4 அலைவரிசை இவ்வாறான வீடியோவொன்றை ஒளிபரப்பியதாகவும் அது போலியானது என நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த வீடியோ போலியானது என தான் ஏற்கெனவே நிரூபித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

அத்துடன் இந்த ஆவணப்படத்தை உள்ளூர் மக்கள் பார்த்தாலும் அது இராணுவத்தின் மனவுறுதியையோ மதிப்பையோ பாதிக்காது.ஏனெனில் அந்த படம் போலியானது என முடிவுசெய்யப்பட்டதொன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக நிச்சயமாக அது இலங்கை மீதான தவறான பார்வையை ஏற்படுத்தும். ஆனாலும் இலங்கைப் படைகள் உலகின் மிக ஒழுக்கமான படைகளில் ஒன்றென சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=44908&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சிறிலங்காவிடம் அதற்கான பதில் இல்லை... எனவே கால இழுத்தடிப்பு என்ற நாடகத்தை அரங்கேற்ற முயல்கின்றது. இது பற்றிய ஆரய்வு என்பது வரையறையற்றது. சூடு ஆறும்போது அதை அப்படியே அமுக்க நினைக்கின்றது. சிறிலங்காவின் பதிலுக்காக என்று ஐநாயோ, அல்லது வேறு யாராவது சொன்னால், அது எங்களை அவர்களும் சேர்ந்து ஏமாற்ற முயல்கின்றார்கள் என்பே அர்த்தமாகும்.

எனவே சிறிலங்கா அரசின் பதிலுக்காகக் காத்திருக்காமல், தொடர்ச்சியாக இது பற்றிய அழுத்தங்களைக் கொடுப்பதும், நீதிக்காக நடந்து கொள்வதுமே அவசியமாகும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.