Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில்

Featured Replies

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகள் திறப்பு

திருவனந்தபுரம், ஜுன் 27 (டிஎன்எஸ்) திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் 6 பாதாள அறைகளில் 4 அறைகள் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இருவர் முன்னிலையில் இன்று (ஜுன் 27) காலை திறக்கப்பட்டது.

இந்த அறைகளில் விலைமதிப்பற்ற தங்க நகைகளும், பழமைவாய்ந்த அரிய பொருட்களும் இருப்பதாக பலரும் நம்புகின்றனர்.

பல ஆண்டுகளாக இந்த அறைகள் பூட்டிக் கிடக்கின்றன. சமீபத்தில் தனியார் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த அறைகளைத் திறக்க உத்தரவிட்டது.

இன்று காலை அந்த அறைகள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. எனினும் ஊடகத்தினர் அப்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. அறைகளை சோதனை செய்த பின்னர் உச்சநீதிமன்றத்திடம் மட்டுமே அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன் ஆகியோரை கண்காணிப்பாளர்களாக உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது.

கூடுதல் தலைமைச் செயலர் ஜெயக்குமார், கோயிலின் செயல் அதிகாரி ஹரிக்குமார், மனுதாரர் சுந்தரராஜன் மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த பிரதிநிதி மற்றும் திருவாங்கூர் ராஜா மார்த்தாண்டவர்மாவின் இரு பிரதிநிதிகள் ஆகியோர் பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகள் திறக்கப்படும்போது உடன் இருந்தனர். (டிஎன்எஸ்)

http://www.aaraamthinai.com/news/newsitem.aspx?NEWSID=00d253a0-8bc0-4cc5-a5c7-6eab1692327a&CATEGORYNAME=TNATL

  • தொடங்கியவர்

Kerala temple treasure could be worth 50K crore

Kerala has stumbled upon a treasure trove in the underground chambers of the centuries-old Sree Padmanabhaswamy Temple here, where a Supreme Court appointed panel prepared the inventory of the priceless heap of precious metals.

The value of articles stocked in the vaults of the temple, managed by the royal family of the erstwhile Travancore princely state, would run into thousands of crores of rupees. Unofficial sources associated with the ongoing examination of the temple cellars pegged the jackpot at Rs 50,000 crore.

According to noted historian Dr M G S Narayanan, Padmanabhaswamy is one of the Vaishnava temples in the country and dates back to 9th Century. Hence, the vaults would be containing several centuries old precious objects.

The temple has six vaults and two of them had not been opened for the past one-and-a-half century. A major chunk of the estimated treasure belonged to the cellar, coded as A. The inventory of another chamber B is not over. The inventory thus far included gold coins, thousands of gold chains, precious stones including emerald, gems, diamonds, crowns and royal ornaments. Besides, coins and objects of antique and historical value have been unearthed from the temple.

The wealth at the temple has opened a debate over government control over the property. Prominent Hindu organisation Nair Service Society said the treasure found at the temple should remain with the temple.

Atheist leader U Kalanadan said the property was stashed in the temple cellars by the erstwhile kings. Hence, it could not be claimed as Hindu property. The government should take over the temple wealth for public use, he said.

http://www.indianexpress.com/news/kerala-temple-treasure-could-be-worth-50k-crore/811753/

  • தொடங்கியவர்

பத்மநாப சுவாமி கோவிலில் கடைசி ரகசிய அறை திறப்பது ஒத்திவைப்பு

கேரளாவில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில், இன்னும் ஒரே ஒரு ரகசிய அறை மட்டும் திறக்கப்பட வேண்டியுள்ளது. இந்த அறையை நேற்று திறப்பதாக இருந்தது. ஆனால், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி வரும் 8ம் தேதி கூடி ஆலோசித்த பின், கடைசி அறை திறப்பது குறித்து முடிவாகும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=269449

பத்மநாப சுவாமி கோயிலுக்கு அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு: கேரள முதல்வர் தகவல்

திருவனந்தபுரம், ஜூலை 3: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட 7 நபர் குழு, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் பாதாள அறைகளைத் திறந்து சில நாள்களுக்கு முன்பு ஆய்வு செய்தது. அப்போது அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தெரியவந்தது. கடந்த சனிக்கிழமையும் இந்த ஆய்வு நடந்தது. அப்போதும் ஏராளமான நகைகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பின்னர் அதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கோயிலில் அதி தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேர செல்போன் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=441083&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D

  • தொடங்கியவர்

யாருக்கு சொந்தம் பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷங்கள்?

புதன், 6 ஜூலை 2011( 18:49 IST )

பாரீஸ், நியூயார்க் மற்றும் ரோம் ஆகிய இடங்களிலுள்ள அருங்காட்சியகம் போன்று, பாதாள அறைகளை திறக்க திறக்க பொற்குவியலை கொட்டிக் கொண்டிருக்கும் பத்மநாப சுவாமி கோயில் அருங்காட்சியகமும், உலகப் புகழ் பட்டியலில் இடம்பெறப் போவது குறித்து கேரள மாநில மக்கள் பெருமிதத்தில் மிதந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த பொக்கிஷங்கள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை கிளம்பத் தொடங்கிவிட்டது.

திருவாங்கூர் சமாஸ்தானத்திற்கு சொந்தமாக இருந்த பத்மநாப சுவாமி கோயில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் மூலவர் சயன திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். வைணவர்களின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று.

சுதந்திரத்திற்கு பின்னர்,மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவில் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என டி.பி.சுந்தரராஜன் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான்,பத்மநாப சுவாமி கோயில் மற்றும் அதனை நேர்மையுடன் கட்டிக்காத்த திருவாங்கூர் மன்னர் குடும்பத்தினரது பெருமையை உலகம் அறியச் செய்துள்ளது.

பொதுநலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோவிலின் ஆறு பாதாள அறைகளை திறந்து பரிசோதிக்கும்படி, ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது.அத்துடன் அங்குள்ள நகைகள், வைரங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட அந்த பொக்கிஷங்கள் குறித்த மூல வரலாறு, அவற்றின் தொன்மை ஆகியவை குறி்த்தும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.

கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான இக்குழு, கடந்த ஜூன் 27 ம் தேதி, தமிழகம் மற்றும் கேரள கட்டடக் கலைகள் இணைந்த இந்த கோவிலின் அறைகளை திறக்கத் தொடங்கியது முதலே, அங்கு குவிந்துகிடக்கும் பிரமாண்டமான நகைக்குவியல் குறித்த செய்தி, ஒட்டுமொத்த இந்திய மக்களையும் வியப்பில் வாய்பிளக்க செய்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி,பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த பத்மநாப சுவாமி கோயிலின் 5 ரகசிய அறைகள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன.

இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன.நான்கடி உயரமுள்ள, தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை மற்றும் பல்வேறு சிலைகள், 18 அடி நீள தங்க மாலை என, காலத்தால் மதிப்பிட முடியாத பழமையான பொருட்கள் இந்த அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதே நேரம், திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய விஜயநகரப் பேரரசுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பால், விஜயநகர காலத்து நாணயங்களும் இந்த அறைகளில் கிடைத்துள்ளன. இவை, வரலாற்று அறிஞர்களால் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.

விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பொக்கிஷங்களின் மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாயையும் தாண்டலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் அரச குடும்பங்களின் பராமரிப்பில் இருந்த கோவில் செல்வங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்பட்டதும், பல்வேறு வழிகளில் அக்குடும்பங்களால் செலவழிக்கப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலை திருவாங்கூர் மன்னர்கள் நிர்வகித்து வருகின்ற நிலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் இருந்து ஒரு குண்டுமணி அளவுகூட காணாமல் போகவில்லை.அந்த அளவிற்கு அவர்கள் நேர்மையுடனும், விசுவாசத்துடனும் இருந்துள்ளனர்.

இதற்கு, பத்மநாப சுவாமி மீது அரச குடும்பம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி தான் காரணம் என, மக்கள் கருதுகின்றனர்.கி.பி., 13ம் நூற்றாண்டில், மாலிக்கபூர் படையெடுப்பு நடந்த போது, பாண்டிய மன்னராக இருந்த வீரபாண்டியன் வலுவற்று தோல்வி அடைந்ததால், கோவில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1107/06/1110706044_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.