Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வரும் 28ம் தேதி ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி டில்லியில் உண்ணாவிரதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 28ம் தேதி ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்

05 ஜூலை 2011

Bookmark and Share

கோரி டில்லியில் உண்ணாவிரதம்.

எதிர்வரும் 28ம் தேதி ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்

தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிரான இரண்டு தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் பல் வேறு தரப்பினரும் மீண்டும் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் போராடுவதோடு டில்லிக்குச் சென்று போராடுவதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ள அவர்கள் பல் வேறு போராட்டங்களை டில்லியில் நடத்த தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: 2009 ம் ஆண்டில் இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்ற நடவடிக்கைகளை ராஜபக்ச அரசு செய்துள்ளதை ஐ.நா. நிபுணர் குழு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

ராஜபக்ச உள்ளிட்ட இலங்கை ராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்றம் காரணமாக பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள மனித நேய ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.தமிழக சட்டமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஐ.நா.வை இந்தியா வற்புத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1 .7 .2011 அன்று பெங்களூர் தமிழ்ச் சங்கம் நடத்திய ஆர்வலர்கள் கூட்டத்திலும் ராஜபக்ச மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு, ஐ.நா.வை வற்புறுத்த வேண்டும் என்றும், தேவைப்படுமானால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தவும் பெங்களூர் தமிழ்ச்சங்கம் தயாராக உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்கவும், கச்சத்தீவை மீண்டும் இந்தியா உடன் இணைக்கவும், இலங்கை மீது இந்தியா பொருளாதார கட்டுப்பாட்டினை கொண்டு வருவதுடன், இலங்கையுடனான உறவுகளை இந்தியா முறித்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகிற 28 ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டெல்லியில் பட்டினி போராட்டம் உலகத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகிறது.இந்த பட்டினி போராட்டத்தில் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், தமிழ் அமைப்புகளை சார்ந்தோர் கலந்து கொள்கிறார்கள்.

அரசியல் சார்பற்ற முறையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்து எண்ணற்ற தமிழ் அமைப்புகள் கலந்து கொள்கின்றன. பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் சங்க தலைவர் மு.மீனாட்சி சுந்தரம், துணைத் தலைவர் இராசு. மாறன், துணைச் செயலாளர் மு.சம்பத், முன்னாள் செயலாளர் தாமோதரம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என அவ் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63628/language/ta-IN/article.aspx

இதில் அரசியல் நோக்கங்களைப் பற்றி நான் அறியேன். ஆனால் நல்லதொரு செயற்பாடு. இந்திய அனைத்து சமூகங்களும் இதை அறிந்திருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.