Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் 'புதிய காணொலி' போலியானது - சிறிலங்கா ஊடகவியலாளர் குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 05:47 GMT ] [ நித்தியபாரதி ]

சிறிலங்கா அரசாங்கத்திற்குச் சார்பான தொலைக்காட்சி அலைவரிசையில் காண்பிக்கப்பட்ட, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பான தமிழ் மொழியில் பேசப்படுகின்ற 'புதிய காணொலிக் காட்சிகள்' போலியானவை என புகலிட நாடுகளில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் குழு தெரிவித்துள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய காணொலியானது முதன் முதலில் 18 செப்ரெம்பர் 2009ல் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பான இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதென சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் குழு [Journalists for Democracy in Sri Lanka - JDS] தெரிவித்துள்ளது.

இப்புதிய காணொலியை அனைத்துலக விசாரணைக்கான அங்கீகரத்துக்காக சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் இவ்வூடவியலாளர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இப்புதிய காணொலியில் சிறிலங்கா இராணுவப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இவ்வாறான சம்பவங்கள் ஒருபோதும் இடம்பெறவில்லை என சிறிலங்கா அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தது என JDS இன் பேச்சாளர் சனத் பாலசூரியா பி.பி.சி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

"ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட யுத்த மீறல் சம்பவங்கள் சிறிலங்காவில் ஒருபோதும் இடம்பெறவில்லை என ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் தான் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என தற்போது அரசாங்கம் கூறுவதன் மூலம் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளதென்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதே உண்மையானதாகும்" என சனத் பாலசூரியா மேலும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள காணொலிக் காட்சிகளில் சிங்கள மொழியில் பேசியவாறு சிறிலங்கா இராணுவப் படையினர் மனிதப் படுகொலைகளில் ஈடுபடுகின்ற அதே காட்சிகளே தற்போது சிறிலங்கா அரச சார் ஊடகத்தால் வெளியிடப்பட்டுள்ள காணொலியிலும் இடம்பெற்றுள்ளதென JDS தகவல் தெரிவித்துள்ளது.

சனல் 04 தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார் சிறப்பு அதிகாரி பார்வையிட்டுள்ளதுடன் அதில் காண்பிக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் உண்மையானவை எனவும் தெரிவித்திருந்தார்.

தற்போது சிறிலங்கா சார் ஊடகத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தமிழ் மொழியில் பேசப்படுகின்ற விதமாக புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பான காணொலிக் காட்சிகள் உண்மையானவை என சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என JDS பேச்சாளர் பாலசூரியா சவால் விடுத்துள்ளார்.

அதேவேளையில், சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் யுத்த மீறல்களில் ஈடுபட்டனர் என்பதை சாட்சிப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட சனல் 04 ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் தொடர்பான உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சனல் 04 நிறுவனத்தால் யூன் மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பரப்புரையின் ஒரு பகுதியாகவே தற்போது புதிதாகக் காண்பிக்கப்பட்டு வரும் சிறிலங்கா அரசசார் ஊடகத்தின் காட்சிகள் அமைந்துள்ளதென கொழும்பிலுள்ள பி.பி.சி செய்தியாளர் சாள்ஸ் கவிலண்ட் தெரிவித்துள்ளார்.

சனல் 04 நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள, சரணடைந்தவர்களை சிறிலங்கா இராணுவப் படைகள் கொல்கின்ற காட்சிகள் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்துகின்ற விதமாக சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன், விடுதலைப் புலிகள் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பொது மக்களைக் கொல்லும் காட்சிகளை சனல் 04 நிறுவனமானது வேண்டுமென்றே தனது ஆவணப்படத்தில் உள்ளடக்காது தவிர்த்துள்ளது என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இவ் ஆவணப்படத்தில் காட்டப்படும் மூத்த இரு புலிகள் தொடர்பாகவும் சிறிலங்கா அரசாங்கம் தனது விமர்சனக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் இத்திரைப்படத்தின் பிரதான பேட்டியாளர்களில் ஒருவர் புலிகளின் இராணுவப் பயிற்சிக்குள் உள்வாங்கப்பட்டவர் எனவும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110705104211

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.