Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 08:01 GMT ] [ அ.எழிலரசன் ]

சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததையடுத்து இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சிறிலங்காவிலுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின் உதவியை இந்தியா தற்போது நாடியுள்ளது.

மே 2009ல் சிறிலங்காவில் கடந்த முப்பதாண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் முடிவிற்கு வந்ததையடுத்து சிறிலங்காவுடனான தனது செயற்பாடுகளை இந்தியா விரிவாக்கி வருகின்றது. இதன் ஓரங்கமாக, "இந்தோ சிறிலங்கா உறவைப் பலப்படுத்துவதனை நோக்காகக் கொண்ட பரிந்துரைகளை தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள் மற்றும் குழுக்கள் முன்வைக்கலாம்" என இந்திய உயர் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிலங்காவுடன் பரஸ்பர உறவைக் கட்டியெழுப்புவதில் இந்திய அரசாங்கம் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதென அண்மையில் சிறிலங்காவிலுள்ள இந்திய உயர் ஆணையகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் வடபகுதித் தலைநகரான யாழ்ப்பாணத்திலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையிலும் இந்தியத் தூதரகங்கள் கடந்த ஆண்டில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் இந்தியா பெருந்தொகை முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வடபகுதியில் உள்ள தொடருந்துப் பாதைகளை மீளக் கட்டுவதற்கான நிதியுதவியையும் இந்தியா வழங்கியுள்ளது.

அத்துடன் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களின் அரசியல் அவாவைப் பூர்த்தி செய்யும் விதமான பரிந்துரைகளை உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வுத்திட்டம் ஒன்றையும் இந்தியத் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குகின்ற கொழும்பின் திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா ஆர்வமாக இருக்கின்ற போதிலும், 1987ல் தயாரிக்கப்பட்ட இந்தோ சிறிலங்கா ஒப்பந்தத்தின் படி 1987ன் பிற்பகுதியில் தனது படைகளை சிறிலங்காவுக்கு அனுப்பியது போன்ற செயற்பாடுகளில் இந்தியா தற்போது ஈடுபடமாட்டாது என்பது உண்மையாகும்.

http://www.puthinappalakai.com/view.php?20110705104212

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.