Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்களுக்கு இந்தியா உடந்தை: கோத்தபாயவின் கூற்றுக்கும் மெளனம்:சென்னை பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-07-05 18:24:05]

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு இந்தியா உடந்தையாக இருந்துள்ளது என்று சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையின் தலைவர் இரா.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் இந்தியாவை துரோகம் இழைத்து விட்ட நாடாகவே பார்ப்பதாக அவர் "த வீக் கென்ட் லீடர்' எனும் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

விடுதலைப்புலிகளுக்கு எதிரான கோபத்தை காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தியதன் மூலம் இந்தியாவுக்கும், இலங்கை தமிழருக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை மலினப்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அரசியல் மற்றும் சமத்துவ உரிமைகள் கோரி நடத்தி வந்த போராட்டம் இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கை மூலம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் இந்தியாவின் வகிபாவம் குறித்து பல் வேறு தரப்புக்களிலிருந்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசு வெளிப்படுத்திவரும் அச மந்தமான போக்கை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கான கடந்த தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தோற்கடிக்கச் செய்வதில் இலங்கை தமிழர் விரோதக் கொள்கையே பிரதான காரணியாக விளங்கியது.

வன்னியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்ததாகக் கூறியிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவிக்காத மூலம் இந்தியா தனது இரட்டை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை பற்றிய தமிழகத்தின் கொள்கையை இந்தத்தீர்மானங்கள் மீளாய்வு செய்ய வழிவகுத்துள்ளதுடன் இலங்கை மீதான இந்தியாவின் கொள்கை பற்றிய நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் உரிமையை தமிழக அரசு கொண்டுள்ளது என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=45986&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.