Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடிகாமம் இராமாவில் முகாம் மூடப்பட்டது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

05 ஜூலை 2011

2ஆம் இணைப்பு:- வடமராட்சி கிழக்கில் மீளக் குடியமரவென அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அனாதரவாக விடப்பட்டனர்:-

வடமராட்சி கிழக்கில் மீளக் குடியமரவென அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அனாதரவாகக் கைவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சரவணபவான் ஆகிய இருவரும் இன்றையதினம் அப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். வலிகாமம் இராமாவில் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கு மக்கள் பசில் இராஜபக்சவின் மீள்குடியமர்வு நிகழ்விற்காக அவசர அவசரமாக அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் கூரைகள் எதுவுமற்ற இரண்டு பாடசாலைக் கட்டடங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அமைச்சர் பசில் ராஜாக்ச மீளக்குடியமர்வு நிகழ்வை நடத்தியபின் சென்றுவிட்டார். இந்தநிலையில் அவர்கள் அனாதரவாகக் கைவிடப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் அவர்களுக்கான உணவுகள் கூட உரிய நேரத்தில் கிடைக்கவில்லையெனவும், வழங்கப்பட்ட உணவுகளும் மதிய உணவு சுமார் மாலை 4 மணிக்கே வழங்கப்படுவதாகவும் காலை உணவு மதியம் 12 மணிக்கு வழங்கப்பட்டதாகவும் பழுதடைந்த நிலையிலேயே அந்த உணவுகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் மீளக் குடியமர வந்தவர்களில் ஒரு பகுதியினர் விசாரணைக்கென மீண்டும் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சட்டப்படுகிறது. பாடசாலையில் தங்கியுள்ளவர்கள் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு சிறுவன் பாம்புக் கடிக்கும் உள்ளாகியிருக்கின்றான். அவர்கள் தங்கியுள்ள பாடசாலைக் பகுதியில் சுமார் 300 மீற்றர் பகுதிகளை கனரக வாகனங்களால் இன்று படைத்தரப்பு துப்புரவாக்கியுள்ளது. இதனால் அவர்களது வீடுகளின் சாதாரண அத்திவாரங்கள் கூட அகழ்ந்தெடுக்கப்பட்டு விட்டன. இதனால் வெறுமனே தறப்பாள்களைப் பயன்படுத்தி கொட்டில்களை அமைப்பதற்கே அவர்கள் முற்படுகின்றார்கள். தறப்பாள்கள் மற்றும் தடிகள் கூடவோ அற்ற நிலையிலேயே அவர்கள் காணப்படுகின்றனர். தமக்கான உணவு உள்ளிட்ட எதனையுமே அங்கு பெற்றுக் கொள்ளவதற்கான எந்தவொரு வர்த்தக நிலையமும் இல்லாத நிலையில் அந்த மக்கள் அனாதரவாகக் காணப்படுகின்றனர்.

வலிகாமம் இராமாவில் முகாமிலிருந்து இரவோடு இரவாக மீளக்குடியமர்வு நிகழ்விற்காக இந்த மக்களைப் படைத்தரப்பு பிடித்துச் சென்றமை தெரிந்ததே. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்த மக்கள் தமது நிலையை தொலைபேசியூடாக அறிவித்ததை அடுத்து அவர்களைப் பார்வையிடச் சென்றிருந்தார். ஆனாலும் அவரைப் பார்வையிடச் செல்வதற்கு படைத்தரப்பு அனுமதித்திருக்கவில்லை. அதையடுத்து இன்றையதினம் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு இழுபறிகளின் மத்தியிலேயே அவர் அங்கு சென்றுள்ளார். அவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவானும் சென்றிருக்கதாகத் தெரியவருகின்றது. தற்போது அவர்கள் அப்பகுதியில் நிலைகொண்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வழங்குவதில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொடிகாமம் இராமாவில் முகாம் மூடப்பட்டது:-வடமராட்சி கிழக்கில் இறக்கிவிடப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு:-

04-07-2011 - 01:28

தென்மராட்சி கொடிகாமம் இராமாவில் முகாம் நேற்று முன்தினமிரவு அவசர அவசரமாக மூடப்பட்டுள்ளது. நேற்று பசில் இராஜபக்ச நடத்திய மீள் குடியமர்வு நிகழ்வு ஒன்றிற்காக படையினரால் அவசர அவசரமாக முகாம் இழுத்து மூடப்பட்டுவிட்டது. நேற்று முன்தினமிரவு சுமார் 8 மணியளவில் அங்கு வந்த சில படை அதிகாரிகள் இன்று காலை வடமராட்சி கிழக்கிலுள்ள உங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம் தயாராக இருங்கள் என தமக்கு அறிவித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் அங்கு வாகன சகிதம் வந்த படையினர் முகாமில் இருந்த அனைவரையும் உடனடியாக வாகனங்களில் ஏறுமாறு கூறினர்.

இதனையடுத்து வாகனங்களில் ஏறி அவர்கள் தயாராக இருந்த நிலையில் நள்ளிரவு 3 மணியளவில் வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணி- போக்கறுப்பு- கட்டைக்காடு பகுதிகளிலுள்ள அவர்களது கிராமங்களுக்கு மீள் குடியமரவென அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் இறுதியில் யுத்தத்தால் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியிலுள்ள வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா பாடசாலை, போக்கறுப்பு அரசினர் தமிழ் கலவன் பாசாலைக் கட்டடங்களில் அவர்கள் அனாதரவாகக் கைவிடப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிறிய கிணறு ஒன்று மட்டுமே குடிநீருக்காக வழங்கப்பட்டது. சுமார் ஆயிரத்;திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த முகாமிலிருந்து வருகை தந்த நிலையில் அவர்களுக்கு நேற்றுக் காலை சுமார் 11.30 மணியளவில் பாண் உணவாக வழங்கப்பட்டது. செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறும் வரை அவர்களுக்கு மதிய உணவு கிட்டியிருக்கவில்லையெனவும் தாங்கள் அங்கிருந்து சுமார் 4 மணியளவில் வெளியேறியதாகவும் அங்கு சென்று திரும்பிய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் பசில் ராஜபக்ச அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகை ஒன்றில் மீள் குடியேற்ற நிகழ்வினை ஆரம்பித்த பின்னர் அவர் வெளியேறிவிட்டார். குடாநாட்டு வைத்தியசாலையில்; திடீர் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தாகக் கூறப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்த நிகழ்வில் சாதாரணமாகக் கலந்து கொண்டிருந்தார். வடக்கு மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியும் கலந்து கொண்டிருந்தார்.

இந்தப் பகுதியில் உள்ள பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பாடசாலை அதிபருக்கான பாடசாலை உபகரணங்கள், பாடத்தொகுதிகள் கையளிக்கப்பட்டன. ஆவசர அவசரமாக நள்ளிரவு வேளையில் மக்கள் மீளக் குடியமரவென கொண்டுசெல்லப்பட்ட போதிலும் அவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படாது அனாதரவாகப் பாடசாலை வளவினில் கைவிடப்பட்டுள்ளனர். அமைச்சர் குழுவினர் வெளியேறியநிலையில் தாங்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் என்ன செய்வதென்ற நிலையில் இம் மக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.