Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் 41 சதவீதமானவர்களின் ஒருநாள் வருமானம் ரூ.210!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் 41 சதவீதமானவர்களின் ஒருநாள் வருமானம் ரூ.210!

news

நாட்டில் 41 சதவீதத்துக்கும் அதிகமானோரின் ஒரு நாள் வருமானம் 210 ரூபாவுக்கும் குறைவாகவுள்ளது. இந்த நிலைமையில் நாட்டு மக்கள் சந்தோஷமாக வாழ்கின்றனர் என்று அரசு எவ்வாறு கூறும்? இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:

நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் உள்ளது என்று அரசு தெரிவிக்கிறது. ஆனால், இந்த நாட்டு மக்களில் 41 சதவீதத்துக்கும் அதிகமானோர் நாளொன்றுக்கு 210 ரூபாவுக்கும் குறைந்த வருமானத்தையே பெறுகின்றனர்.அத்துடன், இலங்கை மின்சார சபை 16ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நட்டத்திலும், ரயில்வே திணைக்களம் நாலாயிரத்து 768 மில்லியன் ரூபா நட்டத்திலும், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரண்டாயிரத்து 26ஆயிரம் மில்லியன் ரூபா நட்டத்திலும், துறைமுக அதிகார சபை 11ஆயிரத்து 965 மில்லியன் ரூபா நட்டத்திலும் இயங்கி வருகின்றன. இது கடந்த வருடத்தில் வெளிவந்த அறிக்கையாகும்.

375 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டு அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை எந்தவித பிரயோசனமும் பெறப்படவில்லை. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 40 விமானங்கள் வருகின்றன. இருந்தும், கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யாமல் பிரயோசனமற்ற அம்பாந்தோட்டை விமான நிலையத்தின் அபிவிருத்திக்கென 300 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கத் தீர்மானித்துள்ளது.அத்துடன், அம்பாந்தோட்டை விளையாட்டு மைதானத்துக்காக அரசு 40 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. ஆனால், அந்த விளையாட்டு மைதானத்தில் ஒரு தடவை மாத்திரமே போட்டி நடத்தப்பட்டது. இது நாட்டுக்குச் சுமையே தவிர, நன்மையல்ல.

இதேவேளை, நாட்டுக்கு எதிராக உள்ள சவால்களை சமாளிப்பதற்கு தற்போதைய அரசால் முடியாதுள்ளது. சவால்களுக்கு முகம் கொடுக்க ஆட்சியிலுள்ள அரசு முயற்சி செய்கிறது. ஆனாலும், அதன் பிரதிபலனாகத் தீமையே ஏற்படுகிறது என்றார் அத்த நாயக்க.

06 ஜுலை 2011, புதன் 7:35 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=80508399606657970

சிங்கள நாட்டின் சில உதவிகளை உலக வங்கி அந்த நாட்டின் சராசரி வருமானம் 2000 அமெரிக்க டாலர்களுக்கு மேலே என கூறி அண்மையில் நிறுத்த தொடங்கியுள்ளது.

அதேவேளை இந்த செய்தியின் படி ஒரு வருடத்தில் வேலை நாட்கள் 200 x 210 நாள் வருமானம்

மொத்த வருமானம் = 42000Rs --> 420 USD !

மிகுதி 59 வீதமான மக்களும் அதிக வருமானம் பெறுகின்றனர்.

உண்மையில் இலங்கை கிரேக்கம் நோக்கியே செல்கின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.