Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி.எம்.ஜெயரத்னேவின் விசமத்தனம்...? கொத்தடிமைகள் மட்டுமே வாழ முடியும் மகிந்தாவின் அரசில் என்கிறார்...! ஈழதேசம் பார்வையில்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தப்பியோடிய புலிகள் உறுப்பினர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். கைது செய்ய நடவடிக்க வேண்டும் என்கிறார் இலங்கை பிரதமர் ஜெயரத்னே. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பியோடிய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் நாடு முழுதும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இவர்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் துவங்கப்பட உள்ளனர் என்றார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார் இந்த அடிமை டி.எம்.ஜெயரத்னே. மேலும் கூறுகையில், சர்வதேசம் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே தீய சக்திகளின் செயற்பாடுகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

அவசர கால சட்டத்தை நீடிக்க வேண்டும் எந்த வழியிலாவது, எந்த காரணத்தைக் கூறியாவது என்று இருக்கிறது மகிந்தா அரசு. அதற்கு இவர் போன்ற சிங்கள இனவெறி அடிமைகள் தேவைப்படுகின்றனர். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளும், இவர்களின் நடவடிக்கைகளுக்கு வழங்கும் பொழிப்புரைகளையும் காது கொடுத்து கேட்க முடியாது, கண் கொண்டு படிக்க முடியாது. மனிதாபிமான படை இறுதி நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய பெரும்பாலான பயங்கரவாத உறுப்பினர்கள் தென்பகுதிக்கு தப்பி வந்தனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களின் படி, வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட எக்கச்சக்கமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்கிறார். அது என்ன..? மனிதாபிமான இறுதி கட்ட போர்...? போரின் போது தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள் பலர் இன்றும் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். இவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளை இன்று எடுக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழ்நிலையால் மீண்டும் திரும்ப வர ஆரம்பித்துள்ளனர்.

புலிகளின் செயல்கள் பிடிக்காமல் தான், அம்மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர் என்கிறார். எனவே, ஓடிப்போன அம்மக்கள் மீண்டும் இங்கு வந்து அமைதியான வாழ்வை நடத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதெல்லாம் கூட விட்டுவிடுவோம். இப்படி வேறு சொல்கிறார் டி.எம்.விஜயரத்னே. இது காலவரையில் மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று குறை நிறைகளை கேட்டறிய முடியாது தத்தளித்துக் கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு, மக்கள் மத்தியில் நேரடியாகச் செல்லும் வாய்ப்பையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது..? என்ன ஒரு விசமத்தனம்..! அப்புறம் எதற்கு மக்கள் பிரதிநிதி...? மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்திக்க முடியாது. இப்பொழுது சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன என்கிறார்.

புலம் பெயர் மக்கள் கொடுத்த அடி, ஐ.நா. சிறப்பு நிபுணர் குழுவின் அறிக்கை, சனல் 4 போர்க்குற்ற சாட்சியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம், தமிழ் நாட்டின் சட்டசபை தீர்மானம், தமிழ் அறிஞர்களின் தொடர் போராட்டம் என்று மகிந்தா கும்பலை பிதுக்கி எடுத்த கதையை வசதியாக மறைத்து விட்டு, தற்போது மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களை சந்திக்க நடவடிக்கை என்கிறார் டி.எம்.ஜெயரத்னே.

இந்த நடவடிக்கை முயற்சி மக்களுக்கும் அரசாங்கதிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்கிறார். யாருக்கு வெற்றி என்றால் மகிந்தா ராஜபக்சேவுக்கு என்கிறார் இந்த இலங்கை பிரதமர். ஈழம் என்ற புலிகளின் கொள்கை மக்களால் நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னரான ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். இவை எல்லாத்தையும் விட்டு விடுவோம்..! இவற்றைப் பாருங்கள்.

வடக்கு கிழக்கு மட்டுமல்ல, நாடு முழுதும் வாழும் மக்கள், பிரச்சனைகள் தோன்றும் பொழுது ஒன்றினையும் நிலைமை இன்று தோன்றியுள்ளதாம். பகைமை, வன்முறை, குரோதம் நிறைந்திருந்த காலம், கணவர், மனைவி, பிள்ளைகள் வீடு திரும்புவார்களோ குண்டுகள் வெடிக்குமோ என்று அச்சத்துடன் மக்கள் வாழ்ந்த காலம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது என்கிறார். பயங்கரவாதம் அழிக்கப்பட்டு இன்று மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். கடந்த மாதத்திற்குள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் எண்ணிக்கை 522 ஆகும். இதுவரையில் 7476 புலி இயக்க உறுப்பினர்கள் புனர் வாழ்வளிக்கப்பட்டு மிகப்பெரும் செல்வந்தர்களாகி விட்டனர் என்று சொல்லாத குறைதான்.

ஒழிக்கப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் கட்டியெழுப்ப வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாளர்கள் அரச விரோத சக்திகள் மற்றும் அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, தாய்நாட்டின் அணைத்து பகுதிகளிலும் பயங்கரவாத உறுப்பினர்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பிலான தேடுதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப் படுகின்றன. புனர் வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும். என்று கூறி இருக்கிறார் டி.எம்.ஜெயரத்னே.

வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு யாரும் சென்று வரலாம், நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் சென்று வர தடையில்லை என்றார்கள். பின் எதற்கு இந்த அவசரகாலச் சட்டம்.? என்று யார் கேட்பது என்ற இறுமாப்பும் கர்வமும் கொண்டவர்கள் தான் பாசிஸ்ட்கள். வரும் காலங்களில் எவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் இந்த 'சிங்கள இனவெறி அடிமைகள்' என்று பார்ப்போம்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8350

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.