Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 302 பேர் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 302 பேர் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவர்

[Friday, 2011-07-08 09:56:34]

புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 302 பேர் இம்முறை கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரால் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.இவர்கள் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள மத்திய நிலையமொன்றில் பரீட்​சைக்குத் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கான கற்பித்தல் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேஜர் ஜெனரால் சுதந்த ரணசிங்க கூறியுள்ளார்.

வவுனியா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர்களுக்கு வார இறுதி நாட்களில் விசேட கருத்தரங்குகள் நடாத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.இதனை தவிர நீதி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் விசேட வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 361 பேர் கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொது தராதரப் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினர் இவர்களில் 222 பேர் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் மாணவன் ஒருவரும் மாணவியும் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பிரிவில் கல்வியை தொடர்வதற்கான தகைமையை பெற்றுக் கொண்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட மாணவர்களில் அநேகமானவர்கள் சிறந்த முறையில் சித்தியடைவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46133&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.