Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு என்ன நடந்தது?- இலங்கை அரசு பதில்

Featured Replies

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுக்கான பிரேரனை பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. விரைவில் பாராளுமன்றத்துக்கு இது தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படும்.

நாட்டின் எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல் தீர்வு விடயமானது பாராளுமன்றத்தின் ஊடாக உருவாக்கப்படுவதே சிறந்ததாக அமையும் என்று ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

சனல் 4 வீடியோக் காட்சிகள் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை வருகின்ற பிriத்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸுடன் சனல் 4 விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தப்படும் சாத்தியமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது: நாட்டின் எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல் தீர்வு விடயமானது பாராளுமன்றத்தின் ஊடாக உருவாக்கப்படுவதே சிறந்ததாக அமையும் என்று ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். எனவே தான் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதாவது ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அவர் மூலமாக அரசியல் தீர்வு முன் வைக்கப்படின் அது முதலில் சட்ட வரைபு திணைக்களத்துக்கும் பின்னர் உயர் நீதிமன்றத்திடம் செல்லும். அதனையடுத்து பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்.

எனவே இறுதியில் பாராளுமன்றத்திடமே அனைத்து விடயங்களும் செல்லும்.

அதனால் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தெரிவுக்குழுவை அமைத்து தீர்வு யோசனை ஒன்றுக்கு செல்லலாம். அதுதான் சிறந்த விடயமாக அமையும் என்று ஜனாதிபதி கருதுகின்றார். ஒருவன் தீர்மானத்தை விட முழு பாராளுமன்றம் இணைந்து தீர்வு ஒன்றுக்கு வருவது சிறந்த விடயமாக அமையும். இதுதான் சரியான வழியாக தோன்றுகின்றது. எனவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை தொடர்பில் நியமிக்கப்படும் தெரிவுக்குழுவே தீர்மானம் எடுக்கும். இந் நிலையில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்கமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி இதுவரை தீர்மானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

கேள்வி: குறித்த பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கூறியுள்ளதே?

பதில்: நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதும் எதிர்க்கட்சிகள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றம் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.

கேள்வி: தெரிவுக்குழுவுக்கான பிரேரணை எப்போது பாராளுமன்றத்துக்கு வரும்?

பதில்: இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான பிரேரனை பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. விரைவில் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவரப்படும்.

கேள்வி: எனினும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் பிரேரணையை தாமதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்: அவ்வாறு இல்லை. விரைவில் பிரேரணை பாராளுமன்றத்துக்கு வரும்.

கேள்வி: சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு என்ன நடந்தது?

பதில்: சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் முடிவு பெறவில்லை. சர்வகட்சி குழுவிலிருந்து அதிகளவான கட்சிகள் இடை விலகி சென்றுவிட்டன. ஐக்கிய தேசிய கட்சி , மக்கள் விடுதலை முன்னணி என்பன இடை விலகிவிட்டன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கலந்து கொள்ளவில்லை. எனவே அது முடிவு பெறாத ஒன்றாகி விட்டது. அதனால்தான் இவ்வாறானதொரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது

கேள்வி:பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் கட்சிகள் எதிர்த்துள்ளனவே?

பதில்: பிரேரணை வந்ததும் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்கின்றன என்று பார்ப்போம்.

கேள்வி: போதைப் பொருள் விவகாரத்தில் அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளாரே?

பதில்: போதைப் பொருள் விவகாரத்தில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரதமர் நேரடியாக தெரிவிக்கவில்லை. மருந்துகள் என்ற வார்த்தைப் பிரயோகமே இடம்பெற்றுள்ளது. ஆனால் அவ்வாறு எவருக்காவது தொடர்புகள் இருப்பின் அது தொடர்பில் விசாரணை செய்ய போதைப் பொருள் தடுப்பு பிரிவு உள்ளது. அவர்கள் அவை தொடர்பில் விசாரணை செய்வார்கள். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி. க்களாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நான் யதார்த்தத்தை பேசிக்கொண்டிருக்கின்றேன்.

கேள்வி: அரிசியில் ஆசனிக் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து?

பதில்: அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. பல தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அதேநேரம் கடந்த மூன்று வருடங்களுக்குள் எமது நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளது. விவசாயிகள் நன்மையடைந்தனர். எனவே அதனை விரும்பாத சில வெளிநாட்டு சக்திகள் இவ்வாறான விடயங்களை பரப்பலாம். அதனால்தான் நாங்கள் விஞ்ஞான ரீதியான விசாரணையை நடத்துகின்றோம்.

காரணம் இலங்கையில் மா பாவனை பாரியளவில் குறைவடைந்துள்ளது. எனவே மாவை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இன்னும் சில நாட்களில் தேயிலையில் ஆசனிக் இருக்கின்றது என்று கூறினாலும் ஆச்சயப்படுவதற் கில்லை.

கேள்வி: அரசாங்கத்துக்குள் உள்ள கட்சியே இந்த குற்றச்சாட்டை முன் வைக்கின்றது. அப்படியானால் அரசாங்கத்துக்குள்ளேயே நீங்கள் கூறும் சதித்திட்டம் உள்ளதா?

பதில்: நான் சதித்திட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அதாவது சில நேரங்களில் வெளிநாட்டு வர்த்தகர்களின் வலையில் சில தரப்புக்கள் அறியாமலேயே விழுந்துவிடுவார்கள்.

கேள்வி: அண்மைக்காலங்களில் வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய பெற்றோல் இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்: அவற்றை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது

கேள்வி: நாட்டில் இரு மணிநேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றதா?

பதில்: அது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது

கேள்வி: இடங்களில் திடீரென மின் வெட்டு இடம்பெறுகின்றதே?

பதில்: வீடுகளில் உள்ள மின் தாக்கத்தை தடுக்கும் தன்னியக்க கருவியில் ஏதாவது கோளாறு இருக்கலாம். அதனை பரீட்சித்து பார்த்திருக்கலாம்.

கேள்வி: இது தொடர்பில் மின்சார சபையுடன் கேட்டபோது இரு மணிநேர மின் வெட்டுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதே?

பதில்: நான் தொடர்புகொண்டு கேட்ட போது ஏதோ சேவை பாதிப்பு என்று கூறப்பட்டது.

கேள்வி: மின்வெட்டு என்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. ஆனால் அறிவித்துவிட்டு அல்லவா செய்யவேண்டும்?

பதில்: உங்கள் கூற்றுடன் நூற்றுக்கு ஆயிரம் வீதம் நான் உடன்படுகின்றேன். அறிவித்துவிட்டே செய்யவேண்டும். ஆனால் பாகிஸ்தானில் 8 மணிநேரம் இந்தியாவில் 6 மணிநேரம் என மின்வெட்டு இடம்பெறுகின்றது. நாங்கள் இயற்கையுடன் போராடி மின்சாரத்தை பெறவேண்டியுள்ளது.

எவ்வாறெனினும் எந்தவொரு மின் வெட்டும் அமுல்படுத்தப்படமாட்டாது என்று துறைசார்ந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வேண்டுமானால் அடுத்த முறை அமைச்சரை நான் இங்கு அழைத்து வருகின்றேன்.

கேள்வி: முன்னாள் கிக்கட் அணி தலைவர் குமார் சங்கக்காரவின் கூற்று தொடர்பில் விசாரணை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளதே? என்ன நடக்கப்போகின்றது?

பதில்: ஒன்றும் நடக்காது. சங்கக்கார என்ன கூறியிருக்கின்றார் என்றே அமைச்சர் அறிக்கை கேட்டுள்ளார். கிக்கட் வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்படுபவர்கள். அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.

கேள்வி:சனல் 4 வீடியோக் காட்சி தொடர்பில் என்ன நிலைமை?

பதில்: அது தொடர்பில் ஏற்கனவே கூறி விட்டேன். அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறு வெளியிட்டனர். தற்போது எமது நாட்டின் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு போன்று பிரிட்டனில் உள்ள நிறுவனத்துக்கு அதிகளவான முறைப்பாடுகள் சென்றுள்ளன. அந்த நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சனல் 4 காட்சியானது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவும் அபிவிருத்தியை குழப்புவதற்காகவும் செய்யப்பட்ட விடயமாகும்.

கேள்வி: இலங்கை வரவுள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சருடன் சனல் 4 தொடர்பில் பேசப்படுமா?

பதில்: சனல் 4 வீடியோக் காட்சிகள் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை வருகின்ற பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸுடன் சனல் 4 விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தப்படும் சாத்தியமில்லை. காரணம் சனல் 4 என்பது பிரித்தானியாவில் உள்ள தனியார் நிறுவனம். அதற்கேற்ற நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

யுத்தம் முடிந்த பின்னர் மூன்று இலட்சம் மக்கள் வந்தனர். ஏழாயிரம் பேரைத் தவிர அவைரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். உண்மையான புலிகளான ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உட்கட்டமைப்பு திட்டங்கள் என புனரமைப்புக்கள் முன்னெடுக் கப்படுகின்றன. இந்நிலையில் ஏழாயிரம் உண்மையான புலிகளை விடுவித்த இலங்கைக்கு ஆறு பேரை கொல்ல வேண்டுமா? அதற்கான தேவை என்ன? எனவே இது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த மேற்கொண்ட விடயமாகும் என்றார்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.