Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவருக்கு ஓய்வூதியம், காப்புறுதித் திட்டம் பாதுகாப்புக்காக செய்மதி தொழில்நுட்பம்; யாழ். வந்த அமைச்சர் ராஜித அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவருக்கு ஓய்வூதியம், காப்புறுதித் திட்டம் பாதுகாப்புக்காக செய்மதி தொழில்நுட்பம்; யாழ். வந்த அமைச்சர் ராஜித அறிவிப்பு

news

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்புறுதித்திட்டங்கள் என்பன அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் ரி.எம்.எஸ். மற்றும் செய்மதி தொழில்நுட்பம் ஊடாக மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு யாழ்ப்பாணம் வந்துள்ள, மீன்பிடி, நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்தார். கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் மாவட்ட சம்மேளனத்தை ஆரம்பித்து வைத்து உரையாற் றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நீங்கள் 100 ரூபா செலுத்தி இந்தச் சம்மேளனத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அதிகள வான பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். மீனவர்களுக் கான காப்புறுதித் திட்டத்தின் மூலமாக ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான பணத் தைப் பெற்றுக்கொள்ள முடி யும். கடலிலோ அல்லது தரையிலோ மரணம் நிகழ்ந்தாலும் இந்தக் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கடலில் மீன்பிடிக்கச் சென்ற திலிருந்து கரைதிரும்பும் வரை யிலான காலப்பகுதியில் காணா மற் போனால் மாதம் 7 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும். அவர் களது பிள்ளைகள் யாராவது கல்வியைத் தொடர்வார்களாக இருந்தால் 15 வயது வரை மாதாந் தம் ஆயிரம் ரூபா வரை வழங்கப்படும்.

மீனவர்களுக்கான ஓய்வூதி யத் திட்டத்தின் மூலமாக மாதாந் தம் தலா 10 ஆயிரம் ரூபா வழங் கப்படும். மீனவர் இறந்தால் அவ ரது துணைவிக்கு 78 வயது வரை அந்தக் கொடுப்பனவு, வழங்கப்படும். மேலும் வீடில்லாத மீனவக் குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

மீனவருக்கு கடன் திட்டம்

இலங்கையில் ஆழ்கடல் மீன் பிடியை விருத்தி செய்யும் பொருட்டு இலங்கை வங்கியுடன் இணைந்து கடன் திட்டம் வழங்கவுள்ளோம். பெரிய படகுக் கொள்வனவுக்கு இந்தக் கடன் திட்டம் உதவியாக இருக்கும்.

மேலும் எமது மீனவர்கள் கடலிலே நீண்டகாலம் தங்கியிருந்து சில வேளைகளில் இயற்கை யின் சீற்றத்துக்கு ஆளாகியும் வெறும்கையுடன் கரை திரும்பு கின்றனர். இவற்றை இல்லாமல் செய்வதற்காக ரி.எம்.எஸ். மற்றும் செய்மதி ஊடாக கடல் எல்லைகள் மற்றும் மீன் உள்ள இடங்களை இனங்காணும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன் மூலம் கால நிலை ஆபத்துக்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும். மற்றும் ஏதுõவது ஆபத்தில் சிக்கியிருந்தால் மத்திய நிலையத்தின் உதவியையும் இதனூடாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக வடக்கில் மீனவர்களுக்கு இருந்த தடைகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளன.ஜப்பானின் அனுசரணையுடன் கடலட்டை வளர்ப்பு இங்கு ஊக்குவிக்கப்படவுள்ளது. வடபகுதிக் கடலில் கடற் தாவரங்களின் வளர்ப்புக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளது. கடல் சங்கு வளர்ப்பு நடவடிக்கையும் இங்கு மேற் கொள்ளப்படவுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர்களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் மற்றும் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

10 ஜுலை 2011, ஞாயிறு 8:50 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=61710415210544935

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.