Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் இணக்க ஆவணத்துடன் தெரிவுக்குழு பிரேரணை சபைக்கு வரும்; அதனை ஐ.தே.கவும் ஆதரிக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் இணக்க ஆவணத்துடன் தெரிவுக்குழு பிரேரணை சபைக்கு வரும்; அதனை ஐ.தே.கவும் ஆதரிக்கும்

பிரசுரித்தவர்: Sukkran July 10, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்திவரும் பேச்சுக்களில் ஏற்படும் இணக்கத்தின் அடிப்படையில் தயாராகும் ஆவணத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இத்தகைய செயற்பாட்டை அரசு முன்னெடுக்குமாயின், நாடாளுமன்றத்தில் அந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராக இருக்கிறது.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையை கடந்த 5 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க இருந்தது அரசு தரப்பு.ஆனால் அது நடைபெறவில்லை. இப்போது அந்த முடிவை அரசும் பிற்போட்டுள்ளது.இந்தப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்த விவகாரத்தில் இணக்கம் ஒன்றை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்டப் பேச்சுக்களின் போது எட்டப்படும் இணக்கத்தின் அடிப்படையில் தயாராகும் ஆவணத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் தீர்வு யோசனையை முடிவு செய்யலாம் என்ற முனைப்புடன் அரசு திட்டம் வகுத்துச் செயற்பட்டு வருகிறது என்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார் . இவ்வாறு அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்திவருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

அரசின் இந்த செயற்பாடு குறித்து கருத்து வெளியிட்ட ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல அரசு முன்வைத்த மங்கள முனசிங்க, திஸ்ஸ விதாரண ஆகியோரின் அறிக்கைகளுக்குப் பூரண ஆதரவை நாம் தெரிவித்தோம்.அதே போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு, பேச்சு நடத்தி அவர்களுடன் காணும் இணக்கப் பாட்டுடன் தெரிவுக்குழுப் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை ஆராய்ந்து ஆதரிப்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.

http://mykathiravan.com/ta-news/?p=11684

ஐ. தே. கட்சிப் பயங்கரவாதிகள் கூட்டமைப்பை மிரட்டி தெரிவுக்குழுவிற்கு சம்மதம் வாங்கிவிடலாம் என்று நினைகிறான்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.