Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிலான சுதந்திரத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இன்னொரு ஆணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிலான சுதந்திரத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இன்னொரு ஆணி:-

தகவல்சுதந்திர சட்டமூலம் நிராகரிக்கப்பட்டது. விஷ்ணுகுப்தா - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

pen20cpffinci.jpg

சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான மிகக் கொடூரமான 18வது திருத்தம், இலகுவாக நிறைவேற்றப் பட்டதிலிருந்து தொடங்கிய ஒன்று சனநாயகத்தினதும் சுதந்திரத்தினதும் நிச்சயமான சாவை நோக்கி எந்த இடைவெளியும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கிறது. தகவல் அறிவதற்கான சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குமுரிய அடிப்படை உரிமை என ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. சார்க் நாடுகள் அனைத்துக்குள்ளும் சிறிலங்கா, பூட்டான் ஆகிய நாடுகளில் மட்டுமே தகவல் அறிவதற்கான சுதந்திர சட்டமூலம் நடைமுறையில் இல்லை.

பூட்டோவுடையவும் அவரது மகளதும் ஆட்சி நிலவிய குறுகிய காலம் தவிர, சனநாயக ஆட்சிமுறை இல்லாமல் இருந்த பாகிஸ்தானிலும் 1972 போன்ற அண்மைக்காலங்களில் உருவான பங்காளதேசிலும் கூட தகவல் அறியும் சுதந்திர சட்டமூலம் இருக்கிறது. அதனுடைய எதிர்மறை புகழ்பெற்ற ஊழல், உறவினர்க்கு சலுகை வழங்குதல் மற்றும் முறைகேடுகளுடனும் உள்ள இந்தியாவில் கூட ஒரு முன்மாதிரியான தகவல் அறிவதற்கான சுதந்திர சட்டமூலம் இருக்கிறது. இதன்மூலம் வெளிப்படையான தன்மை, பொறுப்புக்கூறும் கடப்பாடு ஆகியவை தொடாபான தனது தகுநிலை சான்றுகளை இந்தியா நிறுவிக்கொண்டுள்ளது. அண்மைக்காலம் வரை முடியாட்சி நிலவிய நேபாளம் கூட, தகவல் அறிவதற்கான சுதந்திர சட்டம் தன்னிடமிருக்கிறதென்று பெருமையடித்துக் கொள்ளலாம்.

இது சிறிலங்காவை எங்கே கொண்டுபோய்விடப்போகிறது?

(ஜெயரட்ணம் வில்சனின் 'சிறிலங்காவின் உடைவு' என்ற நூலில் வேறுபட்டு தெரியக்கூடிய விதமாகக் குறிப்பிடப் பட்டிருப்பதுபோல்) மண், இனம், மதத்தைக் கொண்ட பெருமையான நாடு, தனிப்பட்ட உறுப்பினர் ஒருவரால், 2011 யூன் 21ம் திகதி, செவ்வாய்கிழமை, மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்படுவதை தடை செய்ய முடிவெடுத்திருக்கிறது. துட்டுகெமுனுவின் போர்வெற்றிகளினதும் அதைத் தொடர்ந்து வீழ்ந்துபட்ட மன்னன் எல்லாளனின் கல்லறையைக் கடந்து செல்லும் குடிமக்கள் அனைவரும் அங்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்த பெருந்தன்மையினதும் மகிமைகளை பெருமையுடன் கொண்டாடும் இந்த நாடு, தேரவாத பௌத்தத்தின் ஆகத்தூயதான வடிவத்துக்கு சொந்தம் கொண்டாடும் ஒரு நாடு, புத்தரின் போதனைகளான மேத்த (இரக்கம்), கருணா (கருணை), முடித்த (அன்பு), உபேக்கா (பற்றின்மை) ஆகியவற்றின் மையக்கருத்தை பிரதிநிதித்துவப் படுத்திக்கொண்டுடிருக்கும் தூபிகளையும் தகோபாகளையும் பற்றி பெருமையடித்துக் கொள்ளும் இந்த நாடு, அடிப்படையிலே, ஈகை, சகிப்புத்தன்மையைக் கைக்கொள்வது பற்றிக்கூறி தங்களைத் தாங்களே புனிதர்களாக்கிக் கொள்ளும் இந்த நாடு, சிலநேரங்களில் சர்வதேச சமூகத்தில் சமஉரிமை கோரி வெற்று வானங்களை நோக்கி ஆர்ப்பரிக்கும் இந்த நாடு, தனது மக்களில் ஒரு பகுதியினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளால் தாக்கப்படும் போது (ஒரு சில அரச பிரச்சார அடியாட்களைத் தவிர்த்து) இன்றைக்கு வாயடைத்து போய் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டிருக்கிறது. மண், இனம,; மதம் என்ற அந்த மூன்றும் மிகக்கடினமானதான ஒரு மூலைக்குள், நாட்டை தள்ளிவிட்டுள்ளன.

கட்டளையிடும் பொறுப்பு.

'பூச்சிய ஆளிழப்புடனான மனிதநேய நடவடிக்கை' என்று கூறப்பட்டது தொடர்பாக, வெளிவந்த படங்கள், 'மண், இனம,; மதம் -இன் நற்பெயரை ஆகப்பெரிய இழப்புக்குள்ளாக்கி விட்டது. விவேகமற்ற ஆட்சிமுறை, வெற்று அச்சுறுத்தல், பெருமிதப்பகட்டான தனிநபர் வழிபாடு இவை எல்லாம் சேர்ந்து சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, வெளிப்படையான தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு என்று அழைக்கப்படுவதும் வேகமாக மறைந்து வருவதுமான இயல்நிகழ்வு பற்றிய மிகமிக துக்ககரமான கதை உருவாகுவதற்கு வழிவகுத்து விட்டுள்ளன. 'மனிதநேய நடவடிக்கை' என அழைக்கப்பட்ட பலிபீடத்தில் பலிகொடுக்கப்பட்ட மகன்களின் பெற்றோரது கடுந்துயரம், காலப்போக்கில் தவிர்க்க முடியாத விதத்தில் கலைந்து போய் விடலாம். எனினும் தற்போது உயிர்வாழ்கின்றவர்களும் மேற்படி குற்றங்களை நிகழ்த்தியதற்கு பொறுப்பாக இருந்தவர்களும் அவற்றை உண்மையில் மனப்பூர்வமாக செய்திருந்தால், சட்டத்தின் கரங்களிலிருந்து விலத்தியே வைக்கப்படுவார்கள் ஏனென்றால் அவர்கள் வெளிப்படுத்தப்பட்டால் அது இறுதியாக அவர்களுக்குக் கட்டளையிட்டவர்களை வெளிக்காட்டி விடும்.

மறுப்புக் கூக்குரல்கள.;

இந்தப் பின்னணியில் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்துக்கு அரசு காட்டும் எதிர்ப்பானது, காத்திரமான முக்கியத்துவம் பெறுவதாக இருக்கிறது. இது மிகமிக முக்கியமானது. இப்படி ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தால் அது அரசையும் அதன் அதிகாரிகளையும் அந்த சட்டத்தின் வரையறைகளுக்குள் உட்பட்டதாக, பொது மக்களால் கோரப்படும். எந்த ஒரு தகவலையும் வழங்க நிர்ப்பந்திக்கும் என்பதாலேயே அது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப் படுவதை அரச நாடாளுமன்றக்குழு தடுத்து நிறுத்திய வெட்கங்கெட்ட முறையானது, எமது நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாததாகும். சபைமுதல்வரான தினேஸ் குணவர்த்தன தனது கீச்சிட்ட குரலில் உச்ச ஸ்தாயில் கத்தி;யதும் அவருடைய ஏனைய 'குழுவினர்' அதற்குப் பக்கப்பாட்டு வாசித்ததும், ஏதோ, முறையான பயிற்சி பெறாத இசைக்குழுவொன்று மூன்றாந்தர நெறியாளரால் நெறிப்படுத்தப் படுவதையே எவருக்கும் நினைவூட்டியது. இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவதை, காழ்ப்;புடனும் கோபத்துடனும் அரசு எதிர்கொண்ட விதமானது, இந்த சட்டமூலத்தினுடைய உள்ளடக்கத்தினுடைய ஆன்மா மற்றும் காத்திரமான தன்மை இரண்டையுமே, மூழ்கடித்து புதைத்துவிட்டது. முதிர்ச்சியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடையாளமாக இருக்கவேண்டிய முனைப்பும் விடாப்பிடியான முயற்சியும் ஐ.தே.க அணியினரிடம் இருக்கவில்லை. எல்லாவற்றையும் விட அதிக திகைப்பூட்டுவதாக தொடர் நடவடிக்கையே இல்லாமலிருப்பது இருக்கிறது. இதில் துர்ப்பேறான விடயம் என்னவென்றால் மக்கள் தாங்கள் பெறும் அரசுகளைப் பெறுவதற்கு எந்த அளவுக்கு பொறுப்பாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் பெறும் எதிர்க்கட்சிகளை பெறுவதற்கும் அவர்களே பொறுப்பாக இருக்கிறார்கள்.

வன் செயல் வெறியாட்டம்.

சிறிலங்காவின பிரச்சினை உண்மையில் என்ன?

இது ஒரு உள்ளீடுபாடற்ற கேள்வி அல்ல. அமைதியாக, சர்வாதிகாரத்தனமான ஆட்சியை ஏற்றுக்கொண்டு, ஆயுதம் தரிக்காதவர்களை தேடித்தாக்கும் இயல்பு சராசரி சிறிலங்கா பிரசைகளின் மரபணுவில் இருக்கிறதா? '87-89' கிளர்ச்சியின் போது ஜே.வி.பி இனர், ஆயுதம் தரிக்காத பொதுமக்களை சித்திரவதை செய்து, அங்கவீனப்படுத்தி, கொலையும் செய்தார்கள். ஆனால் சிறிலங்கா பாதுகாப்பு படைகள் அவர்களை சுற்றி வளைத்து, முதல், இரண்டாம் மட்டத் தலைவர்களைக் கைது செய்ததும் எஞ்சியிருந்த தலைமைத்துவத்தினர் இகழப்படக்கூடிய முறையிலே அடங்கிப்போனார்கள். இதன்மூலம் எல்லாவற்றையும் விட அதிகமாக அவர்களது கோழைத்தனத்தையே வெளிப்படுத்தினார்கள். 83 இனக்கலவரத்தின் போதும் இதுவே நடந்தது.

யாழ்ப்;பாண போரரங்கின் மையத்திலே, பிரபாகரனும் ஆறேழு புலிகள் இயக்க உறுப்பினர்களும் 13 சிறிலங்கா இராணுவ வீரர்களை பதுங்கியிருந்து தாக்கியபோது, கொழும்பிலும் வேறு இடங்களிலுமிருந்த எங்களுடைய 'சிங்கள வீரர்கள்' அப்பாவித் தமிழர்களை விரட்டிச் சென்றார்கள். கொலை, கொள்ளை, வல்லுறவு என வெறியாட்டம் ஆடினார்கள். இது திரும்ப முடியாத ஒரு கட்டத்தை தமிழ் போராளிகளுக்கு மட்டுமல்லாது இந்த நாட்டின் போராளிகள் அல்லாத தமிழ் பொதுமக்களுக்கும் உருவாகிவிட்டது. இந்த வெறுக்கத்தக்க 'பழிவாங்கும் அணிவகுப்புகள்' இல் சிலவற்றுக்கு, நன்கு அறியப்பட்ட புத்த பிக்குகள் தலைமை தாங்கினார்கள். போற்றுதலுக்குரிய அந்த ஆசான் கற்பித்த இரக்கம், அன்பு ஆகியவை இந்தக் கதிக்குத்தான் உட்பட்டன. இது சர்வதேச கருத்தை சிங்கள பெரும்பான்மையினருக்கு எதிராக திருப்புp, அவர்களை காட்டுமிராண்டிகள் என முத்திரை குத்தி விட்டது. இதன் விளைவாக பல வெளிநாடுகளில் சிறப்பாக மேற்குலக நாடுகளில் சிறிலங்கா பிரசைகள், இனரீதியாக குறிப்பிடப்பட்டனர். இந்தக் கறையை பலரின் மனங்களிலிருந்து நீக்குவதற்கு ஒரிரு தசாப்தங்களுக்கு மேல் எடுத்தது.

தற்காப்பு செயல்வகை

அரசு இப்போது அகப்பட்டிருக்கும் புதைமணலானது, சணல் 4 வீடியோவினுடைய உள்ளடக்கம் அல்லது உண்மைத் தன்மையுடன் தொடர்பு பட்டதாக இல்லை. முதலாவதாக போர் நடந்துகொண்டிருந்த போது, அரசு எடுத்த விவேகமில்லாததும் குறைபாடு கொண்டதுமான 'பூச்சிய அழிப்பு' என்ற நிலைப்பாடும் இரத்தவாறான ஒரு போரை மனிதநேய நடவடிக்கை என்று அழைத்தும் இருக்கிறது. இரண்டாவதாக சமர்நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்கான முதல் நிலைப்பொறுப்பில் இருந்த ஜெனரல் பொண்சேக்காவை சிறையிட்டது இருக்கிறது. இந்த இரண்டு காரணிகளும் இணைந்து அரசு இப்போது இருக்கும் அடிமுட்டாள் தனமான நிலைக்கு தவிர்க்க முடியாமல் இட்டுச் சென்றன. இத்தோடு வெளிவிவகார அமைச்சினுடைய படுமோசமான திறமைக்கேடும் இணைந்து, அந்த வேளையில் உருவாக்கப் பட்டுக்கொண்டிருந்த உலக அபிப்பராயத்தை எரிபற்றச் செய்வதின் மீது சிக்கலான ஒரு விளைவை ஏற்படுத்தியது.

அது ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா அரசை ஒரு தற்காப்பு செயல் வகைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஊடக ரீதியான மின்னல் வேக தாக்குதலுக்கான சர்வதேச களரியிலே ஒரு இடத்தைப் பெற போட்டி போடமுடியாத அளவுக்கு அவர்கள் குழப்பமடைந்து இருக்கிறார்கள். சர்வதேச விவாதங்களிலே ஒன்றுக்கு மேற்பட்ட குரல்கள் கேட்டன. ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். மஹிந்த சமரசிங்க ஜெனிவாவுக்கு போனார். சரத்அமுனுகம இன்னொரு இடத்துக்கு போனார். உள்ளூர் மக்களுக்கென எப்போதும் குரலளவில், சிங்கள ஆதிக்க வாதிகளாக இருக்கும் சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இருந்தனர். பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதி சகோதரருமான கோட்டபாய ராஜபக்ஷவின் விளைவைப் பற்றி கவலைப்படாததும் ஞானமற்றதுமான 'மேற்கோள் காட்டக்கூடிய கூற்றுகள்'பற்றிச்சொல்லவே தேவையில்லை. எல்லா அரசியலும் உள்ளுர் மயப்பட்டதாகவே இருந்தது. ஜனாதிபதி பிரேமதாசவுக்குப் பின் எல்லாவற்றையும் உள்ளுர் மக்கள் சார்ந்து நிகழ்திய ஒரே தலைவராக ஜனாதிபதி ராஜபக்ஷ இருக்கிறார். தேர்தல் காலத்தில், இது, வாக்குகளை வெல்வதற்கான நன்மைதருகின்ற தந்திரோபாயமாக இருப்பது போல் தோன்றியது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத விதத்திலான நிகழ்கால சர்வதேச சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கின்ற பொழுது இந்த தந்திரோபாயமே ஒரு டமோக்கிளின் (தலைக்கு மேல் மயிரிழையில் தொங்கும்) வாளாக மாறக்கூடும். தகவல் அறிவதற்கான சுதந்திர சட்டமூலம் தடுக்கப்பட்டதானது அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்தை நிறைவேற்றியதை ஒத்த, தவறான திசையில் எடுத்து வைக்கப்பட்ட காலடியாக இருக்கிறது. சுதந்திரத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இன்னொரு ஆணியாக அது இருக்கிறது.

வரலாறுகளில் இருக்கின்ற சர்வதிகாரிகள், தங்கள் அதிகாரம் நித்தியமாக நிலைத்திருக்கும் என்றுதான் எண்ணினார்கள். புரட்சிச்சதிகள் மறறும் படைய வழிகளில் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டவர்களும் முதலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டபின் தங்களுக்கு அதிகாரத்தை கொடுத்த அதேமக்கள் மீது திருகாணியாக இறங்கியவர்களும் தங்கள் அதிகாரம் நிரந்தரமானது அல்ல என்பதை ஒரு கணமேனும் நினைக்க தவறிவிட்டார்கள். ஹிட்லரின் நன்கு பிரச்சாரப் படுத்தப்பட்ட '1000 வருட றெய்ச்' 12 வருடங்களுக்கே நீடித்தது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் பொழுது மக்களை அவர்களிடமிருந்து விலக்கி வைப்பதற்கென அவர்களைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பப்படுகிறது. அதற்கு வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறதென்று தெரியாது. உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே என்ன நடக்கிறதென்று தெரியாது. அதற்குள்ளே இருக்கும் சதுப்பு நில புழுக்களும் அரண்மனை விகடகவிகளும் தங்களுடைய குறுகிய நோக்கங்களுக்காக, தங்களுடைய'எசமானர்களுடைய' பலத்தையும் இனிமையையும் தவிர வேறெதையும் காண்பதில்லை. எங்கும் நிகழ்கின்ற அதிகாரத்தின் இயல்போக்கு இதுதான். தற்போதைய ஆட்சியினர் இதை அதிக அளவில் அனுபவிக்கிறார்கள். துல்லியமாக, இந்த சூழல் பொருத்தப்பாட்டில், தகவல் அறியும் சுதந்திர சட்டமானது, இவர்கள் தவிர்க்க முடியாமல் சுதந்திரத்தினதும் சனநாயகத்தினதும் மரணப் பள்ளத்தாக்குக்குள் அணிவகுத்துச் செல்வதைத் தடுப்பதில் முக்கிய பங்கை ஆற்றியிருக்க முடியும். தற்போதைய ஆட்சியில் வெளிப்படையான தன்மை இல்லாமை, பொறுப்பு சொல்லும் கடப்பாடு இல்லாமை, ஊழல் மற்றும் உறவினருக்கு சலுகை வழங்குதல் போன்ற பல குறைபாடுகள் உள்ளன. ஆனால் அவர்களுடைய இறுதி அழிவுக்குக்; காரணமாக திறமையின்மையே இருக்கப்போகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63927/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.