Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உளூராட்சி தேர்தல் 1981 ஜூலையும் 2011 ஜூலையும் சேம் அண்ட் ஷேம்

Featured Replies

கறுப்பு யூலை நடந்த அதே தேதிதான் நடக்க இருக்கும் தேர்தல் தேதியும்

Workflow: Public

யாழ் நிருபர்

செவ்வாய்க்கிழமை, யூலை 12, 2011

1981 ஆம் ஆண்டு யூலை 23 இல் இடம்பெற்ற அரச ஆதரவுடனான இனப்படுகொலை கறுப்பு யூலையாக இன்னமும் தமிழ் மக்களின் வடுவாக இருக்கின்றது. அதே வேளை இதே காலப்பகுதியில் தான் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட சபைத் தேர்தலின் போது கொழும்பில் இருந்து வந்த அரச அதிகாரிகளாலும் காமினி திஸ்ஸ் நாயக்க உட்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்களாலும் அடாவடித்தனம் மேற்கொள்ளப்பட்டது.

.

ஆம் 1981 ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தலின் போது தெற்கில் இருந்து வந்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் யாழ்.நூலகம், நாடாளு மன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வீடு ஆகியன எரிக்கப்பட்டன.

.

இன்று முப்பது வருடங்கள் கடந்து மீண்டும் அதே தேர்தல், அதே அச்சுறுத்தல், அதெ ஆக்கிரமிப்பாளர்கள்...

.

In 1983 July

July_1983.jpg

After 30 years

Tamils%20killed%20by%20army.jpg

1981 போல் இந்த முறையும் வன்செயல்கள் நடக்குமா என்ற அச்சத்தில் மக்கள். போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் அரசாங்கம் எந்த தேர்தலிலும் வெல்ல முடியாமல் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய அடியே. அத்துடன் போர் முடிந்து மக்கள் நலமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று தேர்தலிலும் மக்கள் மஹிந்தவிற்கு எதிராகவே வாக்களித்தனர்.

.

ஆகவேதான் இந்த உள்ளூராட்சி தேர்தலில் ஆவது அரசாங்கம் கணிசமான வாக்குகளை பெற்றுவிடவேண்டும் என்ற திட்டத்தில் தனது 50,000 ஆயுதப்படைகளுடன் கிட்டத்தட்ட அமைச்சர்கள், ஆதரவாளர்கள் என்ற மிகபபெரும் படை எடுப்பினை வடக்கில் செய்து வருகின்றது.

.

இதற்கு மகுடம் சூடுவதுபோல மஹிந்த இராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் ஐந்து நாட்கள் முகாம் இட்டு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கவுள்ளார். இதற்கு அவர்கள் அபிவிருத்திப்பணிகளை பார்க்க வருகின்றார் என ஒரு மிகப்பெரும் பனர் ஒன்றினையும் போட்டுள்ளனர். ஆகவே 1981 இல் காமினி திஸ்ஸ நாயக்கா தலைமை தாங்கி செய்திருந்த வன்செயல்கள் இந்த முறை மஹிந்த ராஜபக்‌ஷவினால் தலைமை ஏற்று நடத்தப்படுமோ என்பதே மக்களின் அச்சம்.

.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் வெல்லவேண்டும் அப்படி இல்லாவிட்டால் யாருமே வெல்லக்கூடாது இதுதான் மஹிந்த அரசின் திட்டம். இந்த வகையில்தான் மக்களை வாக்களிக்கச் செய்யாமல் தடுப்பதற்கு அச்சநிலை தோற்று விக்கப்படுகிறது. அரச வளங்கள், அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரத்துக்குத் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

.

எத்தனை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், ஆக்கிரமிப்புக்கள் வந்தாலும் மக்கள் அதனை எதிர்கொண்டு வாக்கு எனும் ஆயுதத்தினால் மஹிந்த பரிவாரங்களை தோற்கடிக்கவேண்டும். இதனை வடபகுதி மக்கள் செய்வார்கள்.

.

in 1983 Sinhala leader JR Jayawardne

Black%20july%20cartton.jpg

after 30 years Sinhala leader mahinda

Chanel4%20and%20Mahinda_0.jpg

கடந்த 30 வருடமாக சிங்களம் எத்தனையோ மாயைகளைச்செய்தாலும், எவ்வளவு தமிழர்களை கொன்று குவித்தாலும் ஏன், வடக்கு கிழக்கை முழுமையாக ஆக்கிரமித்து இலட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்தாலும் தமிழ் மக்கள் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடம் சோரம் போவதில்லை. ஒவ்வொரு தேர்தல்காலத்திலும் மக்கள் தம் சிங்களத்தின் மீதான எதிர்ப்பினை காட்டியே வந்துள்ளனர். அதனையே இப்போதும் செய்வார்கள்.

Bookmark/Search this post with:

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.