Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மீது போர்க்குற்ற விசாரணை! - லியாம் பொக்ஸூக்கு கொழும்பு ஆலோசனை!!

Featured Replies

வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மீது போர்க்குற்ற விசாரணை! - லியாம் பொக்ஸூக்கு கொழும்பு ஆலோசனை!!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கப்பட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கொழும்புக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தும் வெளிநாட்டு தமிழ் அமைப்புகளை நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்களை இணைத்துக் கொண்டமை தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு தமிழ் அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக முன்வைத்து, இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டம் போட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக போர்க்குற்ற மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக் கொண்ட விடயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என சிறிலங்காவின் படைத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத் தளபதிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு வெளிநாடுகளில் நிதி சேகரித்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து அனுப்பிய வெளிநாட்டு தமிழ் அமைப்புகளை பொறுப்புக் கூற வைப்பதற்கான முனைப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் வடக்கு, கிழக்கில் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் யுனிசெவ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை கடந்த 9ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸிடம் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கையளித்துள்ளார். இதன்போது சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் சமூகமளித்ததிருந்தனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பாக வடமாகாண சபையின் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துடன் இணைந்து யுனிசெப் நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பின் பேரில் இச்சிறுவர்களை தமது படைத்துறையில் இணைத்துக் கொண்டதாக அச்சிறுவர்களின் பெற்றொர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற 676 முறைப்பாடுகளில் 64 சதவீதமானவை விடுதலைப் புலிகளால் சிறுவர் போராளிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை முன்வைத்து வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மீது பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸூக்கு கோத்தபாய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு லியாம் பொக்ஸ் பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்திலும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெளிநாட்டு தமிழ் அமைப்புகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடிய வகையில் சிறிலங்கா அரசாங்கம் லியாம் பொக்ஸை கருவியாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={1EF1F563-9742-4CDC-A388-3CB01B55709C}

அதாவது தமிழின படுகொலை செய்த சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு நேரடியாகவும், மறை முகமாகவும் உதவியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று சிங்கள அரச பயங்கரவாதிகள் புதிய களமொன்றை திறக்க தற்கொலை முயற்சி செய்கிறார் போல. லியம் பாக்ஸ் சிங்கள அரச பயங்கரவாதிகள் அள்ளிவீசும் மது, மாது, பணம் என்பவற்றால் கட்டுண்டு இருந்தாலும், அதனால் முழு மதியையும் இழந்துவிட்டான என்பது இனித் தெரியவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.