Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசபக்ச கும்பல் தேர்தல் பிரச்சாரத்திற்காக வடபகுதியில் முகாமிட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jul 14, 2011 / பகுதி: செய்தி /

ராசபக்ச கும்பல் தேர்தல் பிரச்சாரத்திற்காக வடபகுதியில் முகாமிட்டுள்ளது.

யானை வரும் பின்னே மணியோசை கேட்கும் முன்னே என்ற வாக்கியத்திற்கு உதாரணமாக யாழ் குடா நாட்டில் வழமையிலும் கூடிய இராணுவக் கெடுபிடி காணப்படுகிறது. மேலதிகப் படையினரும் காவல்துறையும் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து துருப்புக் காவிகளில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் தீவிர சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கடலில் இறங்குவதற்கு யாழ் மீனவர்கள் பகலில் மாத்திரம் அனுமதிக்கப்படுகின்றனர். பருத்தித்துறைக் கடல் வடமராட்சிக் கிழக்குக் கடல் பகுதிகளுக்குள் கடற்படையினர் அனுமதியுடன் தென்பகுதி சிங்கள மீனவர்கள் இரவு பகலாக மீன் பிடிக்கின்றனர்.

யாழ் – கிளி தேர்தல் தொகுதிகளில் யூலை 23ம் நாள் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. வாக்காளர் இடாப்புக்களில் இருந்து 330,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 2009ல் யாழ் – கிளி நிர்வாக மாவட்டங்களின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 816,005 என்றிருந்தது.

2011 யூன் முதலாம் திகதிக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 481,791 என்று குறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் இடாப்புகளில் இருந்து அகற்றப்பட்டோர் நாட்டை விட்டு ஓடிவிட்டனர் என்று பிரதம தேர்தல் அதிகாரியான அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறுகிறார்.

ஊர்காவற்துறை, வட்டுக்கோட்டை, காங்கேசன்துறை, மானிப்பாய், கோப்பாய், உடுப்பிட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய 11 உள்ளாட்சித் தேர்தல் தொகுதிகளில் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.

ராஜபக்ச அரசின் 10 அமைச்சர்கள் யாழ் – கிளி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்காக முகாமிட்டுள்ளதாகவும் இன்னும் சில அமைச்சர்கள் அடுத்த வாரம் வரவிருப்பதாக ஈழம் பிரஸ் யாழ் நிருபர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சர்களின் வாகனத் தொடரணிகள் பாதுகாப்புப் படையினர் சகிதமாகத் தெருக்களில் வேகமாகச் செல்லும்போது மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைகிறது. மக்கள் மிரண்டு போயுள்ளனர். 1980களில் மாவட்ட சபைத் தேர்தல்களுக்காக யாழ்ப்பாணம் வந்த அமைச்சர்கள் முன்னெடுத்த வன்செயல்களின் வடு இன்றும் மறையவில்லை. யாழ் நூலக எரிப்பு அப்போது நடைபெற்றது.

தமிழர் – சிங்களவர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாகச் சர்வதேச மட்டத்தில் கூறும் கொழும்பு அரசு தமிழர் தாயகத்தை இராணுவமயப் படுத்தியதோடு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டணியினரை ஓரங்கட்டுவதிலும் முனைப்பாக ஈடுபடுகிறது.

இம்முறை தேர்தல்கள் அமைதியாக நடப்பது சந்தேகம் என்று ஈழம் பிரஸ் நிருபர்கள் தெரிவிக்கின்றனர். எந்தத் தில்லு முல்லுக்கும் அரசு தயாராக இருப்பதாகவும் ஆள் மாறாட்டம் கள்ள வாக்குப் போடுதல், வாக்குப்பெட்டித் திருட்டு, தேர்தல் சாவடி முற்றுகை, பரவலான தாக்குதல்கள் நடக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மலர் வளையங்கள் அனுப்பப்படுகின்றன. அவர்களுடைய சுவரொட்டிகள் மீது மாட்டுச் சாணம் வீசப்படுகிறது. கழிவு எண்ணை ஊற்றப்படுகிறது. அனைத்தையும் பார்த்தபடி மக்கள் விதியை நொத்தபடி அன்றாடி வாழ்வை நடத்துகின்றனர்.

யாழ்ப்பாணம் வரும் அதிபர் ராஜபக்ச ஐந்து நாட்கள் தங்கியிருப்பார் என்று அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. யாழ்ப்பாணப் பிரமுகர்களையும் அரச அலுவலர்களையும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சந்தித்துப் பேசுவதறற்கு ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகவும் அதே செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

யாழ்ப்பாணப் பயணத்தை முடித்துக் கொண்டு கிளிநொச்சிக்கு 20ம் திகதி சென்று அங்கிருந்து ராணுவ உலங்கு வானூர்தி மூலம் ராஜபக்ச கொழும்பு செல்வார். கோப்பாய், கிளிநொச்சி நகரங்களில் அதிபர் ராஜபக்ச அடிக்கல் நாட்டு விழாக்களில் முக்கிய பங்கெடுப்பார் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

http://www.pathivu.com/news/17393/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.