Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறுவேடம் பூண்டு தமிழ்நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா அமைச்சரும், ஆளும்தரப்பு அரசியல்வாதிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாறுவேடம் பூண்டு தமிழ்நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா அமைச்சரும், ஆளும்தரப்பு அரசியல்வாதிகளும்

[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2011, 05:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அமைச்சர் மற்றும் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டுக்கு இரகசியமாகச் சென்று வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 9ம் நாள் தொடக்கம் 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளில் இருந்தும் 1000 வரையிலான தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

சிறிலங்காவில் இருந்தும் சுமார் 150 எழுத்தாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இவர்களில் அரசியல்வாதிகளும் அடங்கியிருந்தனர்.

சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா அதிபரின் ஆலோசகருமான ஏ.எச்.எம்.அஸ்வர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹசன் அலி, பசீர் சேகு தாவூத், எம்.எஸ்.எம்.அஸ்லாம் ஆகியோரும் இந்த மாநாட்டில பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்கா எதிர்ப்புணர்வு காரணமாக தமக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படலாம் என்பதால் தமிழ்நாட்டில் இவர்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரகசியமாக இருந்து கொண்டுள்ளனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்வதைத் தவிர்க்கும் வகையில் வழக்கமாக அணியும் மேற்கத்திய உடையை அணியவில்லை.

சிறிலங்கா முஸ்லிம்களின் பாரம்பரிய உடையான சாரம், மேற்சட்டை மற்றும் தொப்பி அணிந்து கொண்டே அவர் சென்றுள்ளார்.

விமானம் மூலம் திருச்சியை சென்றடைந்த அவர், அங்கிருந்து மோட்டார் வாகனம் ஒன்றில் காயல்பட்டினம் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை இந்த மாநாட்டில் உரையாற்றிய ஏ.எச்.எம்.அஸ்வரும் சிறிலங்கா அரசு பற்றியோ சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பற்றியோ வாய் கூடத் திறக்கவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

http://www.puthinappalakai.com/view.php?20110717104296

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.