Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் ஒட்டுக்குழு கருணாகுழுவுக்குள் கடும் மோதல்- ஒட்டுக்குழு கருணாவை விமர்சித்தவர் மீதும் தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ஒட்டுக்குழு கருணாகுழுவுக்குள் கடும் மோதல்- ஒட்டுக்குழு கருணாவை விமர்சித்தவர் மீதும் தாக்குதல்!

Sunday, July 17, 2011, 15:00சிறீலங்கா

மட்டக்களப்பில் ஒட்டுக்குழு கருணாகுழுவுக்குள் கடும் மோதல் உருவாகி உள்ளதாகவும், அதன் உச்சக்கட்டமாக நேற்று முன்னர் ஒட்டுக்குழு கருணாவுடன் இணைந்து செயற்பட்ட யூலியன் என்பவரை கருணா தலைமையில் சென்ற குழு கடுமையாக தாக்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு கரடியனாற்றில் கல்வாடி வைத்திருக்கும் ( கற்களை உடைத்து தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்வது) யூலியன் என்பவரை பிரதியமைச்சராக இருக்கும் கருணாவும் அவருடன் சென்ற வீரா, மற்றும் ரவி என்பவர்கள் கடுமையாக தாக்கியதாகவும், இதனையடுத்து யூலியன் என்பவர் கரடியனாறு காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்த போது அங்கும் ஒட்டுக்குழு கருணா தலைமையில் சென்றவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கிரான் சந்தியில் கடைவைத்திருக்கும் செல்வா என்பவரையும் ஒட்டுக்குழு கருணா நேற்றுமுன்தினம் கடுமையாக தாக்கியுள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாக கூறித்திருந்த கருணா இன்று சிங்களவர்களுடன் சேர்ந்து கூத்தடித்து திரிகிறார், இதுதானா அவர் தமிழ் மக்களுக்கு வாங்கித்தந்த விடுதலை என கிரானில் கடைவைத்திருக்கும் செல்வா என்பவர் கடைக்கு வந்த சிலருக்கு கூறியிருக்கிறார். இதை அறிந்த ஒட்டுக்குழு கருணா அங்கு சென்று செல்வாவை கடைக்கு வெளியால் இழுத்து வந்து மிக மோசமாக தாக்கிவிட்டு சென்றதாக கிரான் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுக்குழு கருணாவின் அண்மைக்கால செயற்பாடுகளும், மகிந்த அரசுக்கு துதிபாடித்திருவதும் அவரின் சொந்த ஊரான கிரானிலேயே கடும் எதிர்ப்பும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இவர் விடுதலைப்போராட்டத்திற்கு கிழக்கில் தலைமை தாங்கிய காலத்திலேயே தமது பிள்ளைகள் போராட்டத்திற்கு சென்று இறந்ததாகவும், பலர் அங்கவீனமாகி பெரும் அவல வாழ்வை அனுபவித்து வருகின்றனர் என்றும், ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருந்த ஒட்டுக்குழு கருணா சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார் என கிரான் மக்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.

இதை அடக்கும் வகையிலேயே கிரான் சந்தியில் கடைவைத்திருக்கும் செல்வா ஒட்டுக்குழு கருணாவால் தாக்கப்பட்டார்.

இனிமேல் தன்னைப்பற்றி கிரானில் யாரும் பேசக்கூடாது என ஒட்டுக்குழு கருணா எச்சரித்து சென்றதாகவும் கிரான் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுக்குழு கருணாவுடன் சேர்ந்து இத்தாக்குதல்களை நடத்திவருபவர்களில் ஒருவர் வீரா என்பவராவார். இவர் மருதமுனை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கொலையில் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படிப்பட்ட குற்றவாளிதான் மகிந்த அரசாங்கத்தின் பிரதியமைச்சராக இருக்கும் ஒட்டுக்குழு கருணாவின் மெய்பாதுகாவலர்.

http://www.tamilthai.com/?p=21979

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.