Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவினுள் மிகப் பெரியளவிலான இராணுவ மயமாக்கலும் ஒடுக்குமுறையும் தான் காணப்படுகிறது -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவினுள் மிகப் பெரியளவிலான இராணுவ மயமாக்கலும் ஒடுக்குமுறையும் தான் காணப்படுகிறது -

18 ஜூலை 2011

ஜுட் லால் பெர்ணாண்டோ -தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள்

சிறிலங்காவினுள் மிகப் பெரியளவிலான இராணுவ மயமாக்கலும் ஒடுக்குமுறையும் தான் காணப்படுகிறது -

நான் ஒரு சிங்களவர். தமிழ் மக்களுக்கும் சிங்கள முற்போக்குக் குழுக்களுக்குமிடையே ஒரு வகையான புரிந்துணர்வு நிலவி வருகிறது. இது மிகவும் சிறுபான்மையானது. இவ்வாறு சிங்கள சமூகத்தினரிடையே மிகச் சில ஊடகவியலாளர்களும், சில கலைஞர்களும், சில தொழிற்சங்கவாதிகளும் தான் உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டிற்கு வெளியே இருக்கிறார்கள். அதேபோன்று இன்னொரு தொகையினர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறிலங்கா அரசாங்கம் என்பது இலங்கையை ஆண்ட காலனியவாதிகளால் உருவாக்கப்பட்டது. 1948இல் சுதந்திரம் என்று சொல்லப்பட்ட ஒன்றைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களாலும் அது பலமான வகையில் மறுசீரமைக்கப்பட்டே வந்தது.

அதன் போது தமிழ் மக்கள் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்தார்கள். மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒரு சிங்கள அரசாகவே அது உருமாற்றம் பெற்றது. சிங்கள பௌத்த கருத்தியல் எவ்வாறான சுயாதீனமான ஆட்சிமுறைகளுக்கும் இடம் கொடுக்கவில்லை. பெரும்பான்மையினரின் மொழியாகிய சிங்களம் முழு நாட்டிற்குமான உத்தியோகபூர்வ மொழியாகியது. தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள பௌத்த ஆட்சியாளர்களால் தாராளமாக மேற்கொள்ளப்பட்டன. இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனத்தில் செய்வதைப் போல. சிங்கள இடதுசாரிகளிலிருந்து சிங்கள வலதுசாரிகள் வரை இந்த அரசையும் அதன் நடவடிக்கைகளையும் ஆதரித்து வருகிறார்கள். ஸ்பெயினில் உள்ளது போல. பாஸ்க் மக்கள் ஏனைய எவரையும்விட இது குறித்து நன்றாகப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

முதல் முப்பது வருடங்களும் தமிழ் மக்களின் எதிர்ப்பு என்பது வன்முறையற்ற வழிமுறைகளினாலானதாகவே இருந்தது. காந்தியின் சத்தியாக்கிரக வழிமுறைகளைப் பின்பற்றியதாகவே அது இருந்தது. 1970களில் தமிழ்த்தரப்பில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்தார்கள். அது என்னவென்றால் ஒரு தனியரசு தான் இதற்கு ஒரேயொரு தீர்வு என்று. தமிழர் மத்தியிலிருந்த எல்லாக்கட்சிகளும் இதனை ஏற்றுக் கொண்டன. 1977 தேர்தலில் இந்த உடன்பாட்டின் கீழ் எல்லாத் தமிழ்க்கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. அவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் தொண்ணூறு வீதமான ஆசனங்ளைக் கைப்பற்றினார்கள். தனியரசு என்பது ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றானது. அதன் பிறகு என்ன நடந்தது என்றால், சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்புப் பொறிமுறையைப் பாவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியரசுக் கோரிக்கையை அதாவது பிரிவினையை முன்வைக்கக்கூடாது என பலவந்தமாக சத்தியப்பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டது. ஜனநாயக வழிமுறைக்காக இருந்த ஒரேயொரு கதவும் இதனூடாக மூடப்பட்டது. இதன்காரணமாக அடுத்த தலைமுறையினர் யாருடைய உதவியும் இன்றி ஆயுதங்களைக் கையிலெடுக்கத் தொடங்கியது.

2002இல் அவர்கள் ஒரு அரசை நிறுவிக்கொண்டார்கள். அரசுக்குள் ஒரு அரசாக அது இருந்தது. விமானப்படையை மட்டுமல்ல கடற்படை இராணுவம் பொலிஸ் நீதிமன்றங்கள், கல்வி, விவசாயம், கலை, வைத்தியசாலைகள் என எல்லாவற்றையும் நிறுவிக் கொண்டார்கள். மக்களுடைய சக்தியைக் கொண்டே இது கட்டி எழுப்பப்பட்டிருந்தது.

இத்தருணத்தில் அரசாங்கம் தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. சிங்கள வலது சாரிகள் பேச்சுவார்த்தையில் எத்தகைய உடன்பாட்டையும் எதிர்த்து வருபவர்களாக இருந்தனர். 2001 டிசம்பரில் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு இணங்கியது. வாஷிங்டன் இதில் தலையிட்டு ஒரு பேச்சுவார்த்தையை வாஷிங்டனில் நடாத்துமாறு கோரியது. இதன்காரணமாக என்ன நடந்தது என்றால் ஒரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் போக முடியாது போனது. விடுதலைப் புலிகள் அமெரிக்காவில் தடை செய்யப்படட ஒரு இயக்கமாக இருந்து. அது தான் 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கையின் சர்வதேச மீறலாக இருக்கும். 2006இல் ஐரோப்பிய யூனியன் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகக் குறிப்பிட்டுத் தடை செய்தது.

இலங்கையின் இனமுரண்பாடு என்பது வெறுமனே உள்நாட்டு முரண்பாடு என்பதற்கப்பால் சர்வதேச சூழமைவின் அரசியலாகவும் பரிமாணம் பெற்றது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே கடும் பதட்டம் ஒன்று நிலவுவது எவருக்கும் தெரிந்திருக்கும். மேற்கத்தைய ஏகாதிபத்தியவாதிகளுக்கு இங்கே ஒரு பலமா அரசு இருக்க வேண்டும்.

2009 யுத்தத்தின் போது எல்லா மக்களும் குற்றவாளிகள்போலவே நடத்தப்பட்டார்கள். அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஊடகங்கள் எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எந்த அரசசார்பற்ற நிறுவனத்திற்கும் அனுமதி கிடைக்கவில்லை. மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்குக் கூட இடமளிக்கப்படவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர் டிசம்பரில் அரசாங்கம் 12235 புலிச் சந்தேக நபர்கள் தமது தடுப்புக்காவலில் உள்ளதாக அறிவித்தது. அன்றிலிருந்து இந்த இரண்டு வருடங்களின் பின்னரும் கூட அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் யார் யார் என்பதும் எவருக்கும் தெரியாது. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் எவருக்கும் தெரியாது. அதுமட்டுமன்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் அப்பகுதிகள் கடுமையான இராணுவ மயப்படுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் பின்னர் அவரவர் கிராமங்களுக்குப் போக அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் அங்கு போகும் போது ஏற்கெனவே பல சிறிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தச்சூழல் மக்கள் அங்கு சுதந்திரமாக வாழ்வதற்கேதுவாக இல்லை. ஒரு கிராமத்திலிருந்து மறு கிராமத்திற்குப் போவதற்கான சுதந்திரமும் மறுக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் மீன்பிடிக்கப் போவதாக இருந்தால் பத்து அரச அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். விவசாயம் என்பது சாத்தியமில்லாமலே இருக்கிறது ஏனெனில் அங்கு 1.2 மில்லியன் கண்ணிவெடிகள் இன்னமும் காணப்படுகின்றன. இவற்றில் பெருமளவானவை இராணுவத்தினரால் புதைக்கப்பட்டவையே. இராணுவத்தினர் இப்பகுதிகளில் கடைகளை ஆரம்பித்துள்ளனர். பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாதையின் பெயர்பபலகைகள் சிங்களப் பெயருக்கு மாற்றப்படுகின்றன. சிங்கள பௌத்த அடிப்படைகளில் இப்பிரதேசங்கள் அலங்கரிக்கப்படுகின்றன. இது உண்மையில் ஒரு வகையான திட்டமிட்ட வகையான சிங்களமயப்படுத்தலே.

நாங்கள் அவநம்பிக்கை வாதிகளல்ல. சிறிலங்காவில் உண்மையாகவே என்ன நடைபெறுகிறது என்றுசர்வதேசம் அறியாததாகவே இருக்கிறது. சிறிலங்காவினுள் மிகப் பெரியளவிலான இராணுவ மயமாக்கலும் ஒடுக்குமுறையும் தான் காணப்படுகிறது. இது தமிழ் பகுதிகளில மட்டும் தான் என்றில்லை. சிங்களப்பகுதிகளிலும் தான்.

அரசாங்கத்தை விமர்சி;க்க முடியாது. மேற்கத்தைய தாராளவாத ஜனநாயக வழிமுறையின்படி தேர்தலினூடாக தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஜனநாயக ஏற்புடமை அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இன்று இந்த இடத்தில் உள்ள பெரும் பிரச்சினை ஜனநாயகம் பற்றியது. அரசாங்கம் புலிகளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் தான் இன்று அஞ்சுகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். மே 19 அன்று ஒரு மெழுகுதிரி கொளுத்துவதற்கோ அல்லது கொடியேற்றுவதற்கோ அல்லது அது போன்ற வேறு எதற்குமோ அனுமதிக்கப்படவில்லை. கொல்லப்பட்ட மக்களுடைய ஆராதனைக்காக தேவாலயத்திற்குச் சென்றவர்கள் கைது செய்ப்பட்டார்கள். எனினும் தமிழ்ப்பகுதியிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இதனை எதிர்த்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர அவர்கள் ஒன்று கூடினார்கள். மக்களுடைய எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. சிங்கள மக்களும் அதனோடு இணைந்து கொள்வார்களாயின் அது தான் ஜனநாயகத்திற்கான குரலைப் பலப்படுத்தும். அது ஒன்று தான் அரசியல் தீர்வுக்கு வழிகாட்டும்.

ஜுட் லால் பெர்ணாண்டோ இலங்கையில் சமாதானத்தற்கான ஐரிஸ் மன்றத்தின் உறுப்பினர். டப்ளின் ரினிற்றி கல்லூரியின் விரிவுரையாளர், ஆய்வாளர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64244/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.