Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை தலைமறைவு ....

Featured Replies

284399_10150248468558801_754613800_7320145_3861026_n.jpg

யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான அரசியல் சூழலை உருவாக்குவது ஒன்றும் இலகுவான காரியம் இல்லை என்பதை அங்கு நடந்தேறும் சம்பவங்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரங்கள் கூட இல்லாத நிலையில், நேரடியாக இல்லாது போனாலும் மறைகமாக வேட்பாளர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்துவதில் அதிக அக்கறை காட்டப்படுகிறது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவன் வீட்டிற்கு முன்னால் நாய் ஒன்றை வெட்டிப் போட்டு விட்டு அதன் தலையை வாயிற் கதவில் தொங்க விட்ட சம்பவம் கடந்தவாரம் நிகழ்ந்துள்ளது.

இதுபோன்று நாய்களை வைத்து அச்சுறுத்தும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் முளைவிடத் தொடங்கியுள்ளன.

முதன்தலில் பார்வதி அம்மாளின் சிதை மீது நாய் ஒன்று சுடப்பட்டு எரித்துப் போடப்பட்டிருந்தது. அதன்பின்னர், தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகரான பேராசியர் சிற்றம்பலத்தின் வீட்டில் ஒரு நாய் சுடப்பட்டு வீசப்பட்டிருந்தது.

இப்போது நடந்துள்ளது மூன்றாவது சம்பவம்.

நன்றியுள்ள மிருகமான நாய்களைக் கூட கொன்று போட்டு தமிழ்த் தேசியம் சார்ந்த தரப்பினரை எச்சரிக்கும் போக்கு யாழ்ப் பாணத்தில் அதிகரித்து வருகிறது.

வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுக்க முடியாமல் இப்படிச் செய்கின்றனரா..?

அல்லது ஒரு குறியீட்டுக்காக இன்று நாய்க்கு நடந்தது தான் அடுத்து உங்களுக்கும் என்று எச்சரிக்கும் தொனியில் இவை இடம் பெறுகின்றனவா என்பது புரியாத புதிராக உள்ளது. ஆனால், இவை ஒன்றையும் சாதாரண விடயங்களாகக் கொள்ள முடியாது.

யாழ்ப்பாணத்தில் அச்சமற்ற சூழல் ஒன்று இயல்பான அரசியல் சூழல் ஒன்று உருவாகுவதை விரும்பாத சக்திகள் இருக்கின்றன என்பதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

குறிப்பாக, இதன் மூலம் தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்கக் கூடியவர்கள் எவரும் யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர் என்பதைத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

பார்வதியம்மாளின் சிதை மீது நாயைச் சுட்டுப் போட்ட சம்பவத்துக்கு காழ்ப்புணர்ச்சியே காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

அத்துடன், அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டோரை அச்சுறுத்தும் செயற்பாடே இது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால், பேராசியர் சிற்றம்பலம், மானிப்பாய் பிரதேசசபை வேட்பாளர் சிவகுமார் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையின் ஊடாக மாற்றுக் கொள்கையுடன் எவரும் அரசியல் நடத்தக் கூடாது என்ற கருத்தே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, அடுத்தடுத்து நடந்தேறும் இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் இருப்பது யார்?

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடருமா?

நாய்கள் மூலம் எச்சரிக்கும் இந்த நடைறை இத்தோடு நின்று போகுமா அல்லது அதற்கு மேலும் போய் விடுமா என்பன போன்ற கேள்விகள் யாழ்ப்பாண மக்களிடையே எழுந்துள்ளன.

ஒரு நீண்ட போரைச் சந்தித்த மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாகவும், நிம்மதியான வாழ்வு வாழ்வதாகவும் அரசாங்கம் பிரசாரங்களை செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், இன்னொரு பக்கத்தில் பார்த்தால் அந்த சுதந்திரமான வாழ்வு இதுதானா என்ற கேள்வியை எழுப்ப வைக்கிறது.

இந்தச் சம்பவங்களுக்கு தனியே அரசியல் போட்டி மட்டும் காரணம் எனக் கூற முடியாது.

அதற்கும் அப்பால் வலிமை வாய்ந்த சக்திகளின் தொடர்புகள் இருப்பதாகவே தென்படுகிறது. யாழ்ப்பாணத்தில் மாற்றுக் கொள்கையுடையோரை தலையெடுக்க விடாமல் தடுக்க முனைவது ஒன்றும் இரகசியமான செயற்பாடு அல்ல.

யாழ்ப்பாணத்தில் ஒரு சிறிய போராட்டத்தைக் கூட நடத்த முடியாத அளவுக்குத் தான் அங்கு ஜனநாயகம் உள்ளது.

குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்னர் சர்வமதக் குழுவினர் நடத்தவிருந்த பாதயாத்திரைக்கே அனுமதி மறுக்கப்பட்டது என்றால், ஒரு அரசியல் போராட்டத்துக்காக எந்தளவு சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் என்பதைப் புந்து கொள்ள முடிகிறது.

இத்தகையதொரு சூழலில் தான் உள்ளூராட்சித் தேர்தலை தமிழ்க் கட்சிகள் எதிர் கொள்கின்றன.

இந்தத் தேர்தலில் ஆளும்தரப்புக்கு எதிராக உள்ள குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுப்பதற்காக அச்சுறுத்தும் பாணியிலான நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

ஆரம்பத்தில் அளவெட்டியில் தொடங்கிய இந்த அச்சுறுத்தல் தற்போது பெரும்பாலான இடங்களில் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறன. வேட்பாளர்கள் மிரட்டப்படுவது, அவர்கள் மறைகமாக அச்சுறுத்தப்படுவது, அவர்களது கூட்டங்களுக்கு தடை ஏற்படுத்துவது என்பன நடந்து கொண்டிருக்கிற நிலையில் தான் நாயைக் கொன்று எச்சரிக்கும் புதிய கலாசாரம் பரவி வருகிறது. இது, ஜனநாயக சூழலுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்பதில் சந்தேகம் இல்லை.

வீதி வீதியாக மனிதர்களைச் சுட்டுப் போடப்பட்டதைக் கண்டு பழக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் இன்று நாய்களைக் கொன்று போடும் கலாசாரம் ஊடுருவி வருவது ஒரு வகை வன்முறையே வெளிப்படுத்தும் நிலையே.

வெறுமனே மனிதர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவது மட்டும் தான் வன்றை அல்ல.இதுவும் கூட மக்களை அடக்க, மேற்கொள்ளப்படும் வன்முறை சார்ந்த ஒரு வடிவம் என்றே கூறலாம்.

இந்த வன்முறைகள் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காது போனால், அது வீட்டுக்கு வீடு, அச்சுறுத்துவதற்கு நாய்களைப் பலியிடும் வழக்கம் உருவாகி விடும்.

இத்தகையதோர் நிலை உருவாகுவதைத் தடுப்பதற்கும். யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான அரசியல் சூழலை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே உள்ளது.

அதை அரசாங்கம் செய்யாமல், இப்படி மிரட்டுகின்ற காரியங்களுக்குத் துணை போனால், இது யாழ்ப்பாணத்தை இயல்பு நிலையில் இருந்து தொலைவிலேயே செல்ல வைக்கும். இது அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் தரப்புகளுக்கே இன்னும் அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.