Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை பெற்ற தெற்கு சூடானும்- தமிழீழ விடுதலையும் சென்னையில் நடந்த கருத்தரங்கம்-(Video in).

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை பெற்ற தெற்கு சூடானும்- தமிழீழ விடுதலையும் சென்னையில் நடந்த கருத்தரங்கம்-(Video in).

Monday, July 18, 2011, 21:25இந்தியா, காணொளி, தமிழீழம்

நாடுகடந்த தமிழீழ அரசாஙக்கத்தின் தோழமை மையத்தின் ஏற்பாட்டில், விடுதலை பெற்ற தெற்கு சூடானும்-தமிழீழ விடுதலையும் எனும் கருத்தரங்கமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. தோழமை மையத்தின் தலைவர் பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கல்வியாளர்கள், கட்சித் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் என பன்முக தளத்தில் இருந்து பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

http://youtu.be/CibY1kcZrKk

கருத்தரங்கின் தொடக்கத்தில் ஒஸ்றேலியாவில் உருவாக்கப்பட்ட யாழினி எனும் குறும்படம் திரையிடப்பட்டது.இக்குறும்படம், சமகாலத்தில் தமிழீழத்தில் பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் பற்றியதான பதிவினைக் கொண்டிருந்தது.

தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கும் இடையிலான ஒற்றுமைகள் – வேறுபாடுகள் பற்றி கருத்துரைத்த தமிழர் தேசிய இயக்க தலைவரும் – தோழமை மைய ஒழுங்கிணைப்பாளர்களில் ஒருவருமாகிய தோழர் தியாகு அவர்கள், பிரித்தானிய வல்லாதிக்க சக்தி எவ்வாறு தமிழர்களை ஆட்சி செய்திகின்ற அதிகாரத்தை சிங்கள பேரினவாத அரசிடம் கையளித்து சென்றதோ அதுபோலவே தென் சூடானிய மக்களை ஆட்சி செய்கின்ற அதிகாரத்தை வட சூடானிய அதிகார மையத்திடம் கையளித்துச் சென்றதென்றார்.

1970 களில் வீழ்ச்சி கண்ட தென் சூடானிய விடுதலைப் போராட்டம், 1983களில் மீளவும் எழுர்ச்சி கொண்டது போல் ஈழடுதலைப் போராட்ட வரலாற்றுத் தடத்தில் மக்கள் எழுர்ச்சிக்கு 1983 வித்திட்டதென்றார்.

தென்சூடானிய சுதந்திரத்துகான கருத்து வாக்கெடுப்பில், தென்சூடான் நிலப்பரப்புக்குள் வாழ்கின்ற தென்சூடானிய மக்கள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழ்க்கின்ற தென்சூடானிய மக்களும் வாக்களிக்கும் உரியைப் பெற்று, வாக்களித்து சுதந்திர உரிமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிர்காலத்தில், தமிழீழ சுதந்திரத்துக்கான கருத்து வாக்கெடுப்பில், புலம்பெயர் ஈழத் தமிழ் மக்களும், வாக்களிப்பதற்கான உரிமையை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும், தமிழீழ தேசிய அட்டை வெளிப்படுத்தி நிற்கின்றதென தெரிவித்தார்.

http://youtu.be/cLBdb7qbvwU

நலன்களை மையமாக கொண்டு சூழுலும் சமகால சர்வதேச அரசியல் ஒழுங்கில், ஈழவிடுதலைப் போராட்டம் வகிக்கின்ற பாத்திரம் குறித்து எடுத்துரைத்த மே-18 இயக்க பிரதிநிதி திருமுருகன் அவர்கள், சுதந்திர தமிழீழத்துக்கான இனத்தின் விடுதலைப் போராட்டத்தை, வெறும் மனித உரிமை பிரச்சனையாகவும், போர் குற்றமாகவும், மானிடத்துக்கு எதிரான குற்றமாகவும் உலகம் சுருக்க முனைகின்றதென இடித்துரைத்தார்.

பாதிக்கப்பட்டவனுடைய அடிப்படை கோரிக்கையே முதலில் பரிசீலிக்கப்பட வேண்டுமே அன்றி, குற்றவாளியை தண்டிப்பது முதன்மையல்ல என கருத்துரைத்த திருமுருகன் அவர்கள், எமது போராட்டம் விடுதலைக்கான போராட்டம் என்பதனை முதன்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுத்திறுத்தினார்.

இக்கருத்தரங்கில் முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சிப் பிரதிநிதி அஸ்னம் பாட்சா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஸ்ணசாமி, இந்திய கொம்யூனிற் கட்சிப் பிரதிநிதி நா.நஞ்சப்பன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பிரதிநிதி மு.தனியரசு, ஊடகவியலாளர் எஸ்.மணி, அகில இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதி மகேஸ் மற்றும் சென்னைப் பல்கலைக் கழக அரசியல் அறிவியல்பீடத் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் உட்பட பல பேராளர்கள் பங்கெடுத்து தமிழீழ விடுதலைக்கான தங்களது ஆதரவுக் கரத்தை நீட்டினர்.

நாதம் ஊடகசேவை

தகவல்துறை அமைச்சகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

http://www.tamilthai.com/?p=22120

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.