Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவசங்களை நம்பி வந்தோர் ஏமாற்றம் திட்டித் தீர்த்தனர் அரச அதிகாரிகளை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலவசங்களை நம்பி வந்தோர் ஏமாற்றம் திட்டித் தீர்த்தனர் அரச அதிகாரிகளை!

Wednesday, July 20, 2011, 9:24

சிறீலங்கா

உதவிப் பொருள்களும் இலவசங்களும் வழங்கப்படும் என்று தெரிவித்து ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட தமிழ் மக்கள் எதுவும் வழங்கப்படாது ஏமாற்றப்பட்டனர்.இதனால் கோபமடைந்த அவர்கள் தம்மை அழைத்த அதிகாரிகளைத் திட்டித்தீர்த்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரண்டாவது பிரசாரக் கூட்டம் நேற்று கோப்பாயில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு ஒவ்வொரு சமுர்த்தி அலுவலரும் கிராம அலுவலரும் ஆள்களைத் திரட்டி அனுப்ப வேண்டும்.என்று பாரம்பரிய கைத் தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார்.

உடுவில், நல்லூர், கோப்பாய் பிரதேசசெயலர்களை நேற்றுமுன்தினம் காலை 8 மணியளவில் ஸ்ரீதர் தியேட்டருக்கு அழைத்த அமைச்சர் டக்ளஸ், கோப்பாய் நாவலர் பாடசாலை மைதானத்தில் இடம்பெறும் ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டத்துக்கு பிரதேச ஆள்களைத் திரட்டி அனுப்பும் பொறுப்பு பிரதேச செயலர்களுக்கு உரியது.ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் எத்தனை எத்தனை பஸ்கள் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கினார்.இதற்கு மேலாக கூட்டத்துக்கு ஆள்களைகத் திரட்ட வேறு ஒரு உத்தியும் பயன்படுத்தப்பட்டது.

இதன்படி, போரின் பின்னர் கோப்பாய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு 2,500 பேருக்கு கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்தப் பணம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியமர்வு அமைச்சினால் வழங்கப்பட இருந்தது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையே இதனை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென நேற்றைய தினம் அந்தப் பணம் ஜனாதிபதியால் வழங்கப்படும் என்று பிரதேச செயலர்களுக்கு புனர்வாழ்வு அமைச்சர் அறிவித்தார்.இதனை அடுத்து, கிராம அலுவலர்களால் விடயம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன் டோக்கனும் கொடுக்கப்பட்டது.

நேற்றுக்காலை டோக்கன்களுடன் அழைத்து வரப்பட்ட மக்கள், நேரடியாக ஜனாதிபதியின் பிரசார மேடைக்கு அழைத்து செல்லப்பட்டு அமர்த்தப்பட்டனர். எனினும் இறுதிவரை அவர்களுக்கு எந்தக் கொடுப்பனவும் வழங்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகளைத் திட்டித் தீர்த்தனர். தங்கள் பதவிகளைக் காப்பாற்றுவதற்காக எங்களை அலைக்கழிக்கிறார்கள் என்று தெரிவித்தார் ஒருவர்.

ஜனாதிபதியின் நேற்றைய பிரசாரக் கூட்டத்தில் வைத்து கோயில்கள், பள்ளிவாசல், தேவாலயங்களுக்கு நிதி வழங்கப்படும் என்று வடமாகாண கல்வி, கலை கலாசார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவனின் கையொப்பத்துடனான கடிதமொன்று 150 மதகுருமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கான ஒழுங்கை வட மாகாண கலாசாரத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிறிதேவி செய்திருந்தார். இறுதியில் மதகுருமார்களும் ஏமாற்றப்பட்டு வீடு திரும்பினர். அவர்களுக்கும் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் கோப்பாய் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. பருத்தித்துறை பிரதான வீதி இருப்பாலைச் சந்தியிலிருந்து கோப்பாய் சந்தி வரை காலையிலிருந்து இருந்து நண்பகல் வரை மூடப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் பல அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர்.

http://www.tamilthai.com/?p=22240

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.