Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். தமிழ் மாணவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Wednesday, 20 July 2011 02:42

யாழ். தமிழ் மாணவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது !

இனப்படுகொலைக்கு மனிதாபிமான நடவடிக்கை என பெயரிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை அழித்த மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையில் போட்டியிடும் போர்க்குற்றவாளிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையோடு தமது பலத்தை வெளிப்படுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமையை பறித்து தமிழ் மக்களை அழித்த சிங்கள பேரினவாத கட்சிக்கும் அவர்களுக்கு துணைபோகும் ஒட்டுக்குழுக்களுக்கும் ஏன் வாக்களிக்க கூடாது என தமிழ் மாணவர் பேரவை பட்டியல் இட்டுள்ளது.

தாம் இங்கே தரும் விபரங்களை ஆராய்ந்து நியாயத்தை உணர்ந்து தாயகத்தில் இருக்கும் உங்கள் உறவுகள் ஒவ்வொருவரையும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களையும் தமிழ் மாணவர் பேரவை கேட்டுள்ளது.

* இனப் படுகொலைக்கு மனிதாபிமான நடவடிக்கை எனப் பெயரிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழித்தமைக்காகா

* இனப் படுகொலைக்கான சாட்சியங்களை மறைப்பதற்காக வன்னியில் ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலத்திற்கும், இனஅழிப்பிற்கும் முன்னர் அரசசார்பற்ற அமைப்புக்களையும் ஜநா உட்பட சர்வதேச நிறுவனங்களையும் வன்னியில் இருந்து அகற்றியமைக்காகா.

* வன்னியில் பச்சிளம் பாலகர்களையும், கர்ப்பிணித் தாய்மார்களையும், முதியவர்களையும், மற்றும் அப்பாவிப் பொதுமக்களையும் வகை தொகை இன்றிக் கொன்று குவித்தமைக்காகா.

* பாதுகாப்பு வலயத்தை பிரகடனப் படுத்தி நீர், உணவு, உறையுள், மற்றும் வைத்திய வசதியற்ற பகுதிக்குள் பல இலட்சம் மக்களை வைத்து கனரக ஆயுதங்கள், ஷெல் வீச்சு, பொஸ்பரஸ் குண்டு வீச்சு ஆகியவற்றின் மூலம் ஈவிரக்கமற்று கொன்று குவித்தது மட்டுமல்லாது மூன்றரை இலட்சம் மக்கள் வாழ்ந்த இடத்தில் 30,000 பேர் இருந்ததாக கூறி சர்வதேச நிவாரண நிறுவனங்களின் கண்ணில் மண்ணைத் தூவ முயன்ற கொடுமைக்காகா.

* சர்வதேச மனிதாபிமான நெறிமுறைகளை மீறி வைத்தியசாலை, பாடசாலை, என்பனவற்றின் மீது ஷெல் வீச்சுக்களை மேற்கொண்டு அப்பாவி மக்களைக் கொடுங் கொலை செய்தமைக்காகா.

* முட்கம்பி வேலிகளுக்கு உள்ளே அடிப்படை வசதிகளற்ற கூடாரங்களுக்கு நிவாரணக் கிராமங்கள் என தமிழ் தலைவர்களின் பெயரிட்டு அழைத்து அவர்களை அவமானப் படுத்தியதோடு அப்பாவி பொதுமக்களையும் நீண்ட காலத்திற்கு தடுத்து சிறை வைத்தமைக்காகா.

* பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களை இராணுவ ஆக்கிரமிப்பில் வைத்துள்ளமைக்காகா.

* அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு தறப்பாளையும் , 4 தகரங்களையும் , 4 தடிகளையும் கொடுத்துவிட்டு வீடமைப்புக்கு வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட உதவிகளை கபளீகரம் செய்ததோடு இராணுவத்திற்கு சீனாவிலிருந்து தயாரிக்கப்பட்ட தயார் நிலையில் கட்டட இணைப்புகளை பொருத்தி வீடுகளை வழங்கிய கொடுஞ் செயலுக்காகா..

* அரசியல் தீர்வுக்கான இறுதியாகத் தயாரிக்கப்பட்ட விதாரண அறிக்கையை குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டு 13ஆவது அரசியல் திருத்தத்திற்கு கொடுக்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கொடுக்க வெளிப்படையாக மறுத்து வரும் அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைக்காகா.

* தமிழருக்கு அரசியல் பிரச்சினை இல்லை என்ற ஹெல உறுமய வினதும் வீரவன்ச குழுவினதும் நிகழ்ச்சி நிரல்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் அரசாங்கம். சர்வதேச அரங்கிலே ஏற்றுக்கொள்ளப்பட்ட வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்னாட்சி, அதிகாரப்பகிர்வு என்பனவற்றைப் புறந் தள்ளிவிட்டு ஒரே நாடு ஒரே தேசம் என்ற சுலோகத்தின் மூலம் சிறுபான்மை இனங்களை முற்றாக இல்லாது ஒழிக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதற்காக

* இன விகிதாசார அடிப்படையில் கூட இதுவரை வேலை வாய்ப்புகளை வழங்காத அரசு அரசாங்கத்துறையிலும், கூட்டுத் தாபனங்களிலும், பொலிஸிலும் ஆயுதப் படைகளிலும் சிறுபான்மை இனத்தவரையே வேவுக்கு அமர்த்தி புலனாய்வுத் தகவல்களை எமக்குள் புகுந்தே பெற்றுக் கொண்டு வருவதற்காக

* தமிழரை இரண்டாம் தர அல்லது மூன்றாம் தர பிரஜைகளாகவே வைத்திருக்கும் அரசாங்கம். தமிழர்கள் இலங்கையில் வாழலாம் ஆனால் சிங்களவருடன் சமஉரிமை கோரிக்கைகளை வைத்தல் ஆகாது என்பதை சிறையிலுள்ள சரத் பொன்சேகா உட்பட்ட பேரினவாதிகள் திரும்பத்திரும்ப கூறிவருகின்றமைக்காக..

* இந்த அரசாங்கம் தேசிய கீதத்தை தமிழில் பாடும் உரிமையைக் கூட இல்லாமற் செய்துள்ளமைக்காகா.

* தமிழ் மொழியும் அரசகரும மொழி என அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடு செய்ய வசதிகள் செய்து கொடுக்கப்படாமைக்காகா.

* அரசாங்கத் திணைக்களங்களில் சிங்களத்தை முழுமையாக அமுல்படுத்தி தமிழுக்கு உள்ள உரிமையைப் புறக்கணித்து வருகின்றமைக்காகா

* வடக்கு, கிழக்கு பகுதிகளில் போரின் பின்னர் கூட அபிவிருத்தி என்ற போர்வையில் எமது வளங்களையும் வாழ்வையும் சுரண்டுவதோடு தென்பகுதியிலிருந்து வரும் பொருட்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்குமே முன்னுரிமை கொடுத்து எமது பிரதேசம் பல்தேசிய வர்த்தக கம்பனிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்படும் கொடுமைகளுக்காகா.

* எமது பிரதேசத்தவர்களது வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதோடு, பிற பகுதிகளில் வேலை வாய்ப்பு தருவோம் என அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களையும், யுவதிகளையும் மோசமான முறையில் ஏமாற்றியதோடு, யுவதிகளை விபச்சார வர்த்தகத்திற்கு உட்படுத்திய மனித மனச்சாட்சிக்கு ஒவ்வாத கொடுமைகளை செய்தமைக்காகா.

* பல தசாப்தங்களாக நீதிமன்றத்தின் விசாரணைக்கு கொண்டுவரப்படாமல் இருக்கும் தமிழ்க் கைதிகள் குறித்து நடவடிக்கை எடுக்காது காலத்தைக் கடத்தி வருவதால் அவர்கள்; மனநோயாளர்களாகவும், குற்றுயிருடன் உயிர்வாழ்பவர்களாகவும் மாற்றியுள்ள கொடும் நீதியை நிலைநாட்டி வருவதற்காகா.

* ஜனாதிபதி சனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் மனநிலையில் இல்லை என்பதை காட்டுவதுடன் அவர் குடும்ப ஆட்சியை மத்தியில் தக்க வைத்துக்கொண்டு சலுகை அரசியல் மூலம் தமிழ் மக்களை அடிமைகளாக்குவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சுயநலக் கும்பல்களையும், ஒட்டுக் குழுக்களையும் தந்திரமாகப் பயன்படுத்தி வருகின்றமைக்காகா.

* மேலும் சர்வதேச மட்டத்தில் எமது பிரச்சினை தெளிவாக உணரப்பட்டுள்ள நிலையில் சுயநலமிகளுக்கும் கொள்கையை விற்றுப் பிழைப்பவர்களுக்கும், அடி வருடிகளுக்கும் சலுகைகள் வழங்கி, தமிழ் மக்களின் வன்மையான அபிலாசைகளை மூடி மறைத்து பொய்யான மக்கள் ஆணை ஒன்றை சர்வதேசத்திற்குப் பெற்றுக் கொடுக்க இந்த அரசாங்கம் துடியாய் துடித்து உள்ளுராட்சி அமைப்புகளை தன் வசப்படுத்தி சர்வதேச சமூகத்தை ஏமாற்ற எடுக்கப்படும் முயற்சிக்காகா..

* உண்மையின் சாட்சியாக மேலே விபரிக்கப்பட்ட காரணங்களுக்காக நாம் தமிழர் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் அரசாங்கக் கட்சிக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும் வாக்களிக்காது, தமிழர் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து எமக்கான வெற்றியாக இதனை மாற்றிக் கொள்வோமாகா

* புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் புலத்தில் வாழும் உங்கள் உறவுகளுக்கு தொலைபேசியிலோ, மின் அஞ்சலிலோ உடனடியாக அறிவுறுத்தல் வழங்க வேண்டுமென அன்புரிமையுடன் கோருகின்றோம்.

தமிழ் மாணவர் பேரவை

யாழ்ப்பாணம்

http://www.sankathi.com/news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.