Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு அமைப்பாளர் பொலிஸாரால் திடீர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு அமைப்பாளர் பொலிஸாரால் திடீர் கைது

Thursday, July 21, 2011, 8:27

சிறீலங்கா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவருமான க. அருந்தவபாலன் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி அவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று தொடர்பாகவே தான் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்று அருந்தவபாலன் உதயனுக்கு தெரிவித்தார்.

அருந்தவபாலனின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை விசாரித்தனர். நேற்று மாலை 4.30 மணிக்கு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர். 4.30 மணிக்கு அங்கு சென்ற அவரை தேர்தல் துண்டுப் பிரசுரம் ஒன்று தொடர்பாக விசாரித்த குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கொழும்பில் மேலதிக விசாரணை செய்யவேண்டியுள்ளதாகத் தெரிவித்து தமது வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

http://www.tamilthai.com/?p=22317

சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் முன்னாள் அதிபர் கைது! - கொழும்பில் வைத்து விசாரணை!!

சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் முன்னாள் அதிபரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் சிறிலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை சுவரொட்டிகளில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களை அச்சிட்டு வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் நேற்று (20.07.11) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை சுவரொட்டிகளில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்களை அச்சிட்டு வெளியிட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளிக்குமாறு இவர் நேற்று முன்தினம் சாவகச்சேரி பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று சென்ற இவர் 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். கொழும்பிற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சாவகச்சேரி பொலிஸார் கூறி இவரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர் அச்சிட்டிருந்த சுவரொட்டியில் முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டனர் என்று பொறிக்கப்பட்ட வாசகம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான வாசகம் என கூறப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய இவர் முன்னதாக சிறிலங்கா படைத்தரப்பினரால் பெருமளவில் உயிரச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவர் திட்டமிட்ட வகையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={D82AC67F-15F1-4E9E-B835-C18756230492}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.