Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மீனவர்களை வடக்குக் கரையோரம் குடியேற்றி வடக்குக் கரையோரங்களை ஆக்கிரமிக்க அரசு திட்டம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மீனவர்களை வடக்குக் கரையோரம் குடியேற்றி வடக்குக் கரையோரங்களை ஆக்கிரமிக்க அரசு திட்டம்:

[Thursday, 2011-07-21 13:04:40]

வடக்கில் முல்லைத்தீவு முதல் வடமராட்சி கிழக்கு வரையான கரையோரப் பாதுகாப்புக்காக சிங்கள மீனவர்கள் குடியேற்றப்படவிருக்கின்றனர் என நம்பகமான தகவல்கள் கொழும்பிலிருந்து கிடைத்திருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் தெரிவிக்கிறார்.

உதயனுக்கு வழங்கிய சிறப்புப்பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிங்கள மீனவர்களை வடக்குக் கரையோரம் குடியேற்றுவதன் மூலம் வடக் கின் மீன்வளம் சுரண்டப்படுவதுடன் கரையோரப் பகுதி முழுவதையும் சிங்களவர்களின் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவருவதே அரசின் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். அவருடனான உரையாடலிலிருந்து...

கே: நான் சொன்னதையே செய்வேன். செய்வதையே சொல்வேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளாரே. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல் பல விடயங்களை அவர் சொல்லியிருக்கின்றார். எதையும் செய்யவில்லை. சொல்லாத பல விடயங்களை அவர் செய்துள்ளார்.போருக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களைத் தள்ளி வைத்தாலும், போருக்குப்பின் தந்த வாக்குறுதி எதனையும் அவர் நிறைவேற்றவில்லை என்பதை சிந்திப்பவர்கள் எவருக்கும் நன்றாகப் புரியும்.

கே: போருக்குப் பின்னர் வடக்கின் அரசியல் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: எமது மீனவர்களுக்குரிய வடக்கு மாகாணத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, முல் லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று கொழும்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சிங்கள மயமாக்கும் திட்டம் தீவிரமாகியுள்ளது. அந்தப் பிரதேசத்துக்குத் தமிழ் மீனவர்கள் அண்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களால் தெரிவு செய் யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாதுள்ளது.சுண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி, வளலாய், வடமராட்சி ஆகிய கரை யோரப் பகுதிகளிலும் சிங்கள மீனவர்களைக் குடியேற்றி கடற் பாதுகாப்பைப் பலப்படுத்த அரசு திட்டமிட்டு செயற்படுவதாக கொழுபுத் தகவல்கள் கூறுகின்றன.வடக்கு கிழக்கு கரையோரங்களில் சிங்கள மீனவர்களைக் குடியமர்த்தி தமிழ் மீனவர்களின் கடல் வளத்தைச் சூறையாட அரசு முனைந்துள்ளது. வடக்கு, கிழக்கு கடலில் தமிழ் மீனவர்கள் தொழில் செய்ய உள்ள வளத்தை அபகரிக்கும் திட்டமே இதுவாகும். இந்தக் கடல் வளம் மிக்க கரையோரத்தை தமிழ் மீன வரிடமிருந்து பறித்தெடுக்கத் திட்டமிட்டு அரசு செயற்படுகின்றது. தமிழ் மீனவர் வளம்மிக்க கடலை இழக்கப் போகின்றார்களா? என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கின்றது. இந்த அபாய நிலையை தமிழ் மீனவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

கே: வடக்குக்கு அரச பட்டாளம் படை எடுத்துள்ளது குறித்து...?

ப:இலங்கை அரசுத் தலைவர், பிரபல அமைச்சர் கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படை எடுத்து இங்கு முகாம் இட்டுள்ளார்கள். இவர்களைக் காணவில்லை என்று தெற்குச் சிங்கள மக்கள் தேடுகிறார்கள். இவர்கள் இங்கு படை எடுத்துள்ளமைக்கு ஒரு காரணம் உண்டு. இலங்கை அரசு மீது உலக சமூகம் சாட்டியுள்ள குற்றச்சாட்டில் இருந்து எப்படியாவது விடுபட வேண் டும் என்பதற்காகவே அவர்கள் இங்கு வந்துள்ளனர். குற்ற வழக்கில் அகப்பட்டுள்ள இலங்கை அரசு நீதிமன்றத்தில் பிணை கேட்பது போல, எந்த மக் களுக்கு குற்றம் புரிந்ததோ அந்த மக்களிடம் பிணை கோரி நிற்கிறது. இதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் மேற்கொள்வது குறித்து...?

ப: நான் ஒரு தமிழன். எனது உணர்வின் வெளிப் பாடுதான் இங்கு பிரசாரத்தை மேற்கொள்ள உந்தியது.தமிழ் மக்களுக்கோ, சிங்கள மக்களுக்கோ, முஸ் லிம் மக்களுக்கோ எதிராக வடக்கிலோ தெற்கிலோ அநீதி நிகழ்த்தப்பட்டால், அநீதிக்கு உள்ளாகும் மக் களுக்காக எமது கட்சி குரல்கொடுத்து வெளிப்படுத்தி வந்துள்ளது.

தற்போது தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வின் அதிகாரபூர்வமான அழைப்பை ஏற்றுக் கொண்டு வடக்கே வந்து கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்தி லும் பல கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்றுள்ளேன். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுள்ளேன்.

மக்களை ஐக்கியப்படுத்த என்று மேடைக்கு மேடை குரல் கொடுத்தேன். அரசியல் பேதங்களை மறந்து, இந்தக் காலகட்டத்தில் வரலாற்று முக்கியத்துவமான கட்டத்தில் சகல தமிழ்மக்களும் ஒன்றுபட்டு அரசுக் குப் பாடம் புகட்டவேண்டும் என்று கோரினேன்.மக்கள் ஒன்றுபட்டு தமது தீர்ப்பு என்ன என்பதை அரசுக்கு தெரிவிக்கவேண்டும். வரலாற்றுத் தவறு ஒன்றை பதிவுசெய்யாமல் சகலரும் சிந்தித்துச் செயற் பட வேண்டும்.

கே: தமிழ்க் கூட்டமைப்புடன் தங்கள் கட்சி இணைந்து விட்டதாக வெளிவரும் செய்திகள் குறித்து...?

ப: கூட்டமைப்பின் கூட்டங்களில் பேச வந்தவுடன் தெற்கில் உள்ள சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எல்லாம் இதே கேள்வியைத் தான் என்னிடம் கேட்டன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இதே கேள்வியை என்னிடம் கேட்டது.ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியல்ல. இதற் கான பேச்சுக்களும் இடம்பெறவில்லை. ஆனால் இத்தகைய ஒரு சாத்தியத்தை நிராகரிக்கவும் இல்லை.

தற்சமயம் அரசின் அதிகார அழுத்தங்கள், அரச வளங்கள், இராணுவகெடுபிடிகள் ஆகியவற்றுக்கு உள் ளாக்கபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோருக்குத் துணையாக இருக்கவேண்டும் என்ற உணர்வுடன் இங்கு வந்துள்ளேன்.

கே: இந்தத் தேர்தல் வன்செயல்கள் நிறைந்ததாக இருக்கும் எனக் கருதுகிறீர்களா?

ப: 1981 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் யாழ்.மாவட்டத்தில் நடந்த மாவட்ட சபைத்தேர்தலின் போது யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட தும், நாடாளுமன்ற உறுப்பினர் வெ.யோகேஸ்வரனின் வீடு எரிக்கப்பட்டதும் என் கண்முன் நிழலாடு கின்றன.கொழும்பில் இருந்து கிடைத்த பிரத்தியேக தகவலின் பேரில், வாக்குப் பெட்டிகளை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் செயலகத்துக்கு எடுத்துவரும்போது, வேறொரு இடத்தில் தயார் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகளைக் கொண்டு வந்து மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க கூட்டமைப்பு ஆதரவாளர்கள் வாக்களிப்பு நிலையத்தில் இருந்து செயலகத்துக்கு வாக்குப்பெட்டி எடுத்துவரும்போது கண்காணிக்க வேண்டும்.

கே: கள்ளவாக்குப் போடும் சாத்தியம் உள்ளதா?

ப: நிறையவே உள்ளது. குடாநாட்டில் பெருமளவு வாக்காளர்கள் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளிநாடு சென்ற காரணத்தால் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் 100 வீதவாக் களிப்பு இடம்பெற வேண்டும் என உளமார்ந்து எதிர்பார்க்கிறேன்.பிரதேச, நகர சபை தேர்தலில் தமிழ் மக்கள் கிராமம் கிராமமாக அணி திரண்டு வந்து வாக்களிப்பதன் மூலமே சதித் திட்டங்களை முறியடிக்கலாம்.வாக்குரிமை கொண்ட ஒவ் வொரு குடும்பமும் தமது வாக்குகளை அளிக்கவேண்டும். இல்லையேல் அடுத்த வீட்டு மாமா அந்த வாக்கை களவாடிவிடுவார். அதில் அவதானமாக இருக்க வேண்டும்.காலை 7 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் கூட்டமாகச் சென்று வாக்களித்து விட வேண்டும். ஒரேஒரு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அது வீட்டுச் சின்னமாக இருக்க வேண்டும்.பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபையில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் உதயசூரியனுக்கு அளிக்கும் வாக்கு வீட்டுக்கு அளித்ததாகவேயிருக்கும்.

கே: அரசு வழங்கி வரும் அன்பளிப்பு குறித்து...?

ப: தமிழகத்தில் நடந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பெரிய அளவில் கையூட்டு வழங்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறிந் தோம்.இன்று தமிழக அரசியல் வாதிகளை விஞ்சிய நிலையில் அரசு கையூட்டு வழங்குவதை அவதானிக்க முடிகிறது.யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பின் தங்கிய பிரதேச மக்களுக்கு தாராளமாக அரசு கையூட்டு வழங்குகிறது. கையூட்டை வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குச் சொந்தமான பணம். நீங்கள் செலுத்தும் வரியில் இருந்து வழங்கப்படும் பணம். எனவே கையூட்டை பையில் போட்டு வாக்கை வீட்டுக்குப் போடுங்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46863&category=TamilNews&language=tamil

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.