Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல் நேர்மையான வகையில் இடம்பெறுமென்ற நம்பிக்கை இல்லை -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல் நேர்மையான வகையில் இடம்பெறுமென்ற நம்பிக்கை இல்லை -

21 ஜூலை 2011

நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ள யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல் நேர்மையான வகையில் இடம்பெறுமென்ற நம்பிக்கை தமக்கு இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி யும் அறிவித்திருக்கின்றன.

இன்றையதினம் யாழ் செயலகத்தில் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியான உதவித் தேர்தல் ஆணையாளர் முகமட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவ்வேளையிலேயே ஏற்கனவே இடம்பெற்ற சந்திப்புகளில் வழங்கப்பட்ட எந்தவொரு உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர். நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி ,அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைத்து அரச இயந்திரங்களாலும் தேர்தல் மோசடிகள் இடம்பெறுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். தேர்தல் தொடர்பாக எம்மால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லையெனவும் அவர்கள்; தெரிவித்தனர். குறிப்பாக சுவராட்டிகள், பனர்கள், கட்அவுட்டுகள் கூட இன்றுவரை அகற்றப்படவில்லை. இவை எப்போது அகற்றப்படும் என்ற உறுதிமொழிகளை வழங்கக் கூட தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கூற முடியாமல் போய்விட்டது.

தேர்தல் பணிகளில் தெற்கில் இருந்து வருகை தருகின்ற முந்நூறிற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அவ்வாறானவர்களுள் அண்மையில் அரச நியமனம் பெற்ற நிர்வாகசேவையைச் சேர்ந்த 130 சிங்களவர்களும் உள்ளடங்குவதாக அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இதனை முற்று முழுதாக நிராகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறித்தவர்கள் தேர்தல் வாக்கெண்ணும் பணியில் ஈடுபட தாங்கள் அனுமதிக்க முடியாது எனவும் அவர்களில் தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றபோதிலும் தேர்தல் ஆணையாளர் நிர்வாகசேவை அதிகாரிகளான அவர்கள் வாக்கெண்ணும் பணியில் ஈடுபட வேண்டும் என வாதிட்டார். நீண்ட இழுபறிகளின் பின்னர் தேர்தல் ஆணையாளர் அவர்கள் அந்த பணிகளில் பார்வையாளர்களாக இருப்பார்களே மட்டுமன்றி பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என உறுதி மொழி வழங்கப்பட்டதையடுத்து முடிவு எட்டப்பட்டிருந்தது.

தீவகப் பகுதிகளில் குறிப்பாக நெடுந்தீவுப் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட பின்னர் வாக்குப் பெட்டிகள் ஹெலிகொப்ரர் மூலம் எடுத்துவரப்படும் எனக் கூறப்பட்டபோதும் அதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதே போல் கடல்வழித் தொடர்புடைய தீவுப் பகுதிகளில் கடற்படைப் படகுகளில் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படும் என்றும் அவ்வேளையில் எவ்வாறு துஸ்பிரயோகங்கள் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்த முடியும்; எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற பவ்ரல், தேர்தல் மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் கடற்படைப் படகுகளிலேயோ ஹெலிகளிலேயோ பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோசமும் எழுப்பப்பட்டிருந்தது.

இதனிடையே ஈ.பி.டி.பி. யினரால் வெளியிடப்படுகின்ற மாலைமுரசு எனப்படுகின்ற புதிய அநாமதேயப் பத்திரிகை சர்ச்சைக்குரிய விடயங்களை கடந்த 2 தினங்களாக வெளியிடப்படுகின்றமை தொடர்பாக அங்கு அம்பலப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த மாலை முரசு எங்கு, யாரால் அச்சிடப்படுகின்றது என்ற தகவல்கள் அற்று வெளிவருவதாகவும் அது கூட்டமைப்பினரிடையே பிளவுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் அது மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கும் வகையில் வெளிவருவதாகவும் கூட்டமைப்பினர் குற்றஞ் சாட்டினர்.

இதனிடையே ஈ.பி.டி.பி.யின் நாளிதழான தினமுரசு பத்திரிகையிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி இன்றையதினம் கூட கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததையும் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்ததையும் அவர்கள் அம்பலப்படுத்தினர். இது தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. கூட்டமைப்பினர் கணிசமான முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தபோதும் அரச அதிகாரிகளான அவர்களால் தங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது எனவும் தங்களின் உண்மை யதார்த்தத்தைப் புரிநிதுகொள்ளும்படியும் தாங்கள் வெறுமனே அரச அதிகாரிகள் மட்டும் எனவும் இறுதி நிலையில் தேர்தல் அதிகாரிகள் சரணடையும் நிலையே ஏற்பட்பட்டிருந்தது. ஆனாலும் நீதியான தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கு அனைத்து தரப்பும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டுமென அரச அதிபர் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64451/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.