Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிரியர் லோகேந்திரன் மீது EPDP தவநாதன், விஜயசேகரன் உள்ளிட்ட குழுவினர் சரமாரியாக தாக்கினர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் லோகேந்திரன் மீது EPDP தவநாதன், விஜயசேகரன் உள்ளிட்ட குழுவினர் சரமாரியாக தாக்கினர்:-

23 ஜூலை 2011

நேரில் கண்டவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு வாக்குமூலம்:-

http://youtu.be/KQQSon002Os

இன்று நானும் எனது ஆசிரியர் லோகேந்திரனும் ஏ9 வீதியால் வந்து கொண்டிருந்த போது அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் நகுலேஸ்வரனின் ஆதரவாளர். நான் அவரது மாணவன். நாங்கள் இருவரும் வந்து கொண்டிருந்த போது எங்களுக்குப் பின்னால் பிக்கப் வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் வந்து கொண்டிருந்தன. கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் ரவறடிக்கும் இடையில் உள்ள ஒழுங்கையில் வைத்து பிக்கப் வந்து எங்களுக்கு இடித்ததும் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த கை விலகியதும் பின்னால் வந்த கார் எங்களை இடித்தது. நாங்கள் விழுந்து விட்டோம். விழுந்தவுடன் நான் எழுந்து வேகமாக ஓடிப் போய் விட்டேன். சேரால் ஓட முடியாது போய் விட்டது. அவரை வாகனத்தில் வந்த ஏறத்தாழ 15 பேர் கடுமையாக தாக்கினார்கள். அவர்களில் ஒருவர் ஈபிடிபியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தவநாதன். (1984 – 1987 வரை புளொட் அமைப்பின் முக்கியஸ்த்தர்) மற்றையவர் விஜயசேகரன் என்பவர். அவர் ஈபிடிபி அலுவலகத்தில் இருப்பவர். அவர்கள் இருவரையும் மட்டும்தான் எனக்கு தெரியும். ஏனையவர்களைத் தெரியாது.

எல்லோரும் மிக வேக இறங்கி வந்து லோகேந்திரன் சேருக்கு ஆவேசமாக அடித்தார்கள். நான் ஓடி விட்டதால் சேருக்கு கடுமையாக அடித்தார்கள். பிஸ்டலால் இருவர் சேரின் நெஞ்சில் வைத்து உன்னை சுடுவம் என மிரட்டினார்கள். அவருக்கு மூக்கால் ரத்தம் ஓடத் தொடங்கி விட்டது. அவர் இப்போது வைத்தியசாலையில் இருக்கின்றார். லோகேஸ்வரன் சேரால் ஓட முடியாது போய்pட்டது. அவர் கடைசியில் ஒரு வீட்டுக்குள் புகுந்து அடைக்கலம் தேடிக் கொண்டார். அந்த வீட்டுக்காரர் எல்லாம் பயத்தில் ஓடி விட்டார்கள்.

திரும்பவும் லோகேஸ்வரன் சேரின் மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக நானும் எனது நண்பர் ஒருவரும் சென்ற போது அதே இடத்திலேயே வைத்து எம்மை மீண்டும் விரட்டினார்கள். அந்த இடத்தில் 2 போக்குவரத்து கண்காணிப்பு காவற்துறையினர் வந்தனர். எனினும் அவர்கள் எதுவும் செய்யாமல் எங்களை விரட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் எடுக்கப் போன மோட்டார் சைக்கிளையும் விட்டுவிட்டு வந்து விட்டோம்.

கிளிநொச்சியில் ஈபிடிபியினரின் அராஜகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்மீது கோரத்தாக்குதல்

இன்று (23.07.2011) நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்கள் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற போதிலும் கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் யாழ்போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து மேலதிக விவரம் வருமாறு:

சுந்தரலிங்கம் லோகேஸ்வரன் (31) என்பவர் கிளிநொச்சி ஆனந்தபுரத்தை வதிவிடமாகக் கொண்டவர். கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தில் பணியாற்றிவருபவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்.

இன்றுமாலை 4.30மணியளவில் தமது தேர்தல்கடமைகளை முடித்துவிட்டு வரும்வழியில் ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் விஜயசேகரம் ஆகிய இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதன்போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட இருவரும் சேர்ந்து லோகேஸ்வரனின் தலையில் பிஸ்டலை வைத்து மிரட்டியுள்ளனர். கடுமையான தாக்குதலுக்குள்ளான லோகேஸ்வரனை கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தும் காயம் பலமாக இருப்பதால் உடனடியாக மேலதிகச் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்றுள்ளனர்.

இதனிடையே நேற்றிரவு கருப்புச்சீருடையணிந்த சிலர் கிளிநொச்சி மக்களுக்கு மது போத்தல்களைக் கொடுத்து வெற்றிலைக்கு வாக்குகேட்டுள்ளனர். இன்றுகாலை சீருடையின்றி வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு சாலையோரத்தில் நின்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64545/language/ta-IN/article.aspx

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.