Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் சிறிலங்கா இராணுவ நடவடிக்கை - மூன்று ஆயுதங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் சிறிலங்கா இராணுவ நடவடிக்கை - மூன்று ஆயுதங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டன

[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 10:28 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ]

கிழக்கு மாகாணத்தில்உள்ள ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை முறியடிக்கும் சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கிழக்கில் இயங்கும் குறிப்பிட்ட ஒரு ஆயுதக் கும்பலுக்குச் சொந்தமான மூன்று ஆயுதங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன.

"மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் வங்கி ஒன்றில் இடம்பெற்ற ஆயுதமுனைக் கொள்ளைச் சம்பவத்தை அடுத்து கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழுக்களிடமுள்ள ஆயுதங்களைக் களையப்படும் என கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி உறுதியளித்திருந்தார்.

ஆனால் கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளில் மூன்ற ஆயதங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன" என வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதங்களைத் தேடிக் கைப்பற்றும் சிறிலங்கா இராணுவத்தினரின் முயற்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும், இது வரையில் தம்மால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா லக்பிம செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளபோதிலும், கைப்பற்றப்பட்ட ஆயுத உபகரணங்கள் தொடர்பான எவ்வித தகவல்களையும் இவர் இதன் போது வழங்கவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சிறிலங்கா இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதல் சம்பவமானது மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதன்போது நாங்கள் சில ஆயுதங்களையும் இதனுடன் சம்பந்தப்பட்ட ஆயுதக் குழுவின் முக்கிய உறுப்பினர்களையும் கைதுசெய்துள்ளோம்" என கிழக்கு மாகாணக் கட்டளை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110724104346

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.