Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு தொடர்பான கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வு செய்க!

Featured Replies

கொழும்பு தொடர்பான கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வு செய்க!

புதுடில்லிக்கு இந்திய ஊடகம் கோரிக்கை!!

மூலோபாய நலன்களின் அடிப்படையில் இந்தியாவின் நலன்களுக்கு இலங்கை மிக முக்கியமானதும், புறக்கணிக்கப்பட முடியாததுதான நாடு என்பதால், கொழும்பு தொடர்பான தனது கொள்கை நிலைப்பாட்டினை புதுடில்லி மீளாய்வு செய்வதோடு, எதிர்காலம் தொடர்பான ஒரு பாதை வரைபினையும் வகுத்துக் கொள்ள வேண்டும் என இந்திய ஊடகம் ஒன்று வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமூக - அரசியல் தளங்களில் ஏற்பட்பட்டிருக்கும் இந்த மாற்றத்தினை உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய சூழல் புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ளது. இது இந்திய - இலங்கை உறவில் புதிய விரிசலையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது Dnaindia இணையத்தளத்தில் Bidanda Chengappa என்பவர் எழுதிய கட்டுரையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தது போல கொழும்பு பிளவுபட்டுள்ளது. இராணுவ பலம் மூலம் விடுதலைப் புலிகளை அழித்த மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் முகம் கொடுக்கக்கூடிய அரசியல் மூலோபாயத்தை கையாள முயலவில்லை.

இந்தியாவிற்கு வளைந்து கொடுக்காத அரசியல் நிலைப்பாடுகள் மூலம் கொழும்பு தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்கின்றது.

இந்திய - இலங்கை உறவவை வலுப்படுத்தும் இலக்கினை அடைவதற்கு ஏதுவான நடைமுறைச் சாத்தியம் மிக்க நிகழ்ச்சி நிரலை தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் உருவாக்குவார்களா எனவும் இக்கட்டுரை கேள்வி எழுப்பியுள்ளது. இக்கட்டுரையின் தமிழாக்கத்தினை முழுமையாக இங்கே தருகின்றோம்:

'தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகாரச் செயலாளர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகிய மூவரணியின் அண்மைய இலங்கைப் பயணமானது, இலங்கை - இந்திய உறவில் வெளிப்படுத்தக் கூடியவற்றிலும் பார்க்க ஒளிவுமறைவுக்கான விவகாரங்களே அதிகம் உள்ளமையை உணர்த்துகின்றது. இந்தியாவின் இந்த உயர்மட்ட மூவரணியின் பயணத்தை அடுத்து ஊடகவியலாளர் மாநாட்டினை கொழும்பு ஏற்பாடு செய்யாமையானது, 2011இல் இந்திய - இலங்கை உறவு புதிய விரிசலைச் சந்தித்துள்ளமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இருதரப்பிற்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையீனம் அதிகரித்துள்ளது. 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த உள்நாட்டுப் போர் இராணுவ வெற்றி மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானத்தின் பின்னணியிலேயே இந்திய மூவரணியின் அண்மைய இலங்கை விஜயம் அமைந்தது. அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், தமிழ் இன அடையாளங்களை வலியுறுத்தி - போர்க்குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி - இலங்கை தொடர்பான இந்திய கொள்கை வகுப்பினைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது.

அத்தோடு தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் 1960களில் கொழும்புக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சதீவு மீதான தமிழகத்தின் உரிமை தொடர்பாகவும் இத்தீர்தானங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன அடையாளத்தை வலியுறுத்தி போர்க்குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கும் சட்டப்பேரவைத் தீர்மானம், துரித அதிகாரப் பரவலாக்கத்தையும் புனர்வாழ்வு நடவடிக்கைகளையும் கோருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்குக் கையளிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை இத்தீர்மானத்தில் மேற்கோள் காட்டப்படுவதோடு, அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.

சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றமை, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு, அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டிய அவசியம் ஆகியன குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிங்கள மக்களால் அனுபவிக்கப்படும் உரிமைகளும் வாய்ப்புகளும் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதும் தமிழக சட்டப் பேரவைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமூக - அரசியல் தளங்களில் ஏற்பட்பட்டிருக்கும் இந்த மாற்றத்தினை உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய சூழல் புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ளது. இது இந்திய - இலங்கை உறவில் புதிய விரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தது போலவே கொழும்பு பிளவுபட்டுள்ளது. இராணுவ பலம் மூலம் விடுதலைப் புலிகளை அழித்த மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் முகம் கொடுக்கக்கூடிய அரசியல் மூலோபாயத்தை கையாள்வதற்கு முயலவில்லை. சிறிலங்கா அரச தலைவரின் குடும்பம் பல விடயங்களில் பிளவுபட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக தேசிய அரசியலில் மகிந்தவின் மகனான நாமல் ராஜபக்சவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் நிலையானது, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு முக்கிய பங்கு வகித்த ராஜபக்சவின் ஏனைய சதோதரர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

நாட்டின் தலைவராக தனது சொந்த நலன்களுக்கும் நோக்கங்களுக்குமாக நாடாளுமன்றத்தின் ஏகோபித்த அதிகாரத்தை பயன்படுத்தும் நிலையில் உள்ள மகிந்தவிற்கு தான் நினைத்ததை அடைவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.

ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய அடிப்படைவாதக் கட்சிகள் தற்பொழுதும் சிங்கள இன மேலாதிக்கவாதிகள் மத்தியில் செல்வாக்குடன் உள்ளன. தனது பழைய கொள்கை நிலையின் அடிப்படையில், 2004 - 2006 காலப்பகுதியில் கடும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டினை ஜே.வி.பி கொண்டிருந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் முகவர்களாகக் கருதப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் தலைமை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிமைப்படுத்தப்படுகின்றது.

வடபகுதித் தமிழ் மக்களை வழிநடத்தக் கூடிய அல்லது பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பெரிய தலைமை எதுவும் தற்போது இல்லை. அண்மைய நிலைமைகள் தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா மீது அதிருப்தி கொண்டுள்ளது.

என்ன தவறு நேர்ந்தது? தற்போதைய நிலை ஏன் கவலைக்குரியது? இலங்கை மீதான பிடியை இந்தியா இழந்து விட்டது. கொழும்பின் இந்திய எதிர்ப்பு அரசியல் நிர்வாகத் தலைமை இந்நிலையின் ஒரு பகுதிக்கு பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவிற்கு வளைந்து கொடுக்காத அரசியல் நிலைப்பாடுகள் மூலம் கொழும்பு தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்கின்றது. பொருளாதார கூட்டு இணக்கப்பாடுகளில் கையொப்பமிடுதலில் ஏற்படுத்தப்படும் தாமதங்களை இங்கு எடுத்துக்காட்டாகக் கூற முடியும். இந்தியாவின் நலன்களுக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். மூலோபாய நலன் அடிப்படையில் இது புறக்கணிக்கப்பட முடியாததது. எனவே கொழும்பு தொடர்பான தனது கொள்கை நிலைப்பாட்டினை புதுடில்லி மீளாய்வு செய்வதோடு, எதிர்காலம் தொடர்பான ஒரு பாதை வரைபினையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டின் இறுதியில் இருதரப்பு பயணம் ஒன்று தலைமை அமைச்சரின் நிகழ்ச்சி நிரலுக்குள் இருக்கின்ற அடிப்படையில், இந்திய இலங்கை உறவில் நிலவும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை இந்தியா காண வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் இலக்கினை அடைவதற்குரிய நடைமுறைச் சாத்தியம் மிக்க நிகழ்ச்சி நிரலை உருவாக்குவார்களா?' என இக்கட்டுரை கேள்வி எழுப்பியுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={0FE4C6CB-A2DB-4E29-80A6-967A38989E94}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.