Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வு- உறுதியான நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் - சம்பந்தன்

Featured Replies

தமிழ் மக்களுக்குத் தீர்வு வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் எதிர்வரும் வாரங்கள் முக்கியமானதாக அமையும் சம்பந்தன் .

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தின் இறைமை ஆட்சி,அதிகாரம் தங்களிடமே இருக்க வேண்டும் என்பதை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தெட்டத்தெளிவாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை,குச்சவெளி பிரதேச சபை,சேருவில பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஏனைய வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை மாலை சம்பந்தனின் வாசஸ்தலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும் மாவட்டக் கிளையின் தலைவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.அப்போது உரையாற்றிய சம்பந்தன், "தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் எடுத்துள்ளது. எதிர்வரும் வாரங்கள்,மாதங்களில் இது விடயம் முக்கியமானதாக அமையப்போகிறது' என்று சொன்னார்.

சம்பந்தன் மேலும் கூறியதாவது;

கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரை இறைமைக்கு மதிப்புக்கொடுத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருக்க வேண்டும். நாட்டின் சமமான பிரஜைகளாக பாதுகாப்புடன் கௌரவமாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்பதை தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளனர். எப்போதுமே இல்லாத வகையில் சர்வதேச சமூகம், ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய யூனியன் ஆகியன இலங்கை பல்லின நாடு என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அங்கு தமிழ் மக்கள் சம உரிமை பெற்று வாழ்வதற்கு உரித்துடையவர்கள், அவர்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளன.

பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்த காரணமாகத் தான் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அரசாங்கமும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை மூலம் காணப்படும் தீர்வு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாரென்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டையே எடுக்கப்போகின்றார்கள். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கிறது. விடுதலைப் புலிகள் காலத்தில் சந்தேகம் ஏற்பட்டு மழுங்கடிக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் இன்று தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும்; இல்லாவிடில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படக் கூடும் என்று சர்வதேச சமூகம் எண்ணுகிறது. நீதியும் நியாயமானதுமான அடிப்படை உண்மைகள் வெல்லப்பட வேண்டும்.இதனை சர்வதேச சமூகம் உணர்கின்றது. தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு உருவாகவேண்டும்; உருவாக்கப்பட வேண்டும்.

சம்பந்தன் மேலும் சொன்னதாவது; "30 வருடகால ஆயுதப்போராட்டம் சாதாரண விடயம் அல்ல. பாரதூரமானது. அப்போராட்டம் நாட்டின் ஆட்சியாளருக்கு பெரும் சவாலாக அமைந்தது. அது இன்று முடிவுக்கு வந்து விட்டாலும் அப்போராட்டத்தின் விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய தவிர்க்க முடியாத கட்டத்தில் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தில் தாங்களே எஜமானர்களாக இருக்கவிரும்புகின்றனர். தமிழரின் உரிமைப் போராட்டம் இன்னும் முடியவில்லை. தந்தை செல்வநாயகம் அறவழியில் உரிமைப்போராட்டத்தை ஆரம்பித்தார். முப்பது வருடங்களாக நீடித்தது.தந்தை செல்வா அவசரப்பட்டு தமிழ் ஈழம் கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆரம்பத்தில் பிரிவினையை எதிர்த்த அவர் 1970 பொதுத் தேர்தலில் பிரிவினை கோருபவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். தமிழ் மக்கள் அதனை ஏற்றுப் பிரிவினை கோரிய சுந்தரலிங்கம், நவரத்தினம் ஆகியோரைத் தோற்கடித்தனர். அப்போது சோல்பரி அரசமைப்பு நடைமுறையில் இருந்தது. 1972 இல் புதிய அரசமைப்பு கொண்டு வரப்பட்டது. 1948 இல் கொண்டு வரப்பட்ட அரசமைப்பு இரத்துச் செய்யப்பட்டது. 1948 ஆம் ஆண்டு அரசமைப்பில் சிறுபான்மை இன மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்த ஷரத்துக்கள் 1972 இல் அரசமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பெரும்பான்மை இனத்தின் மொழி,சமயம் ஆகியவற்றுக்கே புதிய அரசமைப்பு அதிமுக்கியத்துவம் அளித்தது. தமிழ் மக்கள் செல்லாக்காசாக்கப்பட்டார்கள். அக் கட்டத்தில் தான் 1976 இல் தந்தை செல்வா தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டார்.

இன்றைய அரசு சர்வதேசக் குற்றச் சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளது. சர்வதேசத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியிருந்தது.கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றி வெற்றியைப் பெற்று தமிழ் மக்களுடைய ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை சர்வதேசத்துக்குக் காட்டுவதற்கு அரசாங்கம் முயற்சித்தது. ஜனாதிபதி வடக்கில் மூன்று நாட்கள் தங்கி நின்று உள்ளூராட்சித் தேர்த்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வடக்கில் ஏன் அவருக்கு அவ்வளவு அக்கறை? தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவா? அல்லது தங்களின் தேவையை, தமிழ் மக்களின் ஆதரவு அரசுக்கு இருக்கிறது என்பதை சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காகவா? சர்வதேச விசாரணையிலிருந்து தப்புவதற்கு சில நாடுகள் உதவும் என்று இலங்கை அரசு எதிர்பார்க்கின்றது.அது பற்றி நான் கருத்துத் தெரிவிப்பதற்கு விரும்பவில்லை.

தமிழரின் உரிமைப் போராட்டம் சாதாரணமானது அல்ல.பல இழப்புக்களை, துன்பங்களை, துயரங்களை ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் சந்தித்து அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 60 வருட கால உரிமைப் போராட்டம் ஒரு தீர்வுகாணும் கட்டாய நிலைக்கு வந்துள்ளது.இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச சமூகம் கேள்விகளை எழுப்பிவரும் இக்கட்டத்தில் தமிழ் மக்கள் வாக்களிப்பு இறைமையைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அமைச்சர் வருகின்றார், அத்திவாரக்கல் நாட்டுகின்றார், பேசுகின்றார்,போகின்றார். மக்கள் வாய் திறக்க முடியாத நிலை. வாழ்வதற்கு வீடில்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. விளையாட்டு அரங்கு நிர்மாணம் ஆரம்பமாகிறது. இந்த நிலை மாறவேண்டும். இது தொடருமானால் மக்கள் அடிமைகளாகவே வாழ நேரிடும்.காணி அத்துமீறல்கள், இராணுவ பொருளாதார அபிவிருத்தி என்று காணிகள் பறிபோகின்றன. பாரம்பரிய கலாசார இடங்கள் மாசுபடுத்தப்படுகின்றன. இவை நிறுத்தப்பட வேண்டும்; முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முந்தி இருந்த நிலை வடக்கு,கிழக்கில் மீண்டும் ஏற்படவேண்டும் என்றார் சம்பந்தன்.

http://www.thinakkural.com/news/all-news/local/8016-2011-07-29-01-27-23.html

Edited by akootha

தமிழ் மக்களுக்குத் தீர்வு வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் எதிர்வரும் வாரங்கள் முக்கியமானதாக அமையும் சம்பந்தன் .

சர்வதேச விசாரணையிலிருந்து தப்புவதற்கு சில நாடுகள் உதவும் என்று இலங்கை அரசு எதிர்பார்க்கின்றது.அது பற்றி நான் கருத்துத் தெரிவிப்பதற்கு விரும்பவில்லை.

சம்பந்தர் மனம் திறந்து பேச மறுக்கலாம்.

ஆனால்:

.கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் போர்குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் தமிழர்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.