Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப உதவியா?.. வெளியான தகவலுக்கு அமெரிக்கா அடியோடு மறுப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கு அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப உதவியா?.. வெளியான தகவலுக்கு அமெரிக்கா அடியோடு மறுப்பு:

[saturday, 2011-08-06 10:55:54]

சிறிலங்காவுக்கு அணுசக்தி தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது. சிறிலங்காவுக்கு அணுசக்தி தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் எத்தகைய உடன்பாட்டிலும் அமெரிக்கா கையெழுத்திடவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குடியியல் செயற்பாடுகளுக்கான அணுசக்தி மற்றும் ஏனைய கதிரியக்கம் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்கா பெற்றுக் கொள்ளவுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

அணுசக்தியின் மூலம் சக்தியைப் பெறுவது மிகவும் மலிவானதாக இருந்தபோதும், அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் பின்னர் இது விவாதத்துக்குரிய விடயமாகியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனினும் இதுபற்றிய கலந்துரையாடலுக்கான கதவுகளை தாம் திறந்தே வைத்திருப்பதாகவும், இதுதொடர்பாக உடன்பாட்டுக்கு வரமுன்னர் ஆழமாகக் கலந்துரையாடப்படும் என்றும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அமெரிக்காவும் சிறிலங்காவும் அணுசக்தி தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று கூறியுள்ளது.

சிறிலங்காவுக்கு அணுசக்தி தொழில்நுட்ப உதவிகள் எதையும் வழங்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை என்றும், ஆபத்தான கதிரியக்க பொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு அமெரிக்கா உதவலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாத இரண்டு கதிரியக்க ஆதாரங்களை அகற்ற உதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவை அணுகியது. அதற்கு அமெரிக்கா உதவ முன்வந்தது. இது ஆபத்தான கதிரியக்க பொருட்களை அப்புறப்படுத்தும் உலகளாவிய திட்டத்தின் ஒரு பகுதியே என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப உதவி பற்றி அமெரிக்கத் துதரகமும் சிறிலங்கா அரசாங்கமும் கலந்துரையாடிய போதும், எந்தவொரு உடன்பாடும் கையெழுதிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=47807&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.