Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே - இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே - இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா !!

அண்மையில் இந்தியப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, "இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவிவந்தது ஒரு கொடூரமான பயங்கரவாதப் பிரசசனைதான்" என்று கூறியிருக்கிறார். உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்வாதராமே இந்தியாவின் தற்போதைய அக்கறை என்று கூறியிருக்கும் கிருஷ்ணா, 13 ஆம் திருத்தச் சடத்தினை கொழும்பு அரசானது முனவைப்பதன் மூலம் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை அடையமுடியும் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார். இதே karuத்தினைத்தான் மகிந்தவின் தம்பியான கோத்தபாயவும் கெட்லையின் டொடே இற்கு வழங்கிய பேட்டியில், "பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் தீர்வுகள் பேச்சுக்கள் என்ற கதைக்கே இடமில்லை" என்றும் கூறியிருக்கிறான். 13 ஆவது திருத்தச் சட்டம் ஏற்கனவே அமுலில் இருப்பதால் இனி எந்தவிதத் தீர்வுக்கும் அவசியமில்லை என்று அவன் மேலும் கூறியிருக்கிறான்.

"அரசியல் தீர்வு என்கிற பேச்சே அர்த்தமற்றது, இலக்கையின் உடன்பாடின்றியே இந்தியாவும் புலிகளும் போட்ட திட்டம்தான் இந்த 13 ஆம் திருத்தச் சட்டம். மாகாணசபை போன்ற இன்னோரென்ன இந்தியாதிகளும் கூட இந்தச் சட்டத்தின் மூலம்தான் கொண்டுவரப்பட்டது. இப்போதிருக்கும் அரசியல் யாப்பானது இரு இனங்களும் எந்தப் பிரச்சனையுமின்றி ஒன்றாக வாழ்வதற்கு போதுமானது. இதைவிட வேறு ஒரு தீர்வென்று தேவைப்படுவதாக நான் நினைக்கவில்லை. புலிகளினுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று புலிகளில்லை, அதனால் அந்தச் சட்டத் திருத்தற்கிறாகான தேவையொன்று இன்றிருப்பதாக நான் நினைக்கவில்லை. இதைவிட நான் என்ன செய்ய முடியும் ? இப்போது கீழ் மட்டத்தில் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அண்மையில்கூட உள்ளூராட்சிச் சபைத்தேர்தல்களை அரசு நடத்தியது. விரைவி மாகாணசபைக்கான தேர்தல்களும் நடத்தப்பட்டு முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் போன்றவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.ஆகவே அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரையில் நாம் தேவைக்கு அதிகமாகவே செய்திருப்பதாக நான் நினைக்கிறேன்.இதைவிட மேலதிகமாக அதிகாரங்களை வழங்குவதற்கான தேவையிருப்பதாக நான் நினைக்கவில்லை".

"அரசியல் தீர்வுபற்றியும், வேறு விடயங்கள் பற்றியும் நாம் இனிமேலும் பேசிக்கொண்டிருக்கத் தேவையில்லை, ஏனென்றால் இந்தப் பயங்கரவாதத்தை நாம் சிறிலங்காவிலிருந்து முற்றாகவே அழித்துவிட்டோம். எங்களுக்கென்று அரசியல் யாப்பொன்று இருக்கிறது , தேவை ஏற்படின், தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும். இப்போது இப்பகுதிகளிலிருந்து மக்கள் பிரதிநிதிகளை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்" என்று புலம்பெயர் தமிழரை புரிந்துணர்வு நடவ்டிக்கையில் ஈடுபடுத்தும் நோக்கில் கூறப்பட்டது.

"அண்மையில் சனல் 4 இல் ஒளிபரப்பப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் பற்றிய ஒளிபரப்பு பற்றி மக்களிடம் பல கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் அதுபற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் தமிழரின் நல்வாழ்வு பற்றி மட்டுமே இப்போது கவலைப்பட வேண்டும். அவர்களின் புனர்வாழ்வும், மீள்கட்டுமானமுமே எமது தலையாய கடமையாக இப்போது இருக்க வேண்டும்" என்று சனல் 4 ஒளிபரப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் நோக்கில் கிருஷ்ணாவின் உரை அமைந்திருந்தது.

கோத்தபாயவின் கருத்துப்படி தமிழர் தமக்கான பாதுக்காப்பை தாமே தீர்மானிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லப்பட்டுள்ளதோடு, தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் பிரசன்னம் காலவரையின்றி தொடரும் என்றும் கூறியிருக்கிறான். " நாம் எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்கப்போவதில்லை, கடந்த 30 ஆண்டுகளில் நாம் அனுபவித்தது போதும். அது எனது கடமை, பாதுகாப்பு ஏற்பாடுகளின் எந்தத் தளர்வையும் நான் ஏற்படுத்தப்போவதில்லை, நாம் எமது பாதுகாப்புக் கட்டமைப்புக்களைத் தொடர்ந்தும் பலப்படுத்துவோம், புலிகள் எனும் அமைப்புடனான ராணுவ மோதல் இல்லாமலிருக்கலாம், ஆனால், புலநாய்வு, கண்கானிப்பு போன்ற நடவடிக்கைகளை நாம் முடுக்கி விட்டிருக்கிறோம், வெளியிடங்களிலிருந்து ஆயுதங்கள் வெடிமருந்துகள் போன்றவை கடத்தப்படுவதைத் தடுக்க பாரியளவிலான கடல்பாதுகாப்பை மேற்கொண்டிருக்கிறோம், அவற்றில் எந்தத் தளர்வும் இருக்கப்போவதில்லை" என்றும் அவன் கூறினான்.

கொழும்பின் அனைத்து அரசியல் நடவடிக்கைக்கும் ஒத்தூதும் தில்லியின் இந்தப் போக்கு, யுத்தக் குற்றவாளிகளான இந்தியாவும் இலங்கையும் ஒன்றையொன்று பாதுகாப்பதை நோகமாகக் கொண்டே அமைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

யுத்தக்குற்றவாளிகளின் பாதுகாப்பு நோக்கியே இருவரும் தொழிற்படுவார்கள் என்பது அண்மையில் இலங்கையிலிருந்து செல்லும் முன்னாள் இந்தியத் தூதர் நிருபமா ராவின் கருத்திலும் தொணித்தது, " தீர்வென்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் இந்தியாவின் அணுசரனையுடன் மட்டுமே வரமுடியும்" என்பதினூடாகத் தெரிகிறது. " நாம் எமது அயலவரைப் பாதுகாக்க வேண்டும், மூன்றாம் நபரின் கருத்தை வைத்துக்கொண்டு எந்தவொரு முடிவிற்கும் நான் சென்றுவிடக் கூடாது" என்றும் அவள் மேலும் கூறினாள்.

இப்போது தில்லியின் அதிகார வர்க்கத்தை "கவனிக்கும்" வேலை தமிழகத்தைச் சேர்ந்த தமிழரிடமே இருக்கிரது, இதை அவர்கள் கட்டாயம் செய்யவேண்டும் என்றும் அந்த அவதானிகள் கருத்து வெளியிட்டனர்.

நன்றி தமிழ்நெட்.

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.