Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வென்றவனுக்கும் தெரியவில்லை தோற்றவனுக்கும் தெரியவில்லை..

Featured Replies

வென்றவனுக்கும் தெரியவில்லை தோற்றவனுக்கும் தெரியவில்லை..

சிறீலங்காவின் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று எதுவும் கிடையாது. இப்போது இருப்பதே போதும், என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கு பொருத்தமான பதில் ஒன்றை மு.கருணாநிதி வழங்கியுள்ளார். ஓர் இனத்தை ஒடுக்கு முறைக்குள் வைத்திருப்பவன் கூறும் கருத்தை, அவனால் ஒடுக்கப்பட்ட ஓர் இனம் கேட்க வேண்டும் என்று கருத முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆக கோத்தபாயவின் கருத்து தமிழருக்கு அவசியமற்ற கருத்தே.

சிங்களத் தலைவர்கள் புலிகள் போர்க்களத்தில் இருந்தபோது ஒரு கருத்தும், அவர்கள் போர்க்களத்தில் இல்லாதபோது இன்னொரு கருத்துமாகக்கூறி நேர்மையற்ற தலைவர்கள் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நேர்மையற்றவர்களுக்கு வாய்ப்பான கருத்துக்களைக் கூறி தொடர் சறுக்கல்களை ஏற்படுத்துகிறார் சம்மந்தர். ஒடுக்குமுறைக்குள்ளாக தமிழினத்தை வைத்திருப்பவனின் கருத்தை சம்மந்தர் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மு. கருணாநிதி ஒரு வார்த்தை கூறியிருக்கலாம்.

வார்த்தையை விட மு. கருணாநிதியிடம் வேறொன்றுமில்லை என்பதும் தெரிந்ததே.

சிங்களத் தலைவர்களைப் போலவே மு. கருணாநிதியும் நம்பிக்கைக்குரிய தலைவர் அல்ல என்பதை இனியும் மறைக்க முடியாது.

தமிழீழம் தர முடியாது ஆனால் மற்றதெல்லாம் தருகிறேன் ஆயுதப்போரை விடுங்கள் என்று புலிகள் உள்ளவரை சிங்களத் தலைவர்கள் மன்றாடியுள்ளார்கள். ஆனால் இன்று தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர் கூட்டமைப்பு அந்த மன்றாட்டத்தை சிங்கள தலைவர்களுக்கு நினைவுபடுத்தவில்லை.

புலிகள் இல்லையானால் தமிழர் வாழ்வில் பாலும் தேனும் ஓடும் என்று ஆசைவார்த்தை காட்டிய மோசமான சிங்களத் தலைவர்களுடன் பேசி ஏதாவது பெறலாம் என்று நினைக்கிறது கூட்டமைப்பு. சம்மந்தர் கூறும் கருத்துக்கள் தமிழரின் தன்மானத்தை சந்தையில் வைத்து விற்குமளவுக்கு கீழிறங்கியுள்ளது. தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆதரவு லைற் போஸ்ற்களை போடுவதற்கல்ல, அவர்கள் உரிமைகளை பெறுவதற்கே.

முற்றுமுழுதான இராணுவ ஆட்சி வடக்குக் கிழக்கில் நடைபெறுகிறது. அதை அகற்ற மக்கள் சக்தியை ஒன்றிணைத்து வீதியில் இறங்காமல் சம்மந்தர் போன்ற வயதான தலைவர்கள் சக்குப்பிடித்த பேச்சுக்களை பேசித்திரிவது கவனிக்கத்தக்கது.

இத்தனை இழப்புக்களுக்கும் பிறகும் இப்படி பேசுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

தேர்தலில் அடைந்த தோல்வியின் வெப்பியாரத்தால் பசில் ராஜபக்ஷ வெறும் மின்சாரக் கம்பங்களை நடுவதற்கான அதிகாரங்களையே கூட்டமைப்பின் வெற்றி அடைந்துள்ளது என்று கூறியுள்ளார். இருந்தாலும் சிங்களவர் தமிழருக்கு எதையும் விட்டுத்தரவில்லை இனியும் தரப்போவதில்லை என்பதை பசில் ராஜபக்ஷவின் பேச்சு தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

தமிழரின் எந்தவொரு தேர்தல் வெற்றியையும் சிங்கள இனவாதம் மதித்தது கிடையாது. இதை இனியும் விளங்காமல் தமிழ் தலைவர்கள் புலம்புதல் கூடாது.

ஏன் வென்றோம் என்பது வென்றவனுக்கு தெரியவில்லை..

ஏன் மக்கள் தங்களைத் தோற்கடித்துள்ளார்கள் என்பது தோற்றவனுக்கு தெரியவில்லை..

ஆனால் இருவரும் உண்மையாக உறங்கவில்லை.. உறங்குவது போல நடிக்கிறார்கள் என்பதே உண்மையாகும்..

இனப்பிரச்சனைக்கு தீர்வு தேட இருவராலும் முடியாது என்பதை மக்கள் உணரும் நாள் என்று வரும்…?

ஏமாறுவதற்கு மக்கள் இருந்தால் ஏமாற்ற சிலர் இருக்கத்தான் செய்வர்..

கருத்துப்படம் : ச.ச.முத்து

கருத்து கட்டுரை : சாம். இருதயராஜ் 11.08.2011

http://www.alaikal.com/news/?p=78781#more-78781

post-1724-0-07525900-1313075098.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.