Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றம் குறித்து பேச அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் அருகதையில்லை -சம்பிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் குறித்து பேச அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் அருகதையில்லை -சம்பிக்க

Posted by சோபிதா on 12/08/2011 in செய்தி

ஈராக்கில் 109,000 பொதுமக்களை கொன்றொழித்த அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் யுத்தக் குற்றம் தொடர்பாகவோ, மனித உரிமைகள் தொடர்பாகவோ குரல் கொடுக்க அருகதையில்லை என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவின் தேவைக்காக அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாது. எமது தேவைக்கேற்றவாறே படிப்படியாக அவசர காலச் சட்டத்தை நீக்குவோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாகவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இராணுவத்தினருக்கு அதிகாரங்களை வழங்கி வீடுகளிலும், முக்கிய இடங்களில் சோதனைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அன்று அவசரகாலச் சட்டம் அவசியமாக தேவைப்பட்டது. இன்று யுத்தம் முடிந்து விட்ட சூழ்நிலையில் இந்தியா சொல்வதால் அவர்களின் தேவைக்காக அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாது. படிப்படியாக அவசரகால சட்டத்தை எமது தேவைக்கேற்ப நீக்கி சாதாரண சட்டத்தை அமுல்படுத்த முடியும்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், நாகலாந்து மாநிலங்களில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளது. இதனை நீக்க வேண்டுமென நாம் இந்தியாவிடம் கூறவில்லை.

வடக்கின் தமிழ் சகோதரர்கள் என கண்ணீர் வடிக்கும் ஜெயலலிதா, மீனவர்கள் பிரச்சினையென வரும்போது தமிழ் மீனவர்கள் எனக் கூறுவதில்லை. இலங்கை மீனவர்கள் என்றே கூறுகின்றார். இதுதான் தமிழ்நாட்டுக்காரர்கள் வடபகுதி தமிழ் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பாகும். இது உண்மையானதல்ல. வெறும் வேஷம்.

செப்டெம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தின்போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை பதிலளிக்க வேண்டுமென அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அறிவித்துள்ளது.

ஐ.நா.வின் போர் விதிகளை நாம் மீறியதில்லை. இதனை இறுதிக்கட்ட யுத்தத்தில் காப்பாற்றப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களிடமிருந்தும் யுத்தத்தில் பங்குபற்றி தற்போது உயிருடன் உள்ள 36000 படையினரிடம் கேட்டு இதனை தெரிந்து கொள்ளலாம். இறுதி கட்ட யுத்தத்தின்போது பொது மக்களை புலிகளே மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினர்.

ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கப் படையினரும் பிரிட்டிஷ் படையினரும் ஒரு இலட்சத்து 9000 பொதுமக்களை கொன்று குவித்தனர். இது தொடர்பில் ஈராக்கில் இருந்த அமெரிக்க படையதிகாரி உத்தியோகபூர்வமாக அறிக்கை கையளித்தள்ளார். த கார்டியன் பத்திரிகையில் இது பிரசுக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவும் பிரிட்டனும் மக்களை கொலை செய்தது நிரூபணமாகியுள்ளது.

அத்தோடு இக் குற்றச்சாட்டை இரு நாடுகளும் நிராகரிக்கவில்லை. இவ்வாறு உத்தியோகபூர்வமாக குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட இவர்கள் எம்மை பதிலளிக்க வேண்டுமென கோர முடியாது. அதற்கான அருகதையும் கிடையாது.

ஈராக்கை ஆக்கிரமித்த இவர்கள் அந்நாட்டின் வரலாற்றுச் சின்னங்களை நகரங்களை அழித்தனர். போர் வழிமுறைகளுக்கு அப்பாற் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்..

நோர்வே சமாதானத்தின் தேவ தூதரின் நாடாக வர்ணிக்கப்படுகின்றது. இன்று அங்கு கிறிஸ்தவ அடிப்படை வாதம் தலைதூக்கியுள்ளது. இதனை இலங்கையில் பரப்ப முயற்சிக்க வேண்டாம். சமாதானத் தூதுவர்கள் இன்று லிபியாவில் மக்களை கொலை செய்வதற்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அமெரிக்கா, பொருளாதாரத் தடை விதித்தால் எமது நாட்டின் சந்தை வர்த்தகம் பாதிக்கப்படும். இது எமது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா மேற்கொள்ளும் அநீதியான செயலாகும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு அன்று புலிகள் உதவினர். அதன் மூலம் அமெரிக்காவில் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இன்று புலிகளை நாம் அழித்துள்ளோம்.

இதனை விட்டு அமெரிக்கா அநீதியான தீர்மானங்களை எடுப்பது எவ்வாறு நியாயமாகும். அதேவேளை டொலரின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவின் கடன் சுமை அதிகரித்து ஐரோப்பாவிலேயே பொருளாதார நெருக்கடி தோன்றியுள்ளது.

எனவே, நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. இருபது வருடங்களுக்கு ன்பாக இப்படிக் கூறியிருந்தால் பயப்படத்தான் வேண்டும். ஆனால் இன்று தெற்காசியாவில் ஸ்திரமான பொருளாதார ஜாம்பவான்கள் தோன்றியுள்ளனர்.

எனவே, புதிய வியூகங்களை ஏற்படுத்தி முன் செல்ல வேண்டும். எந்த அழுத்தம் வந்தாலும் எமது மக்கள் பலத்தால் வெற்றி பெறுவோம் என்றார்.

http://www.eelampress.com/2011/08/33187/

அப்பிடிப்போடு அரிவாளை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.