Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினமன்று கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தமிழக அமைப்பொன்று முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தினமன்று கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தமிழக அமைப்பொன்று முயற்சி

14 ஆகஸ்ட் 2011

lg-share-en.gif

l initial; " />

கச்சத்தீவில் இந்திய தேசிய கொடியை ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என இலங்கைக் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

சுதந்திர தினமான நாளை தமிழகத்தைச் சேர்ந்த சில கடும்போக்குடைய குழுக்கள் இந்திய தேசியக் கொடியை கச்சத்தீவில் ஏற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறெனினும், சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடற் பரப்பிற்குள் எவரையும் பிரவேசிக்க அனுமதிக்கப் போவதில்லை என கடற்படை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எவரேனும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்க முயற்சித்தால் அவர்களை தடுத்து நிறுத்த நடவடி;ககை எடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

கடும்போக்குடைய சில அரசியல்வாதிகளினால் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த விடயத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழமை போன்றே கச்சத்தீவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2ஆம் இணைப்பு - கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடிக்க முயற்சித்த இந்தியர்களை இலங்கைக் கடற்படை தடுப்பு

சர்ச்சைக்குரிய கச்சத்தீவிற்கு அருகாமையில் மீன்பிடிக்க முயற்சி செய்த இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தடுத்துள்ளனர்.

511 படகுகளில் சுமார் இரண்டாயிரம் மீனவர்கள் இவ்வாறு கச்சச்தீவிற்கு அருகாமையில் மீன்பிடிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

பிடிக்கப்பட்ட மீன்களையும் இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பத்து படகுகளில் வந்த கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தை விட்டு உடனடியாக அகன்று செல்லுமாறு தமக்கு உத்தரவிட்டதாக இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் தங்களை திருப்பி அனுப்பியதனால் ஒவ்வொரு படகு உரிமையாளருக்கும் தலா இரண்டாயிரம் இந்திய ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினமன்று கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தமிழக அமைப்பொன்று முயற்சி

13-08-2011 - 12:51

சுதந்திர தினமன்று கச்சத் தீவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அமைப்பொன்று முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்து மக்கள் என்ற கடும்போக்குடைய அமைப்பே இவ்வாறு கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முயற்சிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் குழுவினர்கள் கச்சத்தீவிற்கு செல்வதற்கு படகுகளை வழங்கக் கூடாது என இந்திய மீனவர்களிடம் அந்நாட்டு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

இந்தக் குழுவினருக்கு படகுகளை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறெனினும், இந்த அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி ஜெயலலிதாவின் பிரதான தேர்தல் பிரச்சாரங்களில் ஒன்றாக கச்சத்தீவை மீட்பது உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.