Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை இராணுவ மயப்படுத்தும் முயற்சியே முப்படைகளுக்கான ஜனாதிபதியின் அழைப்பு

Featured Replies

நாட்டை இராணுவ மயப்படுத்தும் முயற்சியே முப்படைகளுக்கான ஜனாதிபதியின் அழைப்பு;

சாடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நாட்டில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுகின்றது என சர்வதேசத்திற்கு காட்டி, அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்து நீடித்து நாட்டை முற்றுமுழுதாக இராணுவமயமாக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.

அத்துடன், அமைதியைப் பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு உள்ள நிலையில், இந்த விடயத்தில் முப்படையினருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 25 மாவட்டங்களிலும் அமைதியை ஏற்படுத்துமாறு முப்படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 06ஆம் திகதி வெளி யிடப்பட்ட 1717/41ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி பொதுமக் கள் பாதுகாப்புப் கட்டளைச் சட்ட, 40ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் இந்தக் கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவித்தலானது நாட்டை இராணுவமயமாக்கலின் பக்கம் இட்டுச்செல்லும் முயற்சி என்றும், அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான தந்திரோபாயம் என்றும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளி யிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் உதயனுக்கு மேலும் கூறியவை வருமாறு:

அமைதியைப் பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸாருக்கே உள்ளது. இது பொலிஸாரை மீறிய பிரச்சினை அல்ல. இதற்கு சிறந்ததோர் உதாரணம்தான் அண்மையில் பிரிட்டனில் ஏற்பட்ட கலவரம்.

பிரிட்டன் கலவரத்தை அடக்கியோர் பொலிஸாரே

பிரிட்டனில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டபோது அதனைக்கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அழைக்கப்படவில்லை. பொலிஸாரே நிலைமையைக் கட்டுப்படுத்தும் நட வடிக்கையில் ஈடுபட்டனர். இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வந்தபோதும் மேலதிக பொலிஸாரை ஈடுபடுத்தி எங்களால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என அந் நாட்டுப் பொலிஸார் தெரிவித் துள்ளனர். அதுமட்டுமின்றி, தண்ணீர் பாய்ச்சி கலவரத்தைக் கட்டுப்படுத்துமாறும் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. ஆனால் அந்தக் நீர்ப்பாய்ச்சியை இராணுவத் தினரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் பொலி ஸார் அதனையும் செய்ய வில்லை.

கிறீஸ் மனிதர் விவகாரம்

இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதே சங்களில் சட்ட ஒழுங்கை அப் பட்டமாக மீறும் அசாதாரண சம்பவங்கள் ஏதும் நடைபெற வில்லை. கிறீஸ் மனிதன் என்ற விவகாரம் பேசப்படுவ தற்கு முன்னரே பிரஸ்தாப வர்த்த மானி அறிவித்தல் பிறப்பிக்கப் பட்டுள்ளது.கிறீஸ் மனிதன் விவகாரத் தைப் பொலிஸாரால் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரமுடி யும். அதை அவர்கள் நிச்சயம் செய்யவேண்டும். அதற்கான பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இதற்கு முப்படை தேவை யில்லை. இந்நிலையில் எதற்கு நாட்டில் அமைதியை ஏற் படுத்த முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனக் கேட்கின்றோம்.

அவசரகாலச் சட்டத்தை நீக்கப் போகின்றோம் எனக் கூறும் இலங்கை அரசு, சர்வ தேசத்திடம் ஓர் முகத்தைக் காட்ட முயற்சிக்கின்றது. நாட் டில் அமைதியில்லை. பதற்ற நிலை தொடர்ந்தும் நிலவுகின் றது போன்ற காரணங்களால் அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்தும் நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறுவதற்கு அரசு முயற்சிக் கின்றது. இவர்களின் கண்ணாம் பூச்சி விளையாட்டைத் தொடர்ந் தும் நம்புவதற்கு சர்வதேசத் தலைவர்கள் முட்டாள்கள் அல் லர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அமைதிகாக்கும் பொறுப்பு பொலிஸாரிடம் உள்ள நிலை யில் அநாவசியமாக முப்படை யினருக்கு அழைப்பு விடுப்பது நாட்டை இராணுவமயப்படுத் தலுக்கான முயற்சியின் முதற் கட்டம் என்றே கூறலாம்.ஆயுதம் ஏந்திய படையின ருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டது என்பதையும் அரசு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.

http://onlineuthayan.com/News_More.php?id=33141491715724964

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.