Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

65 ஆண்டுகால இந்திய சுநந்திரமும் ஈழத் தமிழரின் அவலமான வீழ்ச்சியும்

Featured Replies

நீங்கள் சுதந்திரதினம் கொண்டாட ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரம் கேட்கமாட்டார்கள் என்று 65 வருடங்களாக நினைக்கிறீர்களே இது சரியா..?

தென்னாசியாவில் இந்தியா, சிறீலங்கா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான், சீக்கிம் என்ற ஏழு நாடுகள் இருப்பதாக பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். 65 வருட இந்திய சுதந்திரம் இந்த ஏழு நாடுகளின் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வில் கனிதரும் மரமாக இருந்துள்ளதா இல்லை அவர்களை கண்ணீர்விட வைத்துள்ளதா என்பதுதான் இன்று நம்முன் உள்ள கேள்வி.

இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று தடவைகள் போர் செய்து, அந்த நாட்டுடன் தீராத பகையை வளர்த்துள்ளது. இரண்டு நாடுகளும் ஏட்டிக்கு போட்டி எதிரிகளாக உள்ளன. இதில் இந்தியாவா இல்லை பாகிஸ்தானா யார் குற்றவாளி என்ற தீர்ப்பு நமக்கு வேண்டியதில்லை. இரு நாடுகளும் பகையாளிகள் இது நாடறிந்த உண்மை.

வங்காளதேசத்தை பிரிவினை செய்த இந்தியா அதன் வளர்ச்சியில் காட்டிய அக்கறை எதுவும் இல்லை. பாகிஸ்தானுடன் இணைந்திருந்தபோது கண்ட பொருளாதார வளத்தைக்கூட பிரிந்துபோன வங்காளதேசம் பெறவில்லை. வங்காளத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக செயற்பட்ட முஜிபர் குடும்பமே கொன்று தள்ளப்பட்டதைக்கூட இந்தியா காக்கவில்லை.

நேபாளத்திற்கான எரிபொருள் விநியோகத்தை தடை செய்து அந்த நாட்டையும் தனது காலடிக்குக் கொண்டு வருவதில் இந்தியா வெற்றிபெற்றது. அந்த நாட்டின் மன்னர் குடும்பமே கொன்று தள்ளப்பட்டுவிட்டது. பூட்டான், சீக்கிம் என்பன இன்று முகவரியற்ற நாடுகளாக உள்ளன. இதுதான் தென்னாசியாவின் அவல நிலை.

இந்தியப் படைகள் சிறீலங்காவிற்குள் அமைதிப்படைகள் என்ற போர்வையில் சென்று நடாத்திய அனர்த்தங்கள் சொல்லுந்தரமன்று. சிறீலங்காவில் சிங்கள ஆட்சியாளருடன் தமிழ் இளைஞரை மோத விடுவதற்கான பயிற்சி முகாம்களை இந்தியா அமைத்து தமது நாட்டை போரில் ஆழ்த்தியது என்ற கோபம் சிங்களவருடைய அடி மனதில் இருக்கிறது. இந்தியாவால் தாம் பாதிக்கப்பட்டதாக சிங்கள மக்களின் அடிமனது கருதுகிறது.

இலங்கையின் தமிழ் மக்கள் சார்பில் போரிட்ட விடுதலைப்புலிகளுக்கும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கும் தொடர்பிருப்பதாக இந்தியா கூறுகிறது. ஆகவே அந்த நாட்டு பிரதமரை கொல்லுமளவுக்கு அவர்களுடனான விரோதத்தை இந்தியா வளர்த்துள்ளது என்பதே இதற்கான பதிலாகும். அதே ராஜீவ் காந்தியை சிங்கள கடற்படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் அடித்த நிகழ்வும் அரங்கேறியது. ஆக சிறீலங்காவில் இந்தியா யாருக்கு நண்பன்..?

இரண்டு வருடங்களின் முன் வன்னியில் 1.40.000 தமிழ் மக்கள் சிங்கள இனவாதக் காட்டுமிராண்டிப் போரில் கொல்லப்பட்டபோது அதன் பின்னணியில் இந்தியாவும் இருந்துள்ளமை ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. இது சுதந்திர இந்தியாவுக்கு பெருமை தரும் நிகழ்வென்று எதிர்கால வரலாறு பார்க்குமா..?

கடந்த 65 ஆண்டுகால இந்திய சுதந்திர வரலாற்றில் அயல் நாடுகளுடனான உறவை வளர்ப்பதிலும், அவைகளின் நம்பிக்கையை உயர்த்துவதிலும் இந்திய அயலுறவுக் கொள்கை வெற்றி பெற்றதாக யாராலும் வாதாட முடியாது. ஆசியாவில் வல்லரசான சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான முறுகலும் தொடர்கிறது. ஆக இந்தியா யாருக்கு நண்பன்..?

இந்தியா பிராந்திய வல்லரசாக மாற வேண்டுமானால் முதலில் தென்னாசிய மக்களின் மனங்களில் நல்லதோர் இடத்தைப் பிடிக்க வேண்டும். அதனுடைய வெளிநாட்டு கொள்கைகளில் புதிய மாற்றங்கள் வரவேண்டும். ஆனால் அதனுடைய சிந்தனைக் கட்டமைப்பு அரதப் பழையதாக இருப்பதாக தொல்.திருமாவளவன் உட்பட பல தலைவர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். மற்றவர்களை பகைவர்களாக்குவதில் இந்தியா காட்டும் முனைப்பு நண்பர்களாக்குவதில் காணப்படுவதில்லை என்பதை அதனுடைய சுதந்திர வரலாறு தெளிவாகவே காட்டுகிறது. தனது காலை ஒரு சிறிய புல் தடுத்தாலும் அதை அரைத்து குடிக்க வேண்டும் என்ற சாணாக்கியனின் அர்த்தசாஸ்திரத்தின் அர்த்தமற்ற பகுதிகளை இந்தியா இன்றும் கைவிட்டதாக தெரியவில்லை. காலில் தடக்கிய புற்களாக நினைத்து வன்னியில் இந்தியா வறுத்தெடுத்த மக்களின் ஆத்மாக்களுக்கே தெரியும் அந்த வலி.

பர்மாவில் ஆங்சாங் சுகிக்கு எதிராக இருக்கும் இராணுவ ஜிந்தாவுக்கு இந்தியா ஆதரவு கொடுக்கிறது. சிறீலங்காவில் போர்க்குற்றம் புரிந்த மகிந்த அரசை ஆதரிக்கிறது. ஆனால் தமிழக மீனவர்களையோ, ஈழத் தமிழர்களையோ அது மனிதர்களாக எடைபோட மறுக்கிறது. மத்திய அரசு தமிழகத்தை புறந்தள்ளி நடக்கிறது என்று தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் வடக்கு அரசியல்வாதிகளுக்கும் தெற்கு அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் தமிழர்களான இலங்கையரையும் பாதித்து வருகிறது.

வெறுப்பு அரசியலாலும், காழ்ப்புணர்வு வெளிநாட்டு கொள்கைகளாலும் இந்திய சுதந்திரத்திற்கு பெருமை ஏற்பட முடியாது. இந்தியா சுதந்திரம் பெறாமல் இருந்திருந்தால், சிறீலங்காவும் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. இரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்றிருக்காவிட்டால் ஈழத் தமிழனுக்கு இப்படியொரு இழிவு வந்திருக்காது. காரணம் இவ்விரு நாடுகளும் சுதந்திரம் பெற முன் ஈழத் தமிழருக்கு இதுபோல பாரிய பாதிப்புக்கள் வந்ததில்லை.

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததென்னு

எப்பண்ணா வந்ததென்னு எனக்கும் தெரியல்லேண்ணா..

அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள்தானா அண்ணா..

இந்திய சுதந்திரம் 65 வருடங்களின் பின் அதன் அயல்நாட்டு மக்களான நமது மனதில் இப்படியொரு பாடலையே உருவாக்குகிறது.

இருப்பினும் நமக்கு கிடைக்க விடாமல் தடுத்தாலும் இந்தியா தானாவது 65 வருட சுதந்திரத்தை கொண்டாடுவது பாராட்டுக்குரியது. ஆனால் அந்த சுதந்திரம் சுதந்திரமிழந்த, வேரோடு அழிக்கப்படும் மக்களை காப்பாற்றும் தன்னுடைய கடமையை சரிவர செய்யவில்லை. அதற்காக விரக்தியடைய முடியாது, இந்தியா இனியாவது தனது கொள்கையை மாற்ற வேண்டும். ஈழத்தில் இவ்வளவுபேர் இறந்தது போதும், இந்திய சுதந்திரம் எஞ்சிய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய வேண்டியதி;ல்லை அவர்கள் வாழ வழியைவிட்டாலே போதும்.

இலங்கையில் உள்ள பல தமிழ் தலைவர்கள் இந்தியாவை பகைத்து எதுவும் செய்ய முடியாது என்று கூறி வருகிறார்கள். என்னைப் பகைத்தால் அவர்கள் பூண்டோடு அழிக்கப்படுவார் என்ற உளவியலை இந்தியா எடுப்பதற்கு இந்தக் கோமாளித்தனமான கருத்தே காரணம்.

இந்தியாவை ஏன் பகைக்க வேண்டும்..?

இந்தியா ஏன் நம்மை பூண்டோடு அழிக்க வேண்டும்..?

இரண்டுமே தவறான பார்வைகள்..!

இதுதான் உண்மை :

இந்தியா செய்வது தவறு..!

அது தன் கொள்கையை மாற்ற வேண்டும்..!

காரணம் :

ஈழத் தமிழ் மக்கள் இவ்வளவு பெரிய இழப்பின் பின்னரும் அதனுடன் நட்பாக இருக்க விரும்புகிறார்கள்.!

இந்த விருப்பத்தின் பெருந்தன்மையின் முன்னால் இந்திய புத்தனும், இந்திய வேதங்களும் படுதோல்வியடைந்து வெட்கி நிற்பதை இந்தியா உணர வேண்டும்.

நாம் இரத்தக்கடலிலும், இராணுவ அடக்கு முறையிலும் இருந்து கொண்டு இந்தியாவை பகைத்தால் என்று 'ரீல் '

விடக்கூடாது.. நமது தமிழ் தலைவர்களுடைய பேச்சைக் கேட்டு இந்தியாவின் களிம்பேறிய லோட்டாவை தலையில் வைத்து கரகமாட வேண்டிய தேவை நமக்கில்லை..

நாம் மிக வெளிப்படையாக இந்தியாவுடன் பேச வேண்டும்..!

இந்தியாவின் சுதந்திரத்திற்கு உள்ள பெருமையை அதற்கு சரிவர எடுத்துரைக்க இதுவரை தென்னாசிய நாடுகளில் ஒரு தலைவர்கூட தகுதி பெறவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்..!

தன்னுடைய சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்தவன் ஒருபோதும் மற்றவனின் சுதந்திரத்திற்கு தடை போடமாட்டான்.. என்ற பழமொழியை இந்தியர்களுக்கு கடந்த 65 வருடங்களாக நம்மால் உரைக்க முடியவில்லை.

தென்னாசியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் இந்திய சுதந்திரத்தால் நாம் கண்ணீர் வடிக்கிறோம் என்று கூறுவானாக இருந்தால் அது இந்திய சுதந்திரத்தின் தோல்வியாகும்..

இந்தியா இதைப் புரிய வேண்டும்.

இந்திய சுதந்திரத்தால் இந்தியர்கள் பெருமையடையக் கூடாது அதன் அயல் நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும்..

66 வது சுதந்திரதினம் வர முன்னர் இந்தியா இதைச் செய்ய வேண்டும். அதுவே இந்திய சுதந்திரத்திற்கு பெருமை.

தமிழீழம் மலர்ந்தால் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தனிநாடு கேட்கும் என்கிறீர்கள்..

நீங்கள் சுதந்திரதினம் கொண்டாட ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரம் கேட்கமாட்டார்கள் என்று 65 வருடங்களாக நினைக்கிறீர்களே இது சரியா..

நமது தலைவர்களுக்கு கேட்க வக்கில்லை ஆகவே ஒரு குடிமகனாக இதைக் கேட்கிறேன்..

நிராயுதபாணியான ஈழத்தின் ஏழைக் குடிமகன் ஒருவனின் குரல்..

http://www.alaikal.com/news/?p=79386

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.