Jump to content

திமு.க.வின் அண்ணா அறிவாலயமே ஆக்கிரமிப்பு நிலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. தே.மு.தி.க.


Recommended Posts

ஆளுங்கட்சியிடம் சிக்கி, தி.மு.க. படும்பாடு போதாதென்று, தே.மு.தி.க.வும் தன் பங்குக்கு சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு பணம் வந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கிளப்பி பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது தே.மு.தி.க.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் போது, தே.மு.தி.க.வின் சட்டமன்ற கொறடாவும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.சி.சந்திரகுமார்தான் இந்தப் பிரச்னையைக் கிளப்பினார். கூடவே, ‘அண்ணா அறிவாலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூங்கா இடத்தையும் அரசு மீட்க வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைக்க, ஆடிப்போயிருக்கிறது தி.மு.க.

சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமாரைச் சந்தித்தோம். ‘‘‘கடந்த தி.மு.க. ஆட்சியில் ‘தமிழ் மையம்’ என்றொரு அமைப்பு திடீரென்று உதயமானது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மையம்’ சார்பில் சென்னையில் ‘சங்கமம்’ என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. பாதிரியார் ஜெகத் கஸ்பர் தமிழ் மையத்தின் பொறுப்பாளர்.

இந்த ‘சங்கமம்’ நிகழ்ச்சிக்குப் பெரிய தொழில் நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக கொடுத்திருக்கிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அவைகளுக்கெல்லாம் இந்த தொழில் நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட நன்கொடை கொடுக்க முன் வரவில்லை. சென்னை சங்கமத்துக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி வழங்கியுள்ளார்கள்.

தாங்கள் கொடுக்கும் நன்கொடையால் தங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் கூட செய்ய முடியாத நிறுவனங்களும் சங்கமத்திற்கு பணத்தை கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, தமிழகத்தில் மேற்கு மாவட்டத்தில் ‘அம்மன்’ பெயரில் ஒரு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் கனிமொழியின் ‘சென் னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த சர்க்கரை ஆலை எந்த விதத்திலும் விளம்பரம் செய்யவில்லை. அப்படியானால் எந்த அடிப்படையில் ஐந்து கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தது?

தி.மு.க. ஆட்சி மாறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னால்தான் அந்த சர்க்கரை ஆலை வடமாவட்டத்தில் இன்னொரு ஆலைக்கு லைசென்ஸ் பெற்றுள்ளது. அதாவது லஞ்சத்தை நன்கொடையாக கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவு தான். அந்த சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கரும்புக்கு பணம் தாராமல் கோடிக்கணக்கான ரூபாய் நி லுவையில் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பல நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் காரியம் சாதித்துக் கொள்ள ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியைப் பயன்படுத்தி நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, 2 ஜி வழக்கில் சி.பி.ஐ. தமிழ்மையத்தில் சோதனை நடத்தியுள்ளது. இந்த மையத்துடன் இணைந்து தான் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்தின. அப்படியானால், ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு 2 ஜி பணம் செலவழிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு விடை தெரிந்தாக வேண்டும்.

‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்காக ‘தமிழ்மையம்’ அமைப்புக்கு யார், யார் மூலமாக நன்கொடை பெறப்பட்டது, அதனால் அந்த நிறுவனங்கள் அடைந்த லாபம் என்ன, நன்கொடைகள் பெறப்பட்டதா, மிரட்டி வாங்கப்பட்டதா? என்பதை விசாரித்து கண்டறிய வேண்டும் என்று தான் சட்டமன்றத்தில் பேசினேன்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நில அபகரிப்பு வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு அம்சம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செய்த நில அபகரிப்புகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன.

ஆனால், திமு.க.வின் தலைமை அலுவலகமான அறிவாலயமே ஆக்கிரமிப்பு நிலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த போது அறிவாலயம் கட்ட போனால் போகிறது என்று அனுமதி கொடுத்தார். அப்போது அறிவாலயத்தையொட்டி ஒரு பெட்ரோல் பங்க் இருந்தது. அப்போதெல்லாம் எங்கள் கேப்டன் பிறந்தநாள் நிகழ்ச்சி அறிவாலயம் எதிர்ப்புறத்தில் இருக்கும் காமராஜர் அரங்கில் நடைபெறும்.

அப்போது தமிழகத்திலிருந்து கேப்டன் ரசிகர்கள் அங்கே கூடுவார்கள். திரும்பி ஊருக்குப் போகும்போது தாங்கள் வந்த வாகனத்திற்கு டீசல் அடிக்க அந்த பெட்ரோல் பங்க்கில் வரிசையாக நின்று டீசல் போட்டுக்கொண்டு போவோம். ஆனால், புரட்சித்தலைவர் மறைவுக்குப் பின்னர் அந்த பெட்ரோல் பங்க் மாயமாக மறைந்து விட்டது. அந்த இடத்தில் அறிவாலயம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. பொதுவாக சென்னை பெரு நகரங்களில் பெரிய அளவிலான ஒரு கட்டடம் கட்டவேண்டும் என்றால், அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் அரசு பொது பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட பகுதி நிலத்தை ஒதுக்கியிருக்க வேண்டும்.

ஆனால், அறிவாலயத்தைப் பொறுத்தவரை பெட்ரோல் பங்க் இருந்த இடத்தை ஆக்கிரமித்து உள்ளே பூங்கா அமைத்துக் கொண்டார்கள். இதற்காக சில ஆவணங்கள் திருத்தப்பட்டிருக்குமோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த பூங்காவை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தி.மு.க.வே ஆக்கிரமித்து வைத்துக் கொண்டுள்ளது. அந்த பூங்கா இடத்தை மீட்க வேண்டும் என்றும் சட்டசபையில் கோரிக்கை வைத்து பேசினேன்’’ என்று சொல்லி முடித்தார் சந்திரகுமார்.

Thanks to kumudam reporter.

To see the picture of this news

http://www.thedipaar.com/news/news.php?id=32650

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.