Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத்தில் இருந்து புலத்து உணர்வாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு போராளியின் உள்ளக் குமுறல்!!

Featured Replies

தாயகத்தில் இருந்து புலத்து உணர்வாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு போராளியின் உள்ளக் குமுறல்!!

Friday, 19.08.2011, 09:44am (GMT)

<img border="0" hspace="5" style="line-height: 17px; " vspace="5" />

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களே எங்கே போனது உங்கள் இன உணர்வுகள்?

எம்தமிழ் உறவுகள் மூவரும் இன்றோ நாளையோ தூக்கில் ஏற்றப்படப் போகிறார்கள் என்ற ஆதங்கத்தில் தமிழகமே போர்க்கோலம் பூண்டுள்ள இன்றைய சூழலில். தமிழகத்தில் இருக்கக் கூடிய அரசியல்க் கட்சிகளும், மனித நேய இயக்கங்களும், தங்களால் முடிந்தவரை பல போராட்டங்களை நடத்தியும், பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடத்தியும், தொடர் போராட்டங்களை அறிவித்தும் மக்களை ஒன்று திரட்டி மரணதண்டைக்கு எதிராகவும். அதே வேளை திரு. பேரறிவாளன், திரு. முருகன், திரு. சாந்தன் அவர்களின் விடுதலை பெற்றுத்தரக் கூடிய ஒரு போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் முதல் அதனை ஆதரித்தும் பலவழிகளில் உதவியும் வந்துள்ளீர்கள் அதன் காரணமாக பலவிதமான துன்பங்களையும் அனுபவித்துள்ளீர்கள்அவை அனைத்தும் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவை. உங்களுடைய கவிவரிகள் எமது விடுதலைப் பாதையில் மிகப்பெரும் தைரியத்தையும் மனம் தளராத போராட்ட உணர்ச்சியையும் ஏற்படுத்தியது. இன்றும் உங்கள் கவி வரிகளும் அந்தக்கவி வரிகளை அழகுபடுத்தி எழிச்சியும் புரட்ச்சியும் இன உணர்வுடன் கலந்து எங்களுக்கு உணர்வு ஊட்டிய அப்பாவின் (செல்லப்பா அவர்களின்) குரலில் அமைந்த பாடல்களும் இன்றும் நாம் இருக்கும் பகுதிகளில் அடக்குமுறை வாழ்க்கையிலும் தளராத நம்பிக்கையுடன் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஐயா! உங்கள் கண்முன்னே இருபத்தி ஒரு ஆண்டுகள் கல்லறைகளுக்குள் வாழ்ந்த அந்த உத்தமர்களின் உயிர்காக்கவும் அவர்களை விடுவிக்கவும் மரண தண்டனைக்கு எதிராகவும். அதனைத் தடுத்து நிறுத்தவும் போராடாமல். உங்கள் குரலால் தமிழகத்தில் உள்ள பலகோடி மக்களை ஒன்றிணைக்கப் பாடுபடாமல். அதற்காக குரல் கொடுக்காமல் வேறு ஒரு திசையில் நீங்கள் பயணிப்பது எமக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது, எம்மை வேதனை அடைய வைத்துள்ளது.

பிரித்தானியாவில் நடைபெறும் விளையாட்டு விழா ஒன்றுக்கு மக்களை அணிதிரண்டு வருமாறு நீங்கள் வழங்கிய குரல் பதிவைக் கேட்டு நாம் அதிர்ந்து போனோம். உண்மையில் நாம் இன்றைய சூழலில் இதனை எதிபார்க்கவில்லை. இது வரை காலமும் இல்லாத ஒரு நடைமுறை இப்படி ஒரு விளையாட்டு விழாவிற்கு எமது கட்டமைப்பில் சம்மந்தப்பட்டவர்களும் சரி, உங்கள் போன்ற உணர்வாளர்களும் சரி, விளையாட்டு விழாவிற்கு வரும்படி குரல் பதிவிலும் சரி, அறிக்கைகளாகவும் சரி, அழைப்பு விடுவது இதுதான் முதல் தடவை. இதில் இருந்தே புரிகிறது இவர்கள் தவறான முறையில் எதோ ஒரு பயத்தின் காரணமாகவே இப்படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

<img border="0" hspace="5" style="line-height: 17px; " vspace="5" />

இன்று வரை தமிழகத்திலும் சரி, புலம்பெயர்ந்த தேசங்களிலும் சரி, தமிழர் அமைப்புக்களால், அரசியல் கட்சிகளால், மனித நேய இயக்கங்களால், முன்னெடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான போராட்டங்களுக்கு குரல் கொடுக்கத் தவறிய நீங்கள் இந்த விளையாட்டு விழாவிற்கு மட்டும் பாடுபடுவதன் நோக்கம் என்ன? என்பதை எமக்கும் எமது மக்களுக்கும் தெளிவுபடுத்த முடியுமா?

புலம்பெயர் தேசத்தில் மக்களை ஒன்றுதிரட்டி ஓர் அணியில் நிறுத்தி போராட்டம் நடத்தவேண்டிய தேவைகள் ஏராளம் நிறைந்து போயுள்ள இன்றையகால கட்டத்தில். அவற்றைப் புறம் தள்ளி விட்டு எமது கட்டமைப்பின் பெயரால் எமது கட்டமைப்பைச் சிதறடிக்க முன்னெடுக்கப்படும் ஒரு விளையாட்டு நிகழ்வுக்கு நீங்கள் குரல் கொடுத்திருப்பது மாவீரர்களையும் போராளிகளையும் எம் தலைவரையும் நேசிக்கும் நீங்கள் செய்யக்கூடிய செயல் இல்லை. ஒருசில சுயநல வாதிகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் அவர்களுடன் இணைந்து நீங்களும் நிதிசேகரிக்கும் முயற்சிகளுக்கு துணை போகிறீர்கள் என நினைக்கும் போது உங்கள் பிள்ளைகளாகிய எங்களின் தாயகக் கனவுகள் சிதறடிக்கப்படுவதாகவே உணர்கின்றோம்!

தேசியத் தலைவரின் வழிகாட்டலை ஏற்று! மாவீரர்களின் தியாகத்தில் வளர்ந்த எமது விடுதலைப் போராட்டம் அந்நிய சக்திகளின் பிடிக்கு அகப்பட்டு அளிக்கப்படுவதை உணர்வுள்ள எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்! அதை எதிர்த்து நின்று போராடி இந்த தீய சக்திகளை மக்கள் முன் அடையாள படுத்தும் போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்! யார் உண்மையான செயற்பாட்டாளர்கள் என்பதை.

குழப்பங்களைத் தவிர்த்து மக்களை ஓர் அணியில் இணைத்து எமக்காய் மரணித்த மாவீரர்களின் இலச்சியத்தை அடைவதற்காக ஒன்றிணைந்து போராட வேண்டியது இன்றைய தேவை. அதற்காக மட்டுமே தமிழர் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டுமே தவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதர்க்காக அல்ல என்பதையும் இன மான உணர்வுள்ள அனைவரும் புரிந்து கொண்டு அதன் வழியில் செயற்படவும் வேண்டும் என்பதே எமது அவாவாக உள்ளது.

சிந்தித்துப் பாருங்கள்!

<img border="0" hspace="5" style="line-height: 17px; " vspace="5" />

இன்று எம் கண்முன்னே தமிழர் தாயகத்தில் உறவை இழந்து, உடல் உறுப்புக்களை இழந்து, பார்வை இழந்து, குண்டுபட்டு பேச்சிழந்து, காதிருந்தும் அடுத்தவர் பேசுவதை கேட்க்க முடியாமல், அனைத்தையும் விட நிம்மதியிழந்து, சீரான உணவு இன்றித் தினம் தினம் தவிக்கும் எம் உறவுகளையும் அவர்கள் படு துன்பங்களையும் நீங்கள் அறிவீர்களா? அல்லது அவர்களின் வேதனைதான் உங்களுக்குப் புரியுமா? அடக்கப்பட்டு இருந்தாலும் அசையாத நம்பிக்கையுடன் அண்ணன் வாருவார்! அண்ணன் வளர்த்த பிள்ளைகள் நிச்சயம் வருவாகள்! என்று தமக்குள்ள தாமே பேசிக்கொண்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் இங்கு எம் ஊனப்பட்ட உறவுகள்!

இன்று வரை இந்த மக்களுக்கு உதவிகளை வழங்குவது புலம்பெயர் தேசத்தில் உள்ள கோயில்களும், கிராம முன்னேற்றச் சங்கங்களும், தனிநபர்களும், சில தொண்டர் அமைப்புக்களும் தான் தங்களால் முடிந்த வரை உதவிகளை வழங்குகின்றனர் அதுவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைப்பதில்லை, இவர்கள் செய்வதை தாங்கள் தான் செய்கிறோம் என்று பொய் கூறிகொண்டு எமது மக்களையும் எம்மையும் நடுத் தெருவில் விட்டவர்களுக்காக ஐயா காசிஆனந்தன் அவர்கள் துணைபோவது எம்மை மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

உலக நாடுகளில் இன்று வரை தேசிய செயற்பாட்டாளர்களாக இருக்கும் நீங்கள் ஒவ்வெருவரும் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் இந்த மக்களின் நிலை பற்றி நீங்கள் சிந்திப்பது உண்டா? இந்த மக்களுக்கு இதுவரை உருப்படியாக ஏதாவது செய்தது உண்டா? நீங்கள் சிந்திப்பதும் உங்கள் இரத்தத்தில் உறைந்திருப்பதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதி வளங்கள் அனைத்தையும் எப்படி சுருட்டிக்கொள்ளலாம் என்பதும், அந்த சொத்துக்களை எப்படி உங்கள் பிள்ளைகளின் பெயரில் மாத்துவது என்பதும், எமது கட்டமைப்பிர்க்கே உரிய வர்த்தக நிலையங்களையும் கையகப்படுத்தி செல்வந்தர் வாழ்க்கை வாழ்வதற்கே முயற்ச்சிப்பதும் எமக்குத் தெரியாதது இல்லை.

எந்த செயற்பாடுகளாக இருந்தாலும் நன்கு விசாரித்து உண்மைநிலையினை அறிந்துகொள்ள முயற்ச்சி செய்யுங்கள். அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் என்ற நமிக்கையில் யாருக்குப்பின்னும் செல்லவேண்டாம். யார் உண்மையானவர்கள், யார் பிழையானவர்கள், என்பதில் நீங்கள் சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுங்கள். நடந்து முடிந்த அழிவுகளை மீள் பார்வை செய்யுங்கள். அலசி ஆராயுங்கள் உண்மைகளைக் கண்டறியுங்கள்! இதுவே நான் உங்களிடம் முன்வைக்கும் வேண்டுகோள்!

புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டு வந்த எமது முன்னாள் செயற்பாட்டாளர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏதாவது உருப்படியாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்து இறுதியில் நாம் ஏமாற்றப்பட்டோம் எமது விடுதலைக்கான போராட்டம் அளிக்கப்படும் நிலையில் இருந்த போதும் அவர்களின் வாக்குறுதிகள் அதிகரித்ததே தவிர தங்களால் முடியவில்லை முடியாது என்ற ஒரு சிறிய வார்த்தையினைக் கூட அவர்களால் எமக்கு தரப்படவில்லை. இறுதியில் அனைவரையும் வெள்ளைக் கொடிகளுடன் சென்று தஞ்சமடையும் படி கூறி எமது தளபதிகளையும் போராளிகளையும் சிங்களத்தின் கைகளில் சிக்க வைத்தவர்களும் இந்த புலம்பெயர்ந்த முன்னாள் செயற்பாட்டாளர்கள் தானே என்பதை உங்களுக்கு நாம் எப்படி புரியவைப்பது!

இதுவரை காலமும் வழக்கத்தில் இல்லாத ஒரு நடைமுறையினை புலம்பெயர் தேசத்தில் நாம் சந்தித்துள்ளோம் 2009 மே19 இன் பின்னர் மிகப்பெரும் பின்னடைவை எமது கட்டமைப்பு சந்தித்துள்ளது புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டு வந்த எமது அமைப்பைச் சார்ந்த ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகள் எமது அமைப்பின் இருப்பையே கேள்விக்குறி ஆக்கியுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அதன்விளைவாக இறுதிவரை களத்தில் நின்று போராடி இறுதியில் ஐநா சபையின் செயற்பாட்டாளர்களின் வாக்குறுதிகளை நம்பி காயமடைந்தும் பட்டினியாலும் தவித்த எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாப்பதற்காகவும் இராணுவத்திவருடன் பேசுவதற்கு வெள்ளைக் கொடிகளுடன் சென்ற எமது சமாதானச் செயலகம், அரசியல் துறை, தாக்குதல் படைத் துறை சார்ந்த முக்கிய பொறுப்பாளர்களை இரட்டை முள்ளி வாய்க்காலில் வைத்து கண்முடித்தனமாக சித்திரவதை செய்து படுகொளைசெய்தது சிங்களம். காயமடைந்த போராளிகளும் அவர்களுடன் துணையாகச் சென்ற போராளிகளும் இராணுவத்தால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

<img border="0" hspace="5" style="line-height: 17px; " vspace="5" />

முக்கியமானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் அந்தப் பகுதியிலும் வேறு பகுதிகளிலும் வைத்து சித்திரவதையின் பின்னர் கண்கள் கைகள் கட்டப்பட்டு சுட்டும் அடித்தும் கொல்லப்பட்டனர். அந்தக் கோரக் காட்சிகள் தான் இப்பொழுது புலம் பெயர் தேசங்களில் கொலைக்களமாக காட்டப்படுகிறது இது போல் காட்சிப்படுத்தப் படாதவை எங்கள் கண்களிலும் உறைந்துபோன உள்ளத்திலும் ஏராளம் எம்மைத் தினமும் கொலைசெய்கிறது. எமது கைகளிலும் எமது தோள்களிலும் எமது மடியிலும் உயிர் கொடுத்த போராளிகள் ஏராளம் வெளியில் தெரியாத விடிவெள்ளிகள் பல ஆயிரம் அந்த வலிகளை யாருக்கும் சொல்லி இலகுவாகப் புரியவைக்க முடியாது! அவை எமக்கே உரிய வலிகள் அந்த வழிகளே எம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் உந்துசக்தியாக உள்ளது!

இராணுவத்திடம் தஞ்சமடைந்து முள்க்கம்பி வெளிகளுக்குள் அடைக்கப்பட்டவர்களும் அங்கிருந்து தப்பியவர்களும், தஞ்சமடையாமல் காடுகளுக்கு ஒளிந்திருந்தும் எமது இயக்க மரபுகளுக்கு அமைவாக காட்டுப்பாதைகள் வழியாக நகர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று எமது கட்டமைப்பின் தேவைகளை ஒவ்வொன்றாக நிவர்த்திசெய்து இன்று புலம்பெயர் தேசத்தில் எமது கட்டமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பணிகளில் எமது அமைப்பின் அனைத்து கட்டமைப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் தலைமைச் செயலகத்தின் அங்கத்தவர்கள்.

இவர்களின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து அவர்களை துரோகிகள் என்ற சொற்பதத்தில் குறிப்பிட்டு மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாகவும். எமது கட்டமைப்பை இல்லாது ஒழிக்கவும் ஒரு சில முன்னாள் செயற்பாட்டாளர்கள் முயற்சிகளை மேற் கொண்டுள்ளதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இவர்களின் தடைகளை இல்லாதொழித்து உண்மை நிலை புரியாமல் இந்தக் குழப்பவாதிகளுடன் இணைந்து நிற்கும் தலைவரையும் மாவீரர்களையும் நேசிக்கும் அனைத்து செயற்பாட்டாளர்களையும் ஒன்று சேர்த்து தமிழீழ தேசத்தின் விடியலுக்கான தேசியச் செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

சமாதான காலத்தில் புலம்பெயர்ந்த தேசங்களில் செயற்பாட்டாளர்கள் என்ற போர்வையில் தாயகம் வந்தவர்களை. ஓமந்தை எல்லையில் வைத்து பெரும் வர வேற்பளித்து எமது அமைப்பின் செலவில் ஊர் ஊராக வலம்வந்து. போராளிகளையும், தளபதிகளையும், தலைவரையும், சந்திக்கவைத்து அனைத்து உதவிகளையும் செய்த போராளிகளை இன்று இவர்களுக்குத் தெரியாதாம். நன்றிமறந்த நயவஞ்சக மனிதர்கள். இவர்களின் பின்னால் தான் நாங்கள் செல்ல வேண்டுமாம் இவர்கள்தான் குப்பியைத் தொடப் பயந்தவர்கள் தான் எம்மை (இயக்கத்தை)வழிநடத்தப் போகிறார்களாம்.

இந்த அழிவுகளில் இருந்த தப்பி பலநாடுகளுக்கும் பலரின் உதவிகளுடன் தமது உறவினர்களின் உதவியுடனும் புலம்பெயர்ந்த தேசங்களுக்கு வந்த தலைவன் வளர்த்த பிள்ளைகளை இந்த முன்னாள் செயற்பாட்டாளர்களின் சுயநலவாதத் தலைமைகள் என்ன செய்தார்கள்? அரவனைத்தார்களா? ஆதரவளித்தார்களா? அடைக்கலம் கொடுத்தார்களா? அல்லது ஏதாவது ஒரு வழியில் எமது போராளிகளுக்கு உதவினார்களா? எதுவும் இல்லை போராளிகளுக்கு ஆதரவாக இருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியவர்கள் எமது போராளிகளுக்கு செய்த நன்றிக்கடன் என்ன? அவர்களைத் துரோகிகள் என முத்திரை குத்தினார்கள்! பின்னர் அவர்கள் கேட்ட கேள்விகள் எம்மை அதிர்ச்சியடைய வைத்தது. எமது கால்களால் எமது தலைகளை நாமே உதைக்க வேண்டும் போல் இருந்தது இவர்கள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள்!

இந்த புலம்பெயர் தேசத்தின் செயற்பாட்டாளர்கள் போராளிகளைக் கேட்ட கேள்விகளை இங்கே இணைக்கின்றேன்!

1.யார் நீங்கள்?

2.எதற்காக இங்கு வந்தீர்கள்?

3.உங்களை எங்களால் நம்பமுடியாது உண்மையில் நீங்கள் போராளிகள் தானா?

4.இறுதியில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை?

5.இராணுவத்திடம் ஏன் தஞ்சமடையவில்லை?

6.எப்படித் தப்பினீர்கள்? அல்லது இராணுவத்தின் பிடியிலிருந்து உங்களை வெளியில் எடுத்தவர்கள் யார்?

7.எந்த விமானத்தளத்தின் ஊடாக பயனித்தீர்கள்?

8.இங்கே வந்ததன் நோக்கம் என்ன?

9.எல்லாம் முடிந்தபிறகு இங்கு என்ன செய்யப்போகிறீர்கள்?

10.இங்கே (பெயர் தேசத்தில்) எமது தொடர்பகங்கள் அனைத்தும் தற்காலிகமாக கலைக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பொழுது எம்மால் எதுவும் செய்யமுடியாது! எனவும் தலைவர் வந்ததன் பின்னர்தான் எமது செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும். அதுவரை எமது செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப் பட்டுள்ளது. நீங்களும் செயற்ப்பட முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்!

<img border="0" hspace="5" style="line-height: 17px; " vspace="5" />

இவர்களின் இந்த நிலைப்பாட்டிற்குப் பின்னர் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் நேரடி வழிகாட்டலில் புலம்பெயர்ந்த தேசத்தில் செயற்பட்டு வந்த எமது அமைப்பின் அனைத்து கட்டமைப்புக்களையும், தாயகத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய போராளிகளையும் ஒன்றிணைத்து எமது அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக கலந்தாலோசித்து அனைத்து நாடுகளிலும் எமது அமைப்பின் செயற்பாடுகள் நேர்த்தியான முறையில் அனைவரையும் ஒன்றிணைத்து செயற்பட ஆரம்பித்துள்ளது எமது கட்டமைப்பு. இதனைக் குழப்புவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் சக்தியை இல்லது ஒழிப்பதற்கு சிலர் முயற்ச்சிகளை எடுத்துள்ளதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளோம்.

எமக்கு எதிரான தீய சக்திகளை மக்களுக்கு அடையாளம் காட்டி மலரப்போகும் தமிழீழ மண்ணில் வித்துக்களாக விதைக்கப்பட்ட மாவீரர்களின் இலச்சியக் கனவை அடைந்தே தீருவோம் அதுவரை எமது செயற்பாடுகளில் இருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை!

மாவீரர்களின் தியாகங்களை தலைவரின் உறுதியையும் நெஞ்சில் சுமந்தவர்கள் அனைவரும் ஒன்றுபடுங்கள்! ஒன்றுபடுங்கள்! உங்களுக்காய் நாம் காத்திருக்கிறோம்!

தலைவர் அவர் வாழும் காலம் இக்காலம்! தவறாது தவறாது தலைதூக்கும் ஈழம்!

மலை என வருவார் எம் தலைவர் நீ காண்பாய்! மறவனே மறவனே எழுவெடி குண்டாய்!

பிரபாகரனைப் பின்பற்று! பிறந்த உன் மண்மேல் வையாடா பற்று! வையாடா பற்று!

<img border="0" hspace="5" style="line-height: 17px; " vspace="5" />

<img border="0" hspace="5" style="line-height: 17px; " vspace="5" />

நன்றி.

!புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!

மலரப்போகும் ஈழமண்ணில் இருந்து-

போராளி- செம்மலை (18.08.2011)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.